TNPSC Current Affairs in Tamil October 2017-Part-3

பொருளாதாரம்

 • உலக வங்கி அமைப்பு, 2017 – 2018ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன்௦% இருக்கும் என அறிவித்துள்ளது
 • சர்வதேச நாணய நிதி மையம், 2017 – 2018ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன்7% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.
 • மியான்மர் நாட்டில், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ள முதல் இந்திய நிறுவனமாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது.
 • “2௦17 முதல் அஞ்சல் ஆயுஸ் திருவிழா” (AYUSH FESTIVAL OF STAMPS 2017), கோவா மாநிலத்தின் பனாஜி நகரில் நடைபெற்றது.
 • “இந்தியாவின் முதல் அகில இந்திய ஆயுர்வேத பல்கலைக்கழகம்” (INDIAS FIRST-EVER ALL INDIA INSTITUTE OF AYURVEDA (AIIA)), புது தில்லியில் பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

வங்கி

 • 2018ம் நிதி ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, “தீனதயாள் அன்தொயோதன திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்” படி, 7.௦% வட்டிக்கு நிது வழங்க வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ராணுவம்

 • இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்கள் இடையேயான, 5-வது கூட்டு போர் பயறிசி ஒத்திகை நிகழ்ச்சி, “மித்ரசக்தி 2௦17” பயிற்சி, மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்றது (THE 5TH INDIA-SRI LANKA JOINT TRAINING EXERCISE MITRA SHAKTI2017 HAS STARTED IN PUNE,MAHARSHTRA)
 • முதல் சர்வதேச முச்சேவை கூட்டு போர் பயிற்சி நிகழ்ச்சியான, “இந்திரா 2௦17” (FIRST-EVER INTERNATIONAL TRI SERVICES JOINT EXERCISE INDRA 2017), ரசியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படையும் பங்கேற்றன.
 • இந்திய மற்றும் அமெரிக்க இணைந்து, “ஹோஸ்டாக்” (INDIA AND THE UNITED STATES HAVE AGREED TO IMPLEMENT HELICOPTEROPERATIONS FROM SHIPS OTHER THAN AIRCRAFT CARRIERS (HOSTAC)PROGRAMME TO STRENGTHEN MARITIME SECURITY) என்ற முறையை கப்பல்படையில் அறிமுகம் செய்து, கடலோர பாதுகாப்பை அதிகப் படுத்த உள்ளன. இது போர் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர் பறப்பதை விட, சாதாரண கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர் பறந்து சென்று வரும் வகயில் மாற்றி அமைத்தல் ஆகும்.
 • வங்கதேச நாட்டினை சேர்ந்த போர் கப்பலான சோமுத்ரா அவிஜன் என்னும் கப்பல், நல்லெண்ண பயணமாக இந்தியாவின் ஆந்திர மாநில விசாகப்பட்டினம் நகருக்கு வந்துள்ளது.

நாட்கள்

 • அக்டோபர் 1 = சர்வதேச முதியோர்கள் தினம்(INTERNATIONAL DAY FOR ELDERS). முதியவர்களின் தேவைகள் அறிந்தும், அவர்களுக்கான முக்கியத்துவத்தை வழங்கவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு = STEPPING INTO THE FUTURE: TAPPING THE TALENTS, CONTRIBUTIONSAND PARTICIPATION OF OLDER PERSONS IN SOCIETY.
 • அக்டோபர் 2 = ஐக்கிய நாடுகள் சர்வதேச அகிம்சை தினம்(UNITED NATIONS INTERNATIONAL DAY OF NON-VIOLENCE). மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை கடைபிடிக்கும் வகயில், இத்தினத்தை ஐக்கிய நாடுகள் அவை ஆண்டு தோறும் அனுசரித்து வருகிறது.
 • அக்டோபர் 2 = காந்தி ஜெயந்தி
 • அக்டோபர் மாத முதல் திங்கட்கிழமை = உலக வாழ்விட தினம்(WORLD HABITAT DAY). இந்த ஆண்டிற்கான கரு = HOUSING POLICIES: AFFORDABLE HOMES. அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை உலக வாழ்விட தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 • அக்டோபர் 4 = உலக விலங்குகள் தினம் (WORLD ANIMAL DAY), அழிந்துவரும் விலங்குகள் இனத்தை காப்பாற்ற ஏதுவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
 • அக்டோபர் 4 – 10 = சர்வதேச விண்வெளி வாரம் (WORLD SPACE WEEK). இந்த ஆண்டிற்கான கரு = EXPLORING NEW WORLDS IN SPACE
 • அக்டோபர் 5 = உலக ஆசிரியர்கள் தினம்(WORLD TEACHERS DAY). இந்த ஆண்டிற்கான கரு = TEACHING INFREEDOM, EMPOWERING TEACHERS

 

 • அக்டோபர் 10 – 14 = இந்திய தண்ணீர் வாரம் (INDIA WATER WEEK). குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், 5-வது இந்திய தண்ணீர் வாரத்தை, புது தில்லியில் துவக்கி வைத்தார். இந்த ஆண்டிர்கான் கரு = WATER AND ENERGY FOR INCLUSIVE GROWTH

 

 • அக்டோபர் 1௦ = உலக மனநல தினம்(WORLD MENTAL HEALTH DAY (WMHD)). மனநலம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக இத்தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1௦ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு = MENTAL HEALTH IN THE WORKPLACE
 • அக்டோபர் 11 = சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (INTERNATIONAL DAY OF THE GIRL CHILD (IDGC)). இந்த ஆண்டிற்கான கரு = EMPOWER GIRLS: BEFORE, DURING AND AFTERCRISES
 • அக்டோபர் 13 = சர்வதேச பேரிடர் தணிப்பு தினம் (INTERNATIONAL DAY FOR DISASTER REDUCTION (IDDR). பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பு விவரங்களை எடுத்துக் கூறும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு = HOME SAFE HOME: REDUCING EXPOSURE, REDUCINGDISPLACEMENT
 • அக்டோபர் 15 = ஊரகப் பெண்களுக்கான சர்வதேச தினம் (2017 INTERNATIONAL DAY OF RURAL WOMEN). இந்த ஆண்டிற்கான கரு = CHALLENGES AND OPPORTUNITIES IN CLIMATERESILIENTAGRICULTURE FOR GENDER EQUALITY AND THE EMPOWERMENT OFRURAL WOMEN AND GIRLS
 • அக்ரோபர் 15 = உலக கைகழுவுதல் தினம் (GLOBAL HANDWASHING DAY(GHD))
 • அக்டோபர் 16 = உலக உணவு தினம். இந்த ஆண்டின் கரு = CHANGE THE FUTURE OF MIGRATION.INVEST IN FOOD SECURITY AND RURAL DEVELOPMENT
 • அக்டோபர் 16 = உலக முதுகெலும்பு தினம். இந்த ஆண்டிற்கான கரு = YOUR BACKIN ACTION
 • அக்டோபர் 17 = சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்(INTERNATIONAL DAY FOR THE ERADICATION OF POVERTY (IDEP)
 • அக்டோபர் 21 = தேசிய காவலர் நினைவு தினம் (NATIONAL POLICE COMMEMORATION DAY (NPCD))
 • அக்டோபர் 24 = உலக போலியோ தினம்.
 • அக்டோபர் 24 = ஐக்கிய நாடுகள் அவைகள் தினம்
 • அக்டோபர் 24 = இந்திய – திபத்திய எல்லைப் பாதுகாப்பு படை உதித்த தினம்
 • அக்டோபர் 31 = தேசிய ஒற்றுமை தினம் (ராஸ்ட்ரிய ஏக்தா திவாஸ்), இந்தியாவின் இரும்பு மனிதர் எனபப்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம்.

Leave a Comment

Your email address will not be published.