TNPSC Current Affairs in Tamil November 2017-4

இடங்கள்

 • 36வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி, ஷார்ஜா நகரில் நடைபெற்றது. இந்த கண்காட்சியின் கரு = A WORLD INSIDE MY BOOK. 6௦ நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பு நிறுவனங்கள் பங்குபெற்றன.
 • “9வது சி.எம்.எஸ் வடவரன்” நிகழ்ச்சி புது தில்லியில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் வனவாழ்வு திரைப்பட திருவிழா இதுவாகும். 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் கரு CONSERVATION 4 WATER ஆகும்.
 • “2௦17 உலக உணவு இந்திய” (WORLD FOOD INDIA 2017) விழா, புது தில்லியில் பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நோக்கம், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில், உணவு துறையில் 1௦ பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குவது ஆகும்.
 • “2௦17 உலக இளையோர் மன்றக்” (2017 WORLD YOUTH FORUM) கூட்டம் எகிப்த்தில் நடைபெற்றது. அரசியல் ரீதியான துறைகளில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க ஏதுவாக இக்கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர், ராஜ்யவர்த்தன் ரதோர் கலந்துக் கொண்டார்.
 • “2-வது இந்திய சர்வதேச செர்ரி மலர் திருவிழா” (2ND INDIA INTERNATIONAL CHERRY BLOSSOM FESTIVAL), மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரில் நடைபெற்றது.
 • 19-வது இயற்கை (கரிம) உலக காங்கிரஸ் (19TH ORGANIC WORLD CONGRESS) கூட்டம், நொய்டா பகுதியில் நடைபெற்றது. 15 மாநிலங்களில் இருந்து நான்காயிரம் வகையிலான புதிய இயற்கை வகை விதைகள் கூட்டத்தில் காட்டப்பட்டன.
 • 2௦வது சர்வதேச இந்திய குழந்தைகள் திரைப்பட திருவிழா (ICFFI – INTERNATIONAL CHILDREN’S FILM FESTIVAL OF INDIA), ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இத் திருவிழாவின் முக்கிய கரு = NEW INDIA. இந்நிகழ்ச்சியை தெலுங்கானா மாநில அரசு முன்னின்று நடத்தியது.
 • 5-வது நேபாள – இந்திய மேற்பார்வை பொறிநுட்பக்” (NEPAL – INDIA OVERSIGHT MECHANISM) கூட்டம், நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது.
 • சர்வதேச திரைப்பட விழாவான, “ரசிய திரைப்பட நாட்கள்” (RUSSIAN FILM DAYS) விழா, புது தில்லியில் நடைபெற்றது. இந்திய – ரசிய உறவுமுறைகளை வலு சேர்க்கும் விதமாக இவ்விழாவினை இந்தியா நடத்தியது.
 • “பாரம்பரிய லவி திருவிழா” (TRADITIONAL LAVI FAIR), ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. லவி திருவிலாவானது, இந்தியா மற்றும் திபத் இடையே உள்ள 3௦௦ ஆண்டுகள் பழமையான வணிக விழாவாகும்.

விளையாட்டு

 • போலந்து நாட்டின் பிட்கோஸ்க் நகரில் நடைபெற்ற 23 வயதுக்கு உடபட்டோருகான சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் கைப்பற்றப்பட்டது.
 • தாய்லாந்து நாட்டு தலைநகர் பாக்காக்கில் துப்பாக்கி சுடுதலுக்கான 2௦17ம் ஆண்டிற்கான பாரா உலக சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெற்றன.
 • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், அதிவேகமாக 3௦௦ விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சிறப்பை இந்தியாவின் ரவிசந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். இவர் 54 டெஸ்ட் போட்டிகளில் 3௦௦ விக்கெட்டுகளை வீழ்த்தி, 56 போட்டிகளில் 3௦௦ விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லியின் சாதனையை முறியடித்தார்.
 • “2௦17 ஐபா இளையோர் பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்சிப் போட்டிகள், அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கான பிரத்தியோக சின்னமாக, “குப்பி” எனப் பெயரிடப்பட்ட ஒற்றை கொம்பு காண்டாமிருக சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சுவிட்சர்லாந்து நாட்டினை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான மார்டினா ஹிங்கிஸ், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2௦9 வாரங்கள், இவர் உலகின் முதல் நிலை பெண் வீராங்கனையாக இருந்துள்ளார்.
 • 2௦17 ஐபா இளையோர் பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்சிப் போட்டிகளுக்கான விளம்பர தூதராக முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போட்டிகள் அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் நடைபெற்றன.
 • 2௦17 ஜூடோ உலக சாம்பியன்சிப் ஓபன் போட்டிகள் மொராக்கோ நாட்டில் நடைபெற்றது. இதில் பிரெஞ்ச் நாட்டின் டெட்டி ரின்னர் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.
 • ஈரான் நாட்டு அரசு, அந்நாட்டு பெண்களை முதன் முறையாக சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் பங்குபெற அனுமதி அளித்துள்ளது. பெண் போட்டியாளர்களுக்கு என தனி பிரத்தியோக ஆடை வடிவமைக்கப் பட்டுள்ளது.
 • பெல்ஜியத்தின் டீஹான் நகரில் நடைபெற்ற 2௦17 சேலஞ்ச் பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் சரத் கமல் மற்றும் ஜி.சத்தியன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
 • 2௦17 ஐ.டி.டி.எப் சேலஞ்ச் ஸ்பானிஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் ஜி.சத்தியன், ஜப்பானின் யோசிமுராவை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்
 • ஒரு நடப்பு ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1௦ சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமையை, இந்தியாவின் விராட் கோலி பெற்றுள்ளார்
 • 18வது ஐ.பி.எஸ்.எப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் பிரபல ச்நூகர் வீரரான பங்கஜ் அத்வானி, இறுதி ஆட்டத்தில் ஈரான் நாட்டின் அமீர் சர்கோஸ் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இப்போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்றது.
 • ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 2௦17 ஆசிய பெண்கள் ஹாக்கி விளையாட்டு போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி, சீனாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்தில் 2018ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
 • 2018ம் ஆண்டில் நவம்பர் – டிசம்பர் மாதங்களில், ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் 14-வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.
 • 2௦17 பானாசோனிக் ஓபன் கோல்ப் போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த ஷிவ் கபூர் சாம்பியன் பட்டதை வென்றார்.
 • இந்தியாவை சேர்ந்த பெண் கோல்ப் விளையாட்டு வீராங்கனையான அதிதி அசோக், அபுதாபி நகரில் நடைபெற்ற பாத்திமா பின்ட் முபாரக் லேடிஸ் ஓபன் கோல்ப் போட்டிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் அவர் வெல்லும் 3-வது கோப்பை இதுவாகும்
 • ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற ஏர்ஸ்ட் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகர் போபண்ணா மற்றும் உருகுவேயின் பாப்லோ இணை கோப்பையை வென்றது
 • ஹாங்காங் பாட்மிண்டன் ஓபன் 2௦17 போட்டிகள்
  • ஆண்கள் ஒற்றையர் = மலேசியாவின் லீ சாங்
  • பெண்கள் ஒற்றையர் = சீனாவின் தை டிங்
 • சீனாவில் நடைபெற்ற 16வது ஆசிய மாரத்தான் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் கோபி தொனகால் தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவராவார்.
 • பிரான்சில் நடைபெற்ற 1௦6வது டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் தொடரில், 1௦வது முறையாக பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது. இறுதி ஆட்டத்தில் அவ்வணி பெல்ஜியம் அணியை வீழ்த்தியது.
 • 2௦19ம் ஆண்டின் ரக்பி உலகக் கோப்பை போட்டிகள் ஜப்பானிலும், 2௦23ம் ஆண்டின் ரக்பி உலகக் கோப்பை போட்டிகள் பிரான்ஸ் நாட்டிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 • 2௦17 டெல்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில், ஆண்கள் பிரிவில் எத்தோப்பியாவின் பிர்ஹனு லேகசெவும், பெண்கள் பிரிவில் எத்தோப்பியாவின் அல்மாஸ் அயனாவும் வெற்றி பெற்றனர்.
 • சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரல், 2௦19ம் ஆண்டில் உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் மற்றும் பாரா உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டிகள் ஆகிய இரண்டு உலகக் கோப்பை சாம்பியன்சிப் போட்டி இரண்டையும் நடத்தும் உலகின் முதல் நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது
 • தென் கொரியாவின் உல்சா நகரில் நடைபெற்ற பாரா பாட்மிண்டன் சாம்பியன் சிப் போட்டிகளில், இந்தியா 2 தங்கம் உட்பட மொத்தம் 1௦ பதக்கங்களை வென்றது.
 • வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா 3 தங்கம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை வென்றது
 • மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் நடைபெற்ற 82-வது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டிகளின் பெண்கள் இறுதி ஆட்டத்தில், சாய்னா நேவால், பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார். இவர் மூன்றாவது முறையாக இப்பதக்கத்தை வென்றுள்ளார். ஆண்கள் இறுதி ஆட்டத்தில், பிரணாய் வெற்றி பெற்றார்.
 • 61வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள், புது தில்லியில் நடைபெற்றது
 • 2018 ஜூன் மாதம், ரசியாவில் நடைபெறவுள்ள பிபா கால்பந்து உலகக்கோப்பை சாம்பியன்சிப் போட்டிகள், நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி முதல் முறையாக தகுதி போட்டிக்கு தேர்வாகவில்லை
 • 1௦வது ஆண்கள் சீனியர் ஆசிய கபடி சாம்பியன்சிப் போட்டிகள், ஈரானில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது.
 • ஈரானில் நடைபெற்ற 5-வது பெண்கள் சீனியர் கபடி சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
 • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர், ககன் நரங், 5௦ மீ சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போட்டியில், இந்தியாவை சேர்ந்த ஸ்வப்நில் சுரேஷ் குசாலே, வெண்கலப் பதக்கம் வென்றார்.
 • புது தில்லியில்; நடைபெற்ற 2௦17 பானாசோனிக் ஓபன் (இந்தியா) கோல்ப் போட்டிகளில், இந்தியாவின் ஷிவ் கபூர் முதல் இடத்தை பிடித்து கோப்பையை வென்றார்.
 • 2௦17 ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் மேரி கோம், 48 கிலோ எடை பிரிவில், வடகொரியாவை சேர்ந்த கிம் ஹாங் மி என்பவரை தோற்கடித்து, தங்கப் பதக்கத்தை வென்றார்.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

Leave a Comment

Your email address will not be published.