TNPSC Current Affairs in Tamil November 2017-1

இந்தியா

 • “இந்தி சத்தியாகிரக” போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அவசரநிலை காலங்களில் சிறையில் வாடிய, ஹிந்தி மொழி போராளிகளிக்கு 1௦௦௦௦ ரூபாய், ஓய்வூதியமாக வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
 • தனியார் துறையை சேர்ந்த எவரும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர ஏதுவாக, ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம், சேரும் நபர்களின் அதிகபட்ச வயதை, 6௦ல் இருந்து 65 –ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
 • வருகின்ற பிப்ரவரி மாதத்தில், மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையும், கோவா மாநில அரசும் இணைந்து, “2-வது நோபல் பரிசு தொடர் – இந்தியா” (2ND NOBEL PRIZE SERIES – INDIA) நிகழ்ச்சியை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளன. பொது அறிவு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், கட்டமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய நோபல் பரிசு பெற்றவர்கள், போன்றோரை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாடு வைத்தல் இந்நிகழ்ச்சியாகும். இதன் முதல் நிகழ்ச்சி, குஜராத்தில் நடைபெற்றது.
 • “எரிபொருள் சேமிப்பு பாதுகாப்பு” விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “தேசிய சைக்கிள் சாம்பியன்சிப்” (NATIONAL CYCLING CHAMPIONSHIP) போட்டிகள் புது தில்லியில் நடைபெற்றன. நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
 • பஞ்சாப் மானில் அரசு, அம்மாநிலத்தில் இளைஞர்களிடம் உள்ள போதைப் பழக்கத்தை ஒழிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் இயக்கத்தை விரைவில் துவக்க உள்ளது.
 • புகழ்பெற்ற ஓடிஸா மாநிலத்தின், “பாலி ஜாத்ரா” திருவிழா, மகாநாதி ஆற்றங்கரையில் உள்ள கட்டாக் நகரில் துவங்கியது. இவ்விழா ஒருவாரத்திற்கு நடைபெறும்.
 • “இந்திய – நேபாள கிராமப்புற கைவினை திருவிழா” நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது. இந்திய நேபாள கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில், இரு நாட்டின் சார்பிலும் இத்திருவிழா நடத்தப்பட்டது.
 • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “ஹாஸ்லா 2௦17” (HAUSLA 2017) என்ற பெயரில் குழந்தை உரிமைகள் வாரத்தை, நவம்பர் 16 முதல் 2௦ வரை கொண்டாடியது. கொண்டாடும் வகையில் ஓவியப்போட்டிகள், கட்டுரை எழுதுதல், தடகளம், கால்பந்து போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
 • தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக உருது மொழியை அறிவித்துள்ளது. அணைத்து அரசு அலுவலுகங்களிலும், உருது மொழி அறிந்த பணியாளரை நியமிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
 • நான்காவது இந்திய – கனடா அமைச்சர்கள் ஆண்டு கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய தொழிலக அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை தாங்கினார்.
 • 37-வது இந்திய சர்வதேச வணிக விழா (37TH INDIA INTERNATIONAL TRADE FAIR), புது தில்லியில் நடைபெற்றது. இந்த விழாவின் கரு = STARTUP INDIA STANDUP INDIA. இந்த விழாவில் இந்தியாவின் கூட்டாளி நாடாக, வியட்நாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சவூதி அரேபிய அரசு, யோகாவை அந்நாட்டு விளையாட்டுகளில் (SAUDI GOVERNMENT OFFICIALLY DECLARED YOGA AS A “SPORT ACTIVITY”) ஒன்றாக அறிவித்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக சவூதி அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் முதல் பெண் யோகா ஆசிரியை என்ற சிறப்பை, “நவுப் அல் மார்வாய்” என்ற பெண்மணி பெற்றுள்ளார்.
 • இந்தியாவின் மிக நீண்ட எக்ஸ்ப்ரெஸ் ரயில்வழி சாலையான, “ஆக்ரா முதல் லக்னோ” வரையிலான 3௦2 கிலோமீட்டர் முழுவதும் இலவச வை-பை இணையதள சேவை இலவசமாக வழங்க உத்திரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 • 15 நாட்கள் நடைபெறும், “ஆதி மகோற்சவம்” பழங்குடியின திருவிழாவை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, புது தில்லியில் துவக்கி வைத்தார்.
 • அனைத்து இல்லங்களுக்கும் மின்சார வசதியை உறுதி செய்ய ஏதுவாக, மத்திய அரசு, “சௌபாக்யா” என்ற இணையதள முகவரியை துவக்கி உள்ளது. இதன் முகவரி SAUBHAGYA.GOV.IN
 • ஹரியானா மாநிலத்தின் உள்ள, “ட்ரம்ப் கிராமம்” எனப்படும், “மரோரா கிராமத்தில்”, உலகின் மிகப்பெரிய கழிவறை பானை மாதிரி (WORLD’S BIGGEST TOILET POT MODEL) அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19, உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த கழிப்பறை மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • மத்திய அரசின் அனைத்து சேவைகளும், பொது மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், பிரதமர் மோடி அவர்கள், “உமங்’ (UMANG – UNIFIED MOBILE APPLICATION FOR NEW AGE GOVERNANCE) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைத்தார். மத்திய, மாநில அரசுகளின் 33 துறைகளை சார்ந்த 162 சேவைகள் இதன் மூலம் பெற இயலும்.
 • 2௦17 சர்வதேச கீதா மகோற்சவம் (2017 INTERNATIONAL GITA MAHOTSAV), நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் அவர்களால், ஹரியானா மாநிலத்தின் குருக்சேத்ரா பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் கூட்டாளி நாடாக மொரிசியஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 15-வது நிதிக் குழுவின் தலைவராக, என்.கே.சிங் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது. இக்குழு தனது அறிக்கையை வருகின்ற 2௦19ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கும்.
 • லண்டனை சேர்ந்த உலக சாதனை புத்தக நிறுவனம், “2௦17ம் ஆண்டில் உலகில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இடமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில்” (MOST VISITED PLACE OF THE WORLD IN 2017) அறிவிக்கப்பட்டுள்ளது.
 • “கோரிய சுற்றுலா திருவிழா 2௦17”, ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் பகுதியில் நடைபெற்றது. இதில் தென் கொரியாவின் புகழ் பெற்ற சுற்றுலாத் தளங்களின் கண்காட்சி நடைபெற்றது.
 • ரசியாவின் சொச்சி நகரில் துவங்கிய, ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்” ஆண்டு கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் கலந்துக் கொண்டார்.
 • “ஒரே பாரதம், சிறந்த பாரதம்”, என்னும் செயல் திட்டத்தின் கீழ் கேந்த்ரிய வித்யாலய பள்ளிகளில், “தேசிய ஒருமைப்பாட்டு முகாமினை” (NATIONAL INTEGRATION CAMP), மத்திய அரசு நாடு முழுவதும் நடத்தியது.
 • கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து, காணொளிக் காட்சி மூலம் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே எல்லை தாண்டிச் செல்லும் ரயில் சேவையான, கொல்கத்தாவில் இருந்து குல்னா வரை செல்லும் “பந்தன் எக்ஸ்ப்ரெஸ்” ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கொல்கத்தாவையும் டாக்காவையும் இணைக்கும் மைத்ரி எக்ஸ்ப்ரெஸ் ரயிலுக்கு அடுத்தப்படியாக, இந்தியா வங்கதேச இடையே செயல்படும் இரண்டாவது ரயில் சேவை இதுவாகும்.
 • கடும் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆப்ரிக்க பகுதியான, லேசிதோ பகுதிக்கு, இந்தியாவின் சார்பில் 5௦௦ மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 • “சீட் வொர்க்” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் தொழில் முனைவோர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், “தமிழகம்” முதல் இடத்தில உள்ளது. அடுத்த இடங்களில் கேரளா மற்றும் மேற்கு வாங்க மாநிலங்கள் உள்ளன.
 • மகாராஷ்டிரா மாநில அரசு, அம்மானில் அரசு அலுவலுகங்களில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட தண்ணீருக்கு தடை விதித்துள்ளது.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

Leave a Comment

Your email address will not be published.