TNPSC Current Affairs in Tamil November 2017-2

தமிழகம்

 • புகழ் பெற்ற தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயம், “யுனஸ்கோ ஆசிய பசிபிக் 2௦17” (UNESCO ASIA PACIFIC AWARD OF MERIT 2017) விருதை பெற்றுள்ளது. “கலாசார பாரம்பரிய பாதுகாத்தல்” என்ற தலைப்பின் கீழ் இவ்விருது, இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • யுனஸ்கோவின் ஆக்கப்பூர்வ நகரங்கள் பட்டியலில் (UNESCO CREATIVES CITIES NETWORK), தமிழகத்தின் சென்னை நகரம் இடம்பிடித்துள்ளது. உலகின் உள்ள 72 நாடுகளின் 180 நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன. இப்பட்டியலில் சென்னை மூன்றாவது இந்திய நகரமாக இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் ஜெய்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்கள் உள்ளன.
 • இந்தியாவின் முதல் கடைகரையோர உப்புநீரை குடிநீராக்கும் ஆலை (INDIA’S FIRST OFFSHORE DESALINATION PLANT), தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1௦ மில்லியன் லிட்டர் நன்னீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது இந்த ஆலை.
 • தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான, “மா.நன்னன்” காலமானார். இவர் ஓர் பெரியார்வாதி ஆவார். “தமிழ் கற்போம்” என்ற பெயரில் தூர்தர்சன் தொலைகாட்சியில் இவர் நடத்திய தமிழ் வகுப்புகள் மிகப் பிரபலமானவை ஆகும்.
 • தமிழகத்தில் பறவைகளின் பதிவு எண்ணிக்கை ஒரு மில்லியன் எண்ணிக்கையை அடைந்தது. இந்தியாவில் ஒரு மில்லியன் பறவைகள் எண்ணிக்கையை எட்டிய 3-வது மாநிலம் தமிழகம் ஆகும். முதலில் கேரள மற்றும் கர்நாடகா உள்ளன. அதிகப் பறவைகள் பதிவு செய்யப்பட்டதில் கோயம்புத்தூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 • தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமம் என்ற சிறப்பை, காஞ்சீபுரம் மாவட்டத்தின் அம்மனூர் கிராமம் பெற்றுள்ளது.
 • தொடர்ந்து 3-வது ஆண்டாங்க இந்தியாவில் அதிக அளவு உறுப்பு தானம் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

சர்வதேசம்

 • புகழ் பெற்ற “காலின்ஸ் அகராதி” (COLLINS DICTIONARY) நிறுவனம் சார்பில் 2௦17ம் ஆண்டின் அதிகாரப் பூர்வ வார்த்தையாக, “பொய் செய்தி” எனப் பொருள்படும் “FAKE NEWS” என்ற வார்த்தை அறிவிக்கப்பட்டுள்ளது
 • 2௦17ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக (2017 MISS UNIVERSE), தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி லேய் நெல் பீட்டர்ஸ், என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபஞ்ச அழகி போட்டி, அமரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்றது.
 • “டாம்ரே புயல்”, வியட்நாம் பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது.

முதன் முதல்

 • முதல் இந்திய – அமெரிக்க கடல்சார் பேச்சுவார்த்தை, கோவா மாநிலத்தில் நடைபெற்றது. இது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் நடத்தப்பட்டது. “நீல வணிகம்” எனப்படும் கடல்சார் பொருட்கள் வாணிபத்தில், இருநாடுகளும் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 • இந்தியாவின் முதல் “பாதுகாக்கப்பட்ட கருப்பு மான் பூங்கா” (INDIA’S FIRST EVER CONSERVATION RESERVE FOR BLACK BUCK), யமுனை நதிக்கரையில், உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரப் பகுதியில், 126 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
 • “முதல் ஹெலி ஏற்றுமதி மற்றும் சர்வதேச சிவில் ஹெலிகாப்டர் கூடுகை 2௦17” (1ST HELI EXPO AND INTERNATIONAL CIVIL HELICOPTER CONCLAVE – 2017), இந்தியாவின் சார்பில் புது தில்லியில் நடத்தப்பட்டது. இந்திய மினிரத்னா நிறுவனமான, “பவன் ஹன்ஸ்” ஹெலிகாப்டர் நிறுவனம் இதனை நடத்தியது.
 • வாக்களிக்கும் எந்திரத்தில், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதனை அறிந்துக் கொள்ளும் காகித முறை (VVPAT – VOTER VERIFIABLE PAPER AUDIT TRIAL), மாநிலம் முழுவதும் தேர்தலுக்கு பயன்படுத்தும் முதல் மாநிலம் என்ற சிறப்பை ஹிமாச்சலப் பிரதேசம் பெற்றுள்ளது.
 • “முதல் நார்டிக் – பால்டிக் இளையோர் திரைப்பட திருவிழா” (FIRST NORDIC – BALTIC YOUTH FILM FESTIVAL), புது தில்லியில் நடைபெற்றது. நார்டிக் – பால்டிக் பகுதிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் இதில் பங்குபெற்றன. நார்டிக் – பால்டிக் கூட்டமைப்பு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, அசிலாந்து, லாட்வியா, லித்துவானியா, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய எட்டு நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.
 • “கல்லீரல் அழற்சி – சி” வகை நோய்க்கு இலவசமாக மருத்துவ சிகிச்சையை, வாய்வழி மருத்துவ சிகிச்சியை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை ஹரியானா மாநில அரசு பெற்றுள்ளது. நோய் தொற்று மூலம் இந்நோய் பரவுகிறது.
 • இந்தியாவின் முதல் “கேலிச் சித்திர நெட்வொர்க் பொழுதுபோக்கு பூங்கா – அமாசியா(INDIA’S FIRST CARTOON NETWORK AMUSEMENT PARK – AMAAZIA), குஜராத்தின் சூரத் நகரில் அமைய உள்ளது. இது 2௦19ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வர உள்ளது.
 • “இந்தியாவின் முதல் பழங்குடியின தொழில் முனைவோர்கள் மாநாடு” (INDIA’S FIRST TRIBAL ENTERPRENURSHIP SUMMIT), சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியில் நடைபெற்றது. நிதி ஆயோக் அமைப்பு மூலம், இம்மாநாடு நடத்தப்பட்டது.
 • உலகின் முதல் மின்சார போக்குவரத்து கப்பல் (WORLD’S FIRST FULLY ELECTRIC CARGO SHIP), சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • ராஜஸ்தான் மாநில காவல் துறையில், முதல் திருநங்கை காவலராக கங்கா குமாரி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • முதல் நமாமி பாரக் திருவிழா (FIRST NAMAMI BARAK FESTIVAL), அஸ்ஸாமின் சில்சார் பகுதியில் கொண்டாடப்பட்டது.
 • இந்திய கடற்படையில், முதல் பெண் விமான ஒட்டி (FIRST FEMALE PILOT IN INDIAN NAVY) என்ற சிறப்பை, உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த, சுபாங்கி ஸ்வரூப் என்பவர் பெற்றுள்ளார்.
 • “முதல் வடகிழக்கு வளர்ச்சி மாநாடு” (FIRST NORTH EAST DEVELOPMENT SUMMIT – NEDS 2017), மணிபூர் மாநிலத்தின் இம்பால் நகரில், குடியரசுத் தலைவர் அவர்களால், துவக்கி வைக்கப்பட்டது.
 • நியுசிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், “உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி, “சாம்”” (WORLD’S FIRST ARTIFICIAL INTELLIGENCE POLITICIAN – SAM), என்ற பெயரில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி, உள்ளூர் பிரச்சனைகள் முதல் அணைத்து அரசியல் தொடர்பான கேள்விகள், பரப்புரைகள் போன்றவற்றை எடுத்துக் கூறும்.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

 

Leave a Comment

Your email address will not be published.