TNPSC Current Affairs in Tamil October 2017-Part-5

இடங்கள்

 • “3-வது இந்தியப் பெண்கள் கரிமத் திருவிழா” (3RD EDITION OF WOMEN OF INDIA ORGANIC FESTIVAL), புது தில்லியில் நடைபெற்றது. இயற்கை வேளாண்மைத் துறையில் பெண் தொழில் முனைவோர்களை ஈடுபடுத்தி மற்றும் விவசாயிகளை மேம்படுத்துதல், இதன் நோக்கம் ஆகும். இத்திருவிழாவின் கரு = GOOD FOR WOMEN, GOOD FOR INDIA, GOOD FOR YOU.
 • “2௦17 உலக பல் கண்காட்சி” (WORLD DENTIST EXHIBITION 2017), என்ற சர்வதேச கண்காட்சி மும்பை நகரில் நடைபெற்றது. பல் மருத்துவ துறையல் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதற்கான நவீன அறிவியல் உபகரணங்கள் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
 • 2௦19 ஏ.எப்.சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளை (THE 2019 AFC ASIAN CUP FOOTBALL TOURNAMENT WILL BE HOSTED BYUNITED ARAB EMIRATES) நடத்த ஐக்கிய அரபு எமிரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • “2௦17 சார்வதேச கைப்பாவை (பொம்மை) திருவிழா” (INTERNATIONAL PUPPET FESTIVAL (IPF-2017)), மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்றது.
 • 2018ம் ஆண்டின் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் (36TH EDITION OF NATIONAL GAMES OF INDIA), கோவா மாநிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

 • தேசிய கடின கள டென்னிஸ் போட்டிகள் (NATIONAL HARD COURT TENNIS CHAMPIONSHIP), புது தில்லியில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற தட்சினேஸ்வர் சுரேஷ் கலந்துக் கொண்டார்.
 • 16 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஓபன் ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டிகளின் பெண்கள் பிரிவில், இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன்(ANUPAMA RAMACHANDRAN FROM INDIA HAS CLINCHED THE WORLDOPEN UNDER-16 SNOOKER CHAMPIONSHIP TITLE), உலகின் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் கீர்த்தனா பாண்டியனை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போட்டிகள் ரசியாவின் செயின்ட் பீடர்ஸ்பார்க் நகரில் நடைபெற்றன.
 • 2௦17 சீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் ரபேல் நடால், நிக் கைக்ரோயிசை வீழ்த்தி சாம்பியன் பட்டதை (RAFAEL NADAL, A SPANISH PROFESSIONAL TENNIS PLAYER, HAS WON THE2017 CHINA OPEN TENNIS TOURNAMENT) கைப்பற்றினார். இப்போட்டிகள் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது.
 • “செலேனா செல்வகுமார்” என்னும் இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை, எகிப்தில் நடைபெற்ற “எகிப்து ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப்” (SELENA SELVAKUMAR HAS WON TRIPLE GOLDMEDAL AT THE EGYPT JUNIOR AND CADET OPEN TABLE TENNISCHAMPIONSHIP 2017) போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒற்றரையர் பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் அணி பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்
 • 2௦17 ஷாங்காய் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் (2017 SHANGHAI MASTERS TENNIS TOURNAMENT)போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜெர் பெடரர், ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.
 • 2௦17 ஆண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, மலேசிய அணியை (INDIA HOCKEY TEAM HAS WON THE MENS HOCKEY ASIA CUP TOURNAMENT 2017) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
 • 2௦17 மக்காவ் ஓபன் கோல்ப் போட்டிகளில்(2017 MACAO OPEN GOLFTOURNAMENT), இந்தியாவின் ககன்ஜீத் புல்லர், இரண்டாவது முறையாக கோப்பையை வென்றார்.
 • 2௦17 டென்மார்க் ஓபன் சூப்பர் சீரியஸ் பாட்மிண்டன்(2017 DENMARK OPENSUPERSERIES BADMINTON TOURNAMENT) போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், தென் கொரிய வீரரை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 • 2௦17 பிபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி போட்டி கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இதில் இளம் இங்கிலாந்து அணி (ENGLAND HAS WON THEIR FIRST-EVER FIFA UNDER-17 WORLD CUP BYDEFEATING EUROPEAN CHAMPIONS SPAIN IN THE FINAL), ஸ்பெயின் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டதை கைப்பற்றியது.
 • 5-வது ப்ரோ கபடி லீக் சாம்பியன்சிப் போட்டிகளின்(5TH EDITION OF PRO KABADDI LEAGUE(PKL) 2017) இறுதி ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது.
 • பிரெஞ்ச் ஓபன் சீரியஸ் பாட்மிண்டன் போட்டிகளின் ஒற்றையர் பிரிவில் (MENS SINGLES TITLEOF THE FRENCH OPEN SUPERSERIES BADMINTON TOURNAMENT 2017), இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரரை வீழ்த்தி சாம்பியன்சிப் பட்டதை வென்றார்.

விருதுகள்

 • தகவல் தொழில்நுட்பத் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வுகளை உருவாக்கியதற்காக, லண்டன் நகரில் நடைபெற்ற விழாவில், இந்திய வம்சாவழியை சேர்ந்த கானா நாட்டு தொழில் அதிபரான, பிரேந்திர சஸ்மால் அவர்களுக்கு, இந்த ஆண்டின் “சிறந்த வர்த்தக நபர் விருது” (INTERNATIONAL BUSINESS PERSON OF THE YEAR) வழங்கப்பட்டது
 • 2௦17ம் ஆண்டிற்கான “மருத்துவ நோபல் பரிசை” வென்றவர்கள், அமெரிக்காவை சேர்ந்த மூவருக்கு ஒருங்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜெப்ப்ரி சி.ஹால், மைக்கேல் ரோச்பாஸ் மற்றும் மைக்கேல் யங்(AMERICAN TRIO OF JEFFREY C. HALL (USA), MICHAEL ROSBASH (USA) AND MICHAEL W. YOUNG (USA)) ஆவர். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவை உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்தும் மூலக்கூறு இயக்கியவியலை (DISCOVERIES ON HOW PLANTS, ANIMALS AND HUMANSADAPT THEIR BIOLOGICAL RHYTHM SO THAT IT IS SYNCHRONISED WITH THEEARTHS REVOLUTIONS) கண்டறிந்தனர். தூக்கம், உணவு முறை, ஹார்மோன்கள் மற்றும் உடல் வெப்ப நிலையை முறைபடுதும் உயிரியல் கடிகாரங்கள் அமைத்தலில் ஜீன்களின் பங்களிப்பை இவர்கள் வெளிப்படுத்தினர். பழ வண்டுகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு   உயிரி கடிகாரத்தை இயக்கும் மரபணுவை (USING FRUIT FLIES AS A MODEL ORGANISM, THEY ISOLATEDA GENE THAT CONTROLS THE DAILY BIOLOGICAL RHYTHM) இவர்கள் கண்டறிந்தனர்.
 • வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜேக்கேஸ் டுபோசெட், ஜெர்மனியின் ஜோசிம் பிரான்க் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டின் ரிச்சர்ட் ஹென்டர்சன் (JACQUES DUBOCHET (SWITZERLAND), JOACHIM FRANK (GERMANY) AND RICHARD HENDERSON (SCOTLAND)) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வைரஸ் நோய்கள் மற்றும் மூளை நோய்கள் போன்றவற்றை உருவாக்கும் நொதிகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்டறிய உதவும் கிரியோ – எலெக்ட்ரான் நுண்நோக்கியை உருவாக்கியதற்காக (DEVELOPING CRYO-ELECTRON MICROSCOPY FOR THE HIGH-RESOLUTIONSTRUCTURE DETERMINATION OF BIOMOLECULES IN SOLUTION) இவர்களுக்கு இந்த நாடு நோபல் பரிசு வழங்கப்பட்டது. முப்பரிமான பதிவு முறையை அடிப்படையாக கொண்டு இந்த நுண்ணோக்கியை இவர்கள் கண்டுபிடித்தனர். இதன் குளிர்விப்பு முறை முறையில், செல்கள் குளிர்விக்கபப்ட்டு அதன் நொதிகள் ஆராயப்படுகிறது.
 • இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ரெய்னர் வேய்ஸ், கிப் தார்ன் மற்றும் பேரி பெரிஷ் ஆவர்(THE 2017 NOBEL PRIZE IN PHYSICS HAS BEEN JOINTLY AWARDED TOTHREE US SCIENTISTS RAINER WEISS, KIP S. THORNE AND BARRY C.BARISH FOR THE DETECTION OF GRAVITATIONAL WAVES). லேசர் ஒளியலை அளவுமானி புவியீர்ப்பு அலை நோக்கு கூடம் எனப்படும் லிகோ, ஆய்வகத்தில் அவர்கள் அளித்த தீர்க்கமான பங்களிப்பு மற்றும் அண்டவெளியில் ஈர்ப்பு அலைகள் உண்டாக்குவதை உறுதி செய்த கண்டுபிடிப்பிற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 • இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரிட்டிஷ் எழுத்தாளர் கசுவோ இஷிகுரோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் ஜப்பானை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவரின் “தி பரிட் ஜெயின்ட்”(THE BURIED GIANT) என்ற நாவலுக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மேன் புக்கர் பரிசை(HE WON THE BOOKER PRIZE IN 1989 FOR THE REMAINS OF THE DAY AND MADE AN ORDER OF THE BRITISH EMPIRE) ஏற்கனவே வென்றவர் ஆவார்.
 • சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரச்சார அமைப்பு எனும் ஜெனிவாவை சேர்ந்த அமைப்புக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது (THE 2017 NOBEL PEACE PRIZE HAS BEEN AWARDED TO INTERNATIONALCAMPAIGN TO ABOLISH NUCLEAR WEAPONS (ICAN) FOR ITS WORK TODRAW ATTENTION TO THE CATASTROPHIC HUMANITARIAN CONSEQUENCES OFANY USE OF NUCLEAR WEAPONS AND FOR ITS GROUND-BREAKING EFFORTSTO ACHIEVE A TREATY-BASED PROHIBITION OF SUCH WEAPONS). இந்த அமைப்பானது சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையின் கீழ் அணு ஆய்தத்திற்கு எதிராக போராடிவரும் உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள அரசு சார நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும்.
 • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் எச்.தலேர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பொருளியலுக்கும் உளவியலுக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை கூறும், “நடத்தையியல் பொருளாதாரம்” (THE 2017 NOBEL PRIZE IN ECONOMIC SCIENCES HAS BEEN AWARDEDTO RICHARD H. THALER FOR HIS CONTRIBUTIONS TO BEHAVIOURALECONOMICS)பற்றிய இவரின் கருத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 • ஜெர்மனி நாட்டின் மிக உயரிய விருதான, CROSS OF THEORDER OF MERIT என்ற விருது, இந்தியாவை சேர்ந்த வி.டி.எம்.ஏ நிறுவன இயக்குனர் ராஜேஷ் நாத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17 வயலார் ராமவர்மா இலக்கிய விருது” (2017 VAYALAR RAMAVARMA LITERACY AWARD) டி.டி.ராமகிருஷ்ணன், அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • பொது நிர்வாகம், கல்வியியல் மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கியதர்கான 2௦17 லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய விருது (DR. BINDESHWAR PATHAK HAS BEEN BESTOWED WITH THE 18TH EDITIONOF LAL BAHADUR SHASTRI NATIONAL AWARD FOR EXCELLENCE IN PUBLICADMINISTRATION, ACADEMICS AND MANAGEMENT FOR YEAR 2017), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால், திரு பிந்தேஸ்வர் பதக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17 மாத்ருபூமி இலக்கிய விருது”, எம்.கே.சானு என்பவருக்கு வழங்கப்பட்டது (M K SANU, THE CHOSEN FOR THE MATHRUBHUMI LITERARY AWARD FOR 2017)
 • “2௦15-16ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது” (INDIRA GANDHI AWARD FOR NATIONAL INTEGRATIONFOR 2015 -16), கர்நாடகா இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17 அமெரிக்க பசார் மனிதநேய விருது” (2017AMERICAN BAZAAR PHILANTHROPY AWARD), இந்திய வம்சாவழியை சேர்ந்த அஜய் ராசு என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17 மேன் புக்கர் விருது” (US AUTHOR GEORGE SAUNDERS HAS WON THE 2017 MAN BOOKERPRIZE), அமெரிக்காவை சேர்ந்த “ஜியார்ஜ் சாண்டர்ஸ்” என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரின் முழு நீள நாவலான LINCOLN IN THE BARDOஎன்பதற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதை பெறும் இரண்டாவது அமெரிக்கவர் இவராவார்.
 • மலையாள இலக்கிய உலக விருதான “2௦17 பத்ம பிரபா புரஸ்கராம் விருது” (2017 PADMA PRABHA PURASKARAM), பிரபா வர்மா வர்களுக்கு வழங்கப்பட்டது
 • “2௦17 நீளக் கோல் பரிசு” (PROF HANS JOACHIM SCHELLNHUBER FROM GERMANY HAS WON THE2017 BLUE PLANET PRIZE), ஜெர்மனி நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஹன்ஸ் ஜோகிம் ஷெல்ஹுபர் அவர்களுக்கு, புவி ஆராய்ச்சி தொடர்பான புதிய பிரிவை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டது.
 • “2௦17 ஐ.எச்.வி வாழ்நாள் சாதனையாளர் விருது” (2017 IHV LIFETIMEACHIEVEMENT AWARD FOR AIDS RESEARCH), எயிட்ஸ் நோய்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டதற்காக, இந்திய வம்சாவழியை சேர்ந்த தென் ஆப்ரிக்க மருத்துவ தம்பதிகளான சலீம் அப்துல் கரீம் மற்றும் குரைசா அப்துல் கரீம் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
 • “2௦17 ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது” (2017 HRIDAYNATH MANGESHKAR AWARD) பிரபல இந்தி மொழி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • “2௦17ம் உலக உணவு விருது”(WORLD FOOD PRIZE 2017), ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவரான அகின்வுமி அடேசினா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • அசம் சாகித்ய சபா சார்பில் வழங்கப்பட்ட “முதல் நூற்றாண்டு இலக்கிய தேசிய விருது” (FIRST CENTENARY NATIONAL AWARD FOR LITERATURE), பிரபல எழுத்தாளர் நமிதா கோகலே அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published.