TNPSC Current Affairs in Tamil October 2017-Part-1

இந்தியா

 • மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், கிளினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளும் முகாமினை (NATIONWIDE FREE EYE CHECK-UPCAMPAIGN AND DISTRIBUTION OF SPECTACLES FOR TRUCK DRIVERS,CLEANERS AND HELPERS), மகாராஷ்டிரா மாநிலத்தில் துவக்கி வைத்தார். முகாமில் அவர்களின் தேவைகேற்ப கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 5௦ இடங்களில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 • பீகார் மாநில அரசு, மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு (அக்டோபர் 2), மாநிலம் முழுவதும் வரதட்சணை மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிரான இயக்கத்தை நடத்தியது (STATE-WIDE CAMPAIGNAGAINST CHILD MARRIAGE AND DOWRY ON THE OCCASION OF MAHATMAGANDHIS BIRTH ANNIVERSARY). 18 வயதுக்கு உட்பட்ட ஆண் அல்லது பெண் ஆகியோர் குழந்தை திருமணத்தில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.
 • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், “பர்யதன் பார்வ்’ (UNION MINISTRY OF TOURISM HAS STARTEDPARYATAN PARV TO PROMOTE TOURISM ACROSS INDIA) என்ற பெயரில் சுற்றுலாத் திருவிழாவை, புது தில்லியில் நடத்தியது. இதன் நோக்கமானது, நாடு முழுவதும் சுற்றுலாத் துறையை வளர்ச்சி பெற வைப்பத்தாகும்.
 • மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுமான, அமேந்தர் சரண் அவர்கள், மகாத்மா காந்தியின் கொலை மீதான மறு விசாரணை கோரும் மனுவிற்கு, நடுநிலை அறிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • புதிதாக உருவாக்கபட்ட, “பிரதம மந்திரிக்கான பொருளாதார அறிவுரைக் கவுன்சில்” (THE FIRST-EVER MEETING OF THE NEWLY-CONSTITUTED ECONOMICADVISORY COUNCIL TO PRIME MINISTER (EAC-PM) WAS HELD ATNITI AAYOG, IN NEW DELHI. IT WAS CHAIREDBY DR. BIBEY DEBROY) குழு, புது தில்லியில், நிதி ஆயோக் அமைப்பு வளாகத்தில் நடைபெற்றது. இதனை “பிபெய் தெபுராய்” தலைமையேற்று நடத்தினார்.
 • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், “பெண்களுக்கு எதிரான பெண்களின் பாலின பாகுபாட்டை முடிவிற்கு கொண்டுவர” ஏதுவாக, இணையத்தளத்தில் #IAMTHATWOMAN என்ற புதிய இயக்கத்தை துவக்கி உள்ளது. சமூக வலைதளங்களில் (AN ONLINE CAMPAIGN #IAMTHATWOMAN TO ENDGENDER BIAS IN WOMEN AGAINST WOMEN) உள்ளோர் இந்த இயக்கத்திற்கு தங்களின் ஆதரவை தந்து இதனை பரப்ப வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • மேகாலய மாநிலத்தின் தேர்தல் ஆணையம், மிகப்பெரிய மனித சின்னத்தை உருவாக்கியதற்காக(MEGHALAYA ELECTION DEPARTMENT HAS ENTERED THE LIMCABOOK OF RECORDS FOR THE FORMATION OF THE BIGGEST HUMAN LOGO) லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
 • “உலக உணவு இந்திய 2௦17 நிகழ்ச்சி”, என்ற சர்வதேச உணவுத் திருவிழா, வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் மைய மாநிலமாக, “ஓடிஸா” (ODISHA WILL BE THE FOCUS STATE IN THE MEGA INTERNATIONAL FOODEVENT WORLD FOOD INDIA (WFI) 2017) தேர்வு செய்யப்பட்டுள்ளது. “மைய நாடுகளாக”, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • பல்வேறு மாநில மொழிகளின் 6௦-கும் மேற்பட்ட வார்த்தைகள், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் முதல் வெளிநாட்டு பயணம், ஆப்ரிக்க தேசமான டிஜிபௌட்டி மற்றும் எத்தோப்பியா ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
 • இந்தியாவின் சொலிசிடர் ஜெனரலாக இருந்த ரஞ்சித் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
 • கர்நாடகா மாநிலத்தில் கடந்த 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்துள்ளது.
 • குஜராத்தின் காம்பே வளைகுடாவில் உள்ள சொவுராஸ்ட்டிராவின் கோஹாவிற்கும் தென் குஜராத்தின் தகேஜ் நகருக்கும் ரோல் ஆன் – ரோல் ஆப் (ரோ ரோ) எனும் படகு போக்குவரத்து சேவையை, பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார். இது இந்தியாவின் முதல் ரோ ரோ படகு போக்குவரத்து சேவை ஆகும்.
 • திரையரங்குகளில், திரைப்படங்கள் துவங்கும் முன்னர் ஒலிக்கப்படும் தேசிய கீதத்திற்கு மக்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
 • இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், 2௦11 – 12ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கணக்கிட்டு, வருகின்ற 2௦19 – 2௦2௦ம் ஆண்டிற்குள், தொலைதொடர்பு துறையில் கார்பன் வெளியீட்டு அளவினை 3௦% என்ற அளவில் குறைக்க வேண்டும் என அணைத்து தொலைத் தொடர்பு நிறுவனங் களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.
 • பாரதமாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 83677 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகள், நெடுஞ்சசாலைகள், பசுமை விரைவு வலி சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை 2௦22ம் ஆண்டிற்குள் காட்டப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • 1 மில்லியன் டன் எடைகொண்ட கோதுமையை, ஈரானின் சபாகார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பி வைத்தது. சர்வதேச போக்குவரத்து தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆன பிறகு மேற்கொண்டுள்ள முதல் ஏற்றுமதி இதுவாகும்.
 • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3௦ முதல் நவம்பர் 4 வரை, “ஊழல் விழிப்புணர்வு வாரமாக”, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும், சர்தார் வல்லபாய் படேலின் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு புது தில்லியில், “ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு” வாரத்தை துணைக் குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
 • பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் முதன் முதலாக ஆதார் விவர நுழைவு மற்றும் பயோ மெட்ரிக் முறை பதிவுகள் வரும் ஆண்டில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது.
 • குஜராத்தின் ஊரகப் பகுதியை, திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலப் பகுதியாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.