TNPSC Current Affairs in Tamil November 2017-3

பொருளாதாரம்

  • 21வது ஆசிய காப்பீட்டு துறை விருதுகள் விழாவில், “2௦17ம் ஆண்டின் சிறந்த பொது காப்பீட்டு நிறுவனம்” (2017 GENERAL INSURANCE COMPANY OF THE YEAR) என்ற விருதை, “அப்பல்லோ முனிச் மருத்துவ காப்பீட்டு நிறுவனம்” பெற்றது.
  • மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக சேதுரத்தினம் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வங்கி

  • “ஆசிய வங்கிகள் கூட்டமைப்பின் மாநாடு” (ASIAN BANKERS ASSOCIATIONS SUMMIT), மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டை, பாரத ஸ்டேட் வங்கி தலைமை ஏற்று நடத்தியது.
  • பாரத ஸ்டேட் வங்கி, ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கும் புதிய மொபைல் செயலி, “யோனோ” (YONO – YOU NEED ONLY ONE) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அணைத்து வகை வங்கிச் சேவைகளும் இதில் கிடைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இராணுவம்

  • இந்திய ராணுவம் மற்றும் கஜகஸ்தான் நாட்டு ராணுவமும் இணைந்து, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பக்லோ பகுதியில் போர் ஒத்திகை பயிற்சியான, “பிரபல் தோஸ்திக் 2௦17” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இரு நாட்டு ராணுவ உறவை மேம்படுத்த இப்பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • இந்திய – இஸ்ரேல் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட போர் ஒத்திகை பயிற்சியான, “நீலக் கொடி – 2௦17” (BLUE FLAG – 2017), இஸ்ரேல் நாட்டின் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் விமானப் படையின் கருட பிரிவை சார்ந்த வீரர்கள் பங்குக் கொண்டனர்.
  • 7-வது இந்திய – வங்கதேச கூட்ட போர் பயிற்சி நிகழ்ச்சியான, “சம்ப்ரிதி – 7” (SAMPRITI – 7), வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. 13 நாட்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது.
  • இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம், நீண்ட தூறும் சென்று தாக்கும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய, “நிர்பயா” ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  • ஓடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலம் இணைந்து, தங்கள் கடலோரப் பகுதிகளில், “சாகர் கவச்” (SAGAR KAVACH) என்ற பெயரில் கூட்டு ரோந்துப் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டன.
  • இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்ச்சியான, “இம்பக்ஸ்” (IMBAX – INDIA MYANMAR BILATERAL ARMY EXERCISE), மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகர் அருகே நடைபெற்றது.
  • “2௦17 சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி”யான “இம்சரக்ஸ்” (IMMSAREX – 2017 INTERNATIONAL MULTILATERAL MARITIME SEARCH AND RESCUE EXERCISE), வங்கதேசத்தில் நடைபெற்றது. இப்பயர்சியில், இந்தியாவின் சார்பில் கடற்படை முதன்மை அதிகாரி சுனில் லம்பா பங்கு பெற்றார்.
  • இந்திய கடலோர காவல்படை, இந்திய கடல்களில் உள்ள எண்ணெய் மாசுக்களை அகற்றும், “தூய கடல் – 2௦17” (MARINE LEVEL OIL POLLUTION RESPONSE EXERCISE CLEAN SEA 2017) என்ற பெயரில் பயிற்சி நடவடிக்கையை அந்தமானின் போர்ட் ப்ளேயர் பகுதியில் மேற்கொண்டது. இந்திய கடலோர காவல்படை, இந்தியாவில் மூன்று இடங்களில், தயார் நிலையில் இந்த மையங்களை அமைத்துள்ளது. மும்பை, சென்னை மற்றும் போர்ட் ப்ளேயர்.
  • தென் கொரியா மற்றும் அமெரிக்கா ராணுவங்கள் இணைந்து ,மேற்கொண்ட, “விஜிலன்ட் ஏஸ்” (VIGILANT ACE) போர் பயிற்சி நிகழ்ச்சி, தென் கொரியாவின் கடல் பகுதியில் நடைபெற்றது.

அறிவியல்

  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், “ஆஸ்பயர்” (ADVANCED SUPERSONIC PARACHUTE INFLATION RESEARCH EXPERIMENT (ASPIRE)) எனப் பெயரிடப்பட்ட, புதிய சூப்பர்சோனிக் பாராசூட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 2௦2௦ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளினை வெற்றிகரமாக கீழ் இறக்க இது பயன்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது.
  • இந்திய தாவரவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், புதிய வகை ஒட்டுண்ணி பூக்கும் தாவர இனத்தை, கிழக்கு நாகாலாந்தின் மான் மாவட்டத்தில் உள்ள டோபு நகரில் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தாவர இனத்திற்கு, GLEADOVIA KONYAKIANORUM எனப் பெயரிட்டுள்ளனர்.
  • வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், புதிய வகை பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Hemidactylus sushilduttai எனப் பெயரிட்டுள்ளனர்.
  • விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்த பால்வீதிகளிலே மிகவும் பழமையான பால்வீதியை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு A1689B11 எனப் பெயரிட்டுள்ளனர். இது சுமார் 11 பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். இது ஒரு சுருள் பால்வீதி ஆகும். இது ஹவாய் தீவுகளில் உள்ள ஜெமினி வடக்கு தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
  • சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான, ப்ராக்சிமா செண்டாவுரியில், தூசுப் படுகை உள்ளதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். சிலி நாட்டில் அட்டகாமா பாலைவனத்தில் உள்ள அல்மா தொலைநோக்கி மூலம், விஞ்ஞானிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
  • கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்தில், புதிய வகை எறும்பு இணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Tyrannomyrmex alii எனப் பெயரிட்டுள்ளனர். “இந்தியாவின் எறும்பு மனிதர்” எனப்படும் முஸ்தாக் அலி அவர்களின் நினைவாக இந்த எறும்பு இனத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • அண்டார்டிக் கண்ட பகுதிகளில், ஓசோன் படலத்தில் படிப்படியாக துளைகள் குறைந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
  • ராஜஸ்தான் மாநில அரசு, கல்வி தொடர்புடைய மொபைல் செயலி, “திசரி” என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துக் கொள்ள ஏதுவாக பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் போன்றவை இடம் பெற்றுள்ளது.
  • இந்தியாவின் முதல் சூரிய ஆராய்ச்சி செயற்கைக்கோள், “ஆதித்தியா எல்-1”, வருகின்ற 2௦19ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • “ஆற்றல் திறன் தொடர்பான புதுமை மற்றும் ஆராய்ச்சி கருத்தரங்கம்” முதல் முறையாக “இன்ஸ்பைர் 2௦17” (INSPIRE 2017 – INTERNATIONAL SYMPOSIUM TO PROMOTE INNOVATION AND RESEARCH IN ENERGY EFFICIENCY) என்ற பெயரில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடைபெற்றது. இதில் 13 நாடுகளை சேர்ந்த 35௦ பேர் கலந்துக்கொண்டனர்.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.