TNPSC Current Affairs in Tamil November 2017-5

மாநாடு

 • “2௦17 உலக பிறவி வளைபாத நோய் கருத்தரங்கம்” (2017 GLOBAL CLUBFOOT CONFERENCE), புது தில்லியில் குடியரசுத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைகளின் கால் பாதங்கள் வளைந்த நிலையில் இருக்கும். இது ஒரு எலும்பு சார்ந்த நோய் ஆகும்.
 • “21-வது உலக மண நல காங்கிரஸ்” (21ST WORLD CONGRESS ON MENTAL HEALTH) கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் கரு = PARTNERSHIPS FOR MENTAL HEALTH. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
 • “இராமாயண சுற்றுலா மையம் மற்றும் மிதிலை – ஆவாத் உறவு” (RAMAYAN CIRCUIT AND MITHILA – AWADH RELATIONS) என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கம், நேபாள நாட்டின் ஜானக்பூர் நகரில் நடைபெற்றது. இந்தியாவின் அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜானக்பூர் ஆகிய இரண்டு ஊர்களையும் மேம்படுத்தும் நோக்கில், இரு நாடுகளின் சார்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
 • “சர்வதேச ஆற்றல் கூட்டமைப்பு”, சார்பில் நடத்தப்பட்ட, “7-வது ஆசிய அமைச்சர்கள் அளவிலான ஆற்றல் வட்டமேசை கூட்டம்” (AMER7 – ASIAN MINISTERIAL ENERGY ROUNDTABLE 2017”), தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார்.
 • “உடலியல் மற்றும் அறிவியல் ராணுவ கழகம்” சார்பில் “FIPSPHYSIOCON 2017” (FIPS – FEDERATION OF INDIAN PHYSIOLOGICAL SOCIETIES) என்ற கருத்தரங்கம் புது தில்லியில் நடத்தப்பட்டது. 29-வது இந்திய உடலியல் கழக கூட்டமைப்பின் சார்பில் இது நடத்தப்பட்டது.
 • அணைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் பங்குபெற்ற 2 நாள் கருத்தரங்கம், பீகார் மாநிலத்தின் ராஜ்கிர் நகரில் நடைபெற்றது.
 • “2௦17 ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு” (2017 ASIA – PACIFIC ECONOMIC CO-OPERATION (APEC) SUMMIT), வியட்நாம் நாட்டின் தனாங் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கரு = CREATING NEW DYNAMISM, FOSTERING A SHARED FUTURE.
 • “2௦17 பேரிடர் பதிலெதிர்ப்பு மாநாடு” (2017 INDIAN DISASTER RESPONSE SUMMIT), மத்திய அமைச்சர் கிரண் ரிச்சு, அவர்களால் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது. முகநூல் நிறுவனம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA – NATIONAL DISASTER MANAGEMENTR AUTHORITY) ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்தின.
 • “39 யுனஸ்கோ பொது கருத்தரங்க கூட்டம்” (39TH GENERAL CONFERENCE OF UNESCO), பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் யுனஸ்கோ அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைமை பொறுப்பை, மீண்டும் இந்தியா பெற்றுள்ளது.
 • “12வது கிழக்காசிய உச்சி மாநாடு” (12TH EAST ASIA SUMMIT), பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 18 உறுப்பு நாடுகள் இதில் பங்குபெற்றன. இந்தியாவும் இதில் ஒரு உறுப்பு நாடாகும்.
 • “ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு மாநாடு 2௦17” (ABIS 2017 – ASEAN BUSINESS AND INVESTMENT SUMMIT 2017), பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி அவர்கள் கலந்துக் கொண்டார்.
 • “1௦-வது தெற்காசிய பொருளாதார மாநாடு” (SAES 2017 – SOUTH ASIA ECONOMIC SUMMIT), நேபாள தலைநகர் காத்மாண்டு நகரில் நடைபெற்றது.
 • “7-வது ஆப்கானிஸ்தான் வட்டார பொருளாதார ஒத்துழைப்பு கருத்தரங்கம்” (7TH REGIONAL ECONOMIC COOPERATION ON AFGHANISTAN), துருக்மெனிஸ்தான் நாட்டின் அஸ்கபாத் நகரில் நடைபெற்றது.
 • 15-வது ஆசியான் – இந்தியா மாநாடு (15TH ASEAN – INDIA SUMMIT), பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி அவர்கள் இதில் கலந்துக் கொண்டார்.
 • 15-வது ஆசிய பசிபிக் கணினி அவசரநிலை பதிலெதிர்ப்பு அணி கருத்தரங்கம் (APCERT – ASIA PACIFIC COMPUTER EMERGENCY RESPONSE TEAM), புது தில்லியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் கரு = BUILDING TRUST IN THE DIGITAL ECONOMY
 • 5-வது சைபர் ஸ்பேஸ் உலக கருத்தரங்கம் (5TH GLOBAL CONFERENCE ON CYBER SPACE), புது தில்லியில், பாரத பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
 • “ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றக் கருத்தரங்கம்” (UN COP23 – UNITED NATIONS CLIMATE CHANGE CONFERENCE), ஜெர்மனியின் பூன் நகரில் நடைபெற்றது.
 • “நான்காவது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கருத்தரங்கம்” (4TH GLOBAL CONFERENCE ON SUSTAINED ERADICATION OF CHILD LABOUR), அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியோனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. சர்வதேச தொழிலக ஆணையம் இதனை நடத்தியது.
 • “8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு” (GES 2017 – 8TH GLOBAL ENTERPRENURSHIP SUMMIT), ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் கரு = WOMEN FIRST, PROSPERITY FOR ALL. இம்மாநாடு முதல் முறையாக ஆசிய நாடுகளில் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இதனை இணைந்து நடத்தின.

குழு

 • உத்திரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் உள்ள தேசிய அனல்மின் நிலையத்தின் உஞ்சார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தினை பற்றிய விவரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நான்கு பேர் கொண்ட குழுவினை, பி.டி.செவால் தலைமையில், மத்திய அரசு அமைத்துள்ளது.
 • காற்று மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, அதனை குறைக்க குறுகிய மற்றும் நீண்ட கால வழிமுறைகளை வழங்க, மத்திய அரசு, “சி.கே.மிஸ்ரா” தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளது.

குறியீடு

 • “உலக வங்கியின் எளிதில் தொழில் செய்ய உகந்த நாடுகள்” (WORLD BANK’S EASE OF DOING BUSINESS RANKING 2017) பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. 19௦ நாடுகளை கொண்ட இப்பட்டியலில், இந்தியா 1௦௦-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 13௦வது இடத்தில இருந்து, தற்போது 3௦ இடங்கள் முன்னேறி 1௦௦ இடத்தை அடைந்துள்ளது. இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் நியுசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.
 • உலக பொருளாதார கூட்டமைப்பின் சார்பில், “உலக பாலின இடைவெளி குறியீடு 2௦17” (GLOBAL GENDER GAP INDEX) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 144 நாடுகளை கொண்ட இப்பட்டியலில் இந்தியா 108-வது இடத்தையே பிடித்துள்ளது. இந்தியாவின் ஆண் – பெண் இடைவெளி 67% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் மோநெஉ இடங்களை ஐஸ்லாந்து, நார்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
 • “2௦17 பாலின பாதிப்பு குறியீடு” (GENDER VULNERABILITY INDEX 2017), குழந்தை வளர்ச்சி தொடர்பான ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கோவா மாநிலம் முதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில கேரளாவும், மூன்றாவது இடத்தில் மிசோரம் மாநிலமும் உள்ளன. இப் பட்டியலில் தமிழகம், 0.582 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
 • “2௦17 ஐ.எம்.டி உலக திறமை வரிசை” (2017 IMD WORLD TALENT RANKING) குறியீட்டில், இந்தியா 51-வது இடத்தை பிடித்துள்ளது. முதலீடு மற்றும் வளர்ச்சி, பரு ஆய்வு மற்றும் தயார் நிலை ஆகிய பிரிவுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் 3 இடங்களில், சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளன.
 • பிரபல ஜெர்மன் வாட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள, “உலக பருவநிலை இடர்பாடு குறியீட்டின்” (GLOBAL CLIMATE RISK INDEX) படி, உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் ஹைதி தீவு, ஜிம்பாப்வே, பிஜி, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகியவை உள்ளன.
 • பிரபல ஜெர்மன் வாட்ச் நிறுவனம், “உலக பருவநிலை செயல்திறன் குறியீட்டை” (GLOBAL CLIMATE PERFORMANCE INDEX) வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2௦-வது இடத்தில இருந்த இந்தியா, இந்த ஆண்டு 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் மூன்று இடங்களில் ஸ்வீடன், லித்துவானியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் உள்ளன.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

Leave a Comment

Your email address will not be published.