TNPSC Current Affairs in Tamil November 2017-7

விருது

 • 2௦17 பிரமோத் மாகாஜன் ஸ்மிரிதி விருது, பிரபல இந்தி மொழி நடிகர் அனுபம் கேர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • 2௦17 பிரமோத் மாகாஜன் விருது, மத்திய அரசின் “HE FOR SHE” என்ற திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அவை நல்லெண்ண தூதராக இருக்கும் சாய்ரா பானு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான, “எழுத்தச்சன் புரஸ்கராம் 2௦17” விருது, கே. சச்சிதானந்தன் என்பாருக்கு வழங்கப்பட்டது. பதக்கமும் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
 • பிரபல இந்தி மொழி எழுத்தாளரான, “கிருஷ்ணா சோப்தி” அவர்களுக்கு 2௦17ம் ஆண்டிற்கான 53-வது ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான இது, அவரின் இலக்கிய பங்களிப்பு காரணமாக வழங்கப்படுகிறது.
 • மத்திய அரசின் “சிறந்த நகரப் பஸ் பேருந்து போக்குவரத்து சேவை” (BEST CITY BUS SERVICES AWARD) விருது, குஜராத்தின் சூரத் முனிசிபல் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. “சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து சேவை” (BEST NON MOTORISED SERVICES AWARD) விருது, மைசூர் நகரின் பொது சைக்கிள் போக்குவரத்து சேவைக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17 விஷ்ணுதாஸ் பாவே” (2017 VISHNUDAS BHAVE AWARD) விருது பிரபல திரைப்பட மற்றும் தொலைகாட்சி நடிகரான மோகன் ஜோசி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும், “பாரத் கவுரவ் 2௦17” விருது, இந்த ஆண்டு அணில் கே.திரிபாதி, அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • இஸ்ரேல் நாட்டின் பிரபல, “ஜெனிசிஸ் விருது” (GENESIS AWARD), அந்நாட்டை சேர்ந்த பிரபல பெண் நடிகையும், இயக்குனருமான, “நட்டாலி போர்ட்மான்” என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • 2௦17ம், ஆண்டின் தேசிய தொழில்முனைவோர் விருது, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த ஆலோசகர், “மருத்துவர் ரேணு ஸ்வரூப்” அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17ம் ஆண்டின் சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது” (2017 MOTHER TERESA MEMORIAL AWARD FOR SOCIAL JUSTICE), “ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பிற்கு” (UNHCR – UNITED NATIONS HIGH COMMISSIONER FOR REFUGEES) வழங்கப்பட்டுள்ளது.
 • ஆந்திர மாநில அரசின் என்.டி.ஆர் தேசிய திரைப்பட விருதிற்கு, 2014-ம் ஆண்டிற்கு தமிழ் நடிகர் கமலஹாசனும், 2016ம் ஆண்டிற்கு ரஜினிகாந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 • “பேராசிரியர் யஸ்வந்த் ராவ் கேல்கர் இளையோர் விருது”, பெங்களூருவை சேர்ந்த குழந்தைகள் சேவையாளரான ஆர்.கோபிநாத் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • ஸ்பெயின் நாட்டின் உயரிய இலக்கிய விருதான, “செர்வண்டஸ் விருது 2௦17” (2017 CERVANTES PRIZE), செர்ஜியோ ரமிரேஸ் மெர்காடோ என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • கோவா மாநிலத்தின் பனாஜி நகரில் நடைபெற்ற, “2௦17 சர்வதேச இந்திய திரைப்பட திருவிழாவில்”, “வாழ்நாள் சாதனையாளர் விருது”, கனடா நாட்டினை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஏடம் எகோயன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • 2௦17ம் ஆண்டின் அமைதி, ஆயுத குறைப்பு மற்றும் வளர்சிக்கான இந்திரா காந்தி விருது (2017 INDIRA GANDHI PRIZE FOR PEACE, DISARMAMENT AND DEVELOPMENT), முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற, “2௦17 உலக அழகி” போட்டியில், இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். உலக அழகியாக பட்டம் சூட்டப்பட்ட 6-வது இந்தியர் சில்லர் ஆவார்.
 • “வங்க மொழிப் பிரிவில்” வழங்கப்பட்ட “2௦17 பெரிய சிறிய புத்தக விருது” (2017 BIG LITTLE BOOK AWARD), நபநீதா தேவ சென் என்பவருக்கு வழங்கப்பட்டது.

திட்டம்

 • குழந்தைகள் இடையே, அஞ்சல் தலை சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு “தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா” (DEEN DAYAL SPARSH YOJANA, SPARSH – SCHOLARSHIP FOR PROMOTION OF APTITUDE AND RESEARCH IN STAMPS AS A HOBBY) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், சிறந்த கல்வி தேர்ச்சியும், அஞ்சல் தலை சேமிப்பு பழக்கமும் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டுக்கு 6௦௦௦ ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
 • கேரள மாநில அரசு, அம்மாநில பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்காக, “ஷீ பேட்” (SHE PAD) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மாணவியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், அதனை எரிக்கும் எரி எந்திரம் போன்றவற்றை பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளது.
 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில், “ஜோகர்” (JOHAR – JHARKAND’S OPPORTUNITIES FOR HARNESSING RURAL GROWTH) என்னும் திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 2 இலட்சம் ஏழை மக்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் ஆகும்.

TNPSC Current Affairs in Tamil November 2017-1

TNPSC Current Affairs in Tamil November 2017-2

TNPSC Current Affairs in Tamil November 2017-3

TNPSC Current Affairs in Tamil November 2017-4

TNPSC Current Affairs in Tamil November 2017-5

TNPSC Current Affairs in Tamil November 2017-6

TNPSC Current Affairs in Tamil November 2017-7

Leave a Comment

Your email address will not be published.