TNPSC Current Affairs in Tamil October 2017-Part-2

தமிழகம்

 • “தேசிய எரித்தல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  மையம்”, தமிழகத்தின் சென்னை நகரில் உள்ள, மெட்ராஸ் அகில இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தில் அமைய உள்ளது (THE NATIONAL CENTRE FOR COMBUSTION RESEARCH AND DEVELOPMENT(NCCRD) WAS NAUGURATED AT THE INDIAN INSTITUTE OF TECHNOLOGYMADRAS (IIT-M) WHICH ISTHE WORLDS LARGEST COMBUSTION RESEARCH CENTRE). இது உலகத்திலேயே மிகப்பெரிய எரித்தல் ஆராய்ச்சி மையம் ஆகும்
 • வடகிழக்கு பருவமழையின் போது உண்டாகும் இடர்களை கையாள பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவற்படையின் 13வது பட்டாலியன் பிரிவானது தமிழ்நாட்டின் பேரிடர் படையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 • தமிழ் மொழியில், “மூத்த சகோதரன்” எனப் பொருள்படும் “அண்ணா” என்ற வார்த்தை, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • “நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” வருகின்ற நவம்பர் மாதம், தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார்.
 • இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையின் படி, தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 17-ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 99 சதவிகித குழந்தை பிறப்புகள் பாதுகாப்பான முறைகளில் மருத்துவ மனைகளிலே நடைபெறுகிறது.
 • தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை95 கோடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோளிங்கநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே குறைந்த அளவில் வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம்

 • சமூக வலைத்தளமான ட்விட்டர்-ல் உலகம் முழுவதும் அதிக மக்களால் பின்தொடரப்படும் முதல் மூன்று நபர்கள் = அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போப் ஆண்டவர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள்
 • 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில், பெண்களின் பாதுக்காப்பிற்கு உகந்த நகரம் என்ற சிறப்பை, ஜப்பானின் டோக்யோ நகரம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவின் டெல்லி நகரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
 • நவம்பர் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ள 23வது “தொழில்நுட்ப மாநாட்டிற்கு” கூட்டாளி நாடாக கனடா அறிவிக்கப்பட்டுள்ளது.
 • வெளிநாடுகளில் இருந்து காய்கள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது ஜிம்பாப்வே அரசு.
 • அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை நடே புயல் தாக்கியது. மணிக்கு 137 கிலோமீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது.
 • மியான்மர் நாட்டு அரசு, அந்நாட்டின் முதல் சொந்த செயற்கைக்கோளினை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
 • யுனஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேற உள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து யுனஸ்கோ செயல்படுவதாக கூறி, அமேரிக்கா இம்முடிவை எடுத்துள்ளது.

முதன் முதல்

 • முதன் முறையாக இந்தியாவும், அண்டை நாடான நேபாளமும் இணைந்து, வருகின்ற நவம்பர் மாதம், “ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பை” (FOR THE FIRST TIME, NEPAL AND INDIA WILL CONDUCT A JOINT TIGERCENSUS IN THEIR NATIONAL PARKS, FORESTS AND PROTECTED AREASADJOINING THE TWO COUNTRIES) நடத்த உள்ளன. தேசிய பூங்காகள், காடுகள், தடை செய்யப்பட வனப் பகுதிகள் போன்ற பகுதிகளை கொண்ட இருநாட்டு இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
 • ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பின், திட்டங்கள் சார்பான அமைப்பில், “துணை இயக்குனர் ஜெனெரல்” பதவியை பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை, டாக்டர். சவுமியா சுவாமிநாதன் பெற்றுள்ளார்(DR SOUMYA SWAMINATHAN HAS BECOME THE FIRST INDIAN TO HOLDDEPUTY DIRECTOR GENERAL POST FOR PROGRAMMES AT THE WORLD HEALTHORGANISATION (WHO)). இவர் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராக உள்ளார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை, டாக்டர். எம். எஸ். சுவாமி நாதான் அவர்களின் மகளாவார் இவர் (SHE IS DAUGHTER OF MS SWAMINATHAN, THEACCLAIMED GENETICIST AND FATHER OF GREEN REVOLUTION)
 • கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற “வூசு தற்காப்பு கலை உலக சாம்பியன்சிப்” போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை, பூஜா கடியான்” பெற்றுள்ளார். இவர் 75 கிலோ எடைபிரிவில் இதனை வென்றார் (POOJA KADIAN HAS CREATED HISTORY BY BECOMING THE FIRST INDIAN TOCLINCH A GOLD MEDAL AT WUSHU WORLD CHAMPIONSHIPS)
 • உடல் ஊனமுற்றோருக்கான, இந்தியாவின் முதல் தொழிலக பயிற்சி மையம் (INDIAS FIRST-EVER INDUSTRIAL TRAINING INSTITUTE (ITI) FOR THEDIVYANGANS WILL COME UP IN ASSAM), அஸ்ஸாம் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது. 3 பாடங்களுக்கு 6௦ இருக்கைகள் உள்ளவாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • “முதல் ஆசியான் – இந்திய இசைத் திருவிழா” (FIRST EVER ASEAN-INDIA MUSIC FESTIVAL), புது தில்லியில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுடன் உடனான 25 ஆண்டுகால உறவு முறையை பிரதிபலிக்கும் வகையில் இந்த இசைத் திருவிழா நடத்தப்பட்டது.
 • “இந்தியாவின் முதல் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டு கருத்தரங்கம்” (THE FIRST EVER CONFERENCE ON PARTNER NGOs (NON GOVERNMENTAL ORGANISATION), புது தில்லியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் தலைப்பு, “பெண் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றில் செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள்”.
 • சமிபத்தில் கர்நாடகா மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளரான, “கவுரி லங்கேஷ்”, அவர்களுக்கு ரசியாவின் “அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது” வழங்கப்பட்டது. இவ்விருதை பெறும் முதல் இந்தியர் (FIRST PERSON FROM INDIA TO WIN ANNAPOLITKOVSKAYA AWARD) இவராவார். இவருக்கு இறந்த பின்னர் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
 • “முதல் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை பயிற்சி 2௦17” (FIRST ANNUAL BIMSTEC DISASTER MANAGEMENT EXERCISE- 2017(BIMSTEC DMEX-2017) IN NEW DELHI), புது தில்லியில் நடைபெற்றது. இதனை தேசிய பேரிடர் செயல் படை முன்னின்று நடத்தியது.பிம்ஸ்டெக் நாடுகள் என்பன(BIMSTEC GROUPING, NAMELY BANGLADESH,BHUTAN, INDIA, MYANMAR, NEPAL, SRI LANKA AND THAILAND) வங்கதேசம், பூட்டன், இந்தியா, மியான்மர், நேபால், இலங்கை மற்றும் தாய்லாந்து.
 • உயர் கல்விகளில், திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது (RAJASTHAN HAS BECOME THE INDIAS FIRST STATE TO INCORPORATE SKILLDEVELOPMENT PROGRAMME IN HIGHER EDUCATION). இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ராஜஸ்தான் அரசு, அம்மாநிலத்தில் உயர் கல்வி பயில்பவர்களுக்கு இந்த திறன் வளர்ப்பு பயிற்சியை அளிக்க உள்ளது.
 • “உலகின் முதல் எதிர்மறை உமிழ்வு ஆலை” (WORLDS FIRST NEGATIVE EMISSIONS PLANT THAT TURNS CO2 INTOSTONE), ஐஸ்லாந்து நாட்டின் ஹெல்லிஸ்ஹெய்டி நகரில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்பன்-டை-ஆக்சைட், கற்களாக மாற்றப்படுகிறது.
 • “16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை” போட்டிகளில், இந்தியாவின் முதல் கால்பந்து கோலை அடித்த முதல் வீரர் (INDIAS FIRST-EVER GOAL IN A FIFA U-17 WORLDCUP DURING INDIAS MATCH AGAINST COLOMBIA) என்ற சிறப்பை, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஜேக்சன் சிங் என்பவர் பெற்றுள்ளார். இவர் இதனை கொலம்பியா அணிக்கு எதிராக அடித்தார்.
 • ஸ்மார்ட் நகரங்களில் முதல் பிரதான் மந்திரி கவுஷல் கேந்திரா திறன் மையம், புது தில்லியில் திறக்கப்பட்டுள்ளது (INDIAS FIRST PRADHAN MANTRI KAUSHAL KENDRA (PMKK) FORSKILLING IN SMART CITIES)
 • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்பில் இருந்து வெளியேறிய உலகின் முதல் நாடு (BURUNDI HAS BECOME THE FIRST COUNTRY TO WITHDRAW FROM THEINTERNATIONAL CRIMINAL COURT (ICC)) = புருண்டி
 • உலகின் முதல் கலப்பின மின்சார டிராம் வண்டி சீனாவில் (THE WORLDS FIRST HYBRID ELECTRIC TRAM POWERED BY HYDROGEN FUELCELLS HAS STARTED RUNNING IN CHINA) செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படுகிறது.
 • “சோபியா” எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோட்டிற்கு, குடியுரிமை வழங்கியுள்ள உலகின் முதல் நாடாக சவூதி அரேபியா உள்ளது. இது மனித வகை ரோபோட் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published.