TNPSC Current Affairs in Tamil October 2017-Part-6

அறிவியல்

 • “3-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா” (THE 3RD EDITION OF THE INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL (IISF-2017) IN CHENNAI, TAMILNADU), தமிழ்நாட்டின் சென்னை நகரில் நடைபெற்றது. இதன் நோக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் பங்களிப்பை உலகமுழுவதும் எடுத்தக் கூறுதல் ஆகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ஊரகப் பகுதிகளில் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்துதல்.
 • இந்திய விமானப்படை, புதிய சுகாதார மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது (THE INDIAN AIR FORCE (IAF) HAS LAUNCHED AN INNOVATIVE MOBILEHEALTH APP MEDWATCH TO PROVIDE AUTHENTIC HEALTHINFORMATION). MEDWATCH என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, தானாகவே நேரத்திற்கு ஏற்ற மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை விவரங்களை ஞாகபப்படுத்தும்.
 • கடல்சார் செயல்பாடுகளின் போது வேண்டிய பாதுகாப்பு தொடர்பான எச்செரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க கடலோரப் பகுதி மக்களுக்கு குறிப்பாக, மீனவ சமுதாயத்திற்கு வழங்குவதற்காக மத்திய அரசு, “சாகர் வாணி” என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
 • “பரிவார் விகாஸ்” திட்டத்தின் கீழ், இலவச கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்தாரா, சையா என்னும் இரண்டு இலவச கருத்தடை மருந்துகள் வழங்கப்படும்.

நியமனம்

 • பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக ரஜ்னிஷ் குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஐக்கிய நாடுகளின் “யுனஸ்கோ” அமைப்பின் புதிய இயக்குனர் ஜெனெரலாக பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஆட்ரே அசோலே அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (AUDREY AZOULAY, THE NEW DIRECTOR-GENERAL (DG) OF UNITEDNATIONS EDUCATIONAL, SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION(UNESCO))
 • மத்திய புலனாய்வுத்துறை எனப்படும் சி.பி.ஐ-யின் புதிய சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (NEW SPECIAL DIRECTOR OF CENTRALBUREAU OF INVESTIGATION (CBI))
 • பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கவுதம் பம்பாவாலே, தற்போது சீனாவிற்கான இந்தியத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒப்பந்தம்

 • கரக்பூர், அகில இந்திய தொழில்நுட்ப கழகம், தந்து வளாகத்தில் டிஜிட்டல் அகாடெமி அமைக்க, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
 • இந்தியா மற்றும் லித்துவானியா இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
 • மியான்மர் நாட்டில் உள்ள ஏமேதின் என்னும் இடத்தில உள்ள பெண் காவலர்கள் பயிற்சி மையத்தை மேம்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

மறைவு

 • பிரபல வரலாற்று நூல் ஆசிரியரான, பேராசிரியர் சதீஸ் சந்திரா, காலமானார். இவரின் “இடைக்கால இந்திய வரலாறு” (HISTORY OF MEDIEVAL INDIA)புத்தகம், இந்திய அரசின் பள்ளிப் பாடப்புத்தகமாக இருந்தது.

திட்டம்

 • புது தில்லியில் நடைபெற்ற, “உலக வனவிலங்கு திட்டக் கருத்தரங்கில்(WORLD WILDLIFE PROGRAMME CONFERENCE), மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்புடன் சேர்ந்து, பாதுகாப்பான இமயமலை(SECURE HIMALAYAS PROJECT) திட்டத்தை துவக்கி வைத்தார். இமயமலை சுற்றுச்சூழலை போற்றி பாதுக்காத்து, அதன் வனவாழ்வு, இயற்கை அரண்கள் போன்றவற்றை பேணிக்காத்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.
 • கர்நாடகா மாநில அரசு, அம்மாநிலத்தில் ஊரகப் பகுதியில் உள்ள கர்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க ஏதுவாக, மாத்ரு பூர்ணா(THE KARNATAKA GOVERNMENT HAS LAUNCHED MATHRU POORNASCHEME TO MEET THE NUTRITIONAL NEEDS OF PREGNANT AND LACTATINGWOMEN IN RURAL AREAS) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாதத்தில் 25 நாட்களுக்கு சத்தான உணவு வகைகள் கர்பிணி பெண்களுக்கு வழங்கப்படும்
 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், 1௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள மாதா அமிர்தஆனந்தமாயி மடத்தின் “ஜீவாமிர்தம்” (PRESIDENT RAM NATH KOVIND HAS LAUNCHED RS 100 CRORE MATAAMRITANANDAMAYI MATH PROJECT JEEVAMRITHAM IN KOLLAMDISTRICT OF KERALA TO PROVIDE THE FILTRATION SYSTEM FOR CLEANINGDRINKING WATER TO 5000 VILLAGES ACROSS INDIA)திட்டத்தை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். நாட்டில் உள்ள பல்வேறு 5௦௦௦ கிராமங்களுக்கு தூய குடிநீர் கிடைக்க ஏதுவாக சுத்திகரிப்பான் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 • உத்திரகாண்டு மாநில அரசு, அம்மாநிலத்தில், “சூரியப் பெட்டி” (THE UTTARAKHAND GOVERNMENT LAUNCHED SOLARBRIEFCASE IN KEDARNATH DHAM TO PROVIDE ELECTRICITY TO FAR-FLUNGAREAS IN THE HILL STATE) என்ற திட்டத்தின் மூலம், மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவ முன்வந்துள்ளது.
 • மத்திய எரிசக்தி துறை மற்றும் ஜவுளித் துறை அமைகாஹ்கம் இணைந்து, “சாத்தி” (SAATHI =  SUSTAINABLE ANDACCELERATED ADOPTION OF EFFICIENT TEXTILE TECHNOLOGIES TO HELPSMALL INDUSTRIES) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இதன் படி, “எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்” அமைப்பு, சிறிய மற்றும் நடுத்தர யூனிட்களுக்கு வெளிப்படையான செலவில் எரிசக்தி செயல்திறன் மிக்க ஆற்றல் சாதனங்களை வழங்கும்.
 • “பிரதம மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான்”(PMGDISHA PRADHAN MANTRI GRAMEEN DIGITAL SAKSHARATHA ABHIYAAN) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தின் நோக்கம், வருகின்ற 2௦19ம் ஆண்டிற்குள், 6 கோடி கிராம மக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குதல் ஆகும். இது இந்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது உலகின் மிகபெரிய டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும்.
 • கேரள மாநில அரசு, அம்மாநிலத்தில் “மிசன் ரைஸ்” என்ற திட்டத்தை கொண்டுவந்து, வயநாட்டு பகுதியில் அழியும் நிலையில் உள்ள ஏழு உள்நாட்டு அரிசி வகைகளை, விதைகளை பாதுகாத்து, உற்பத்தி செய்து பெருக்குவது, இதன் முக்கிய நோக்கமாகும்.

குறியீடு

 • வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், “சர்வதேச உணவு கொள்கை மற்றும் ஆராய்ச்சி கழகம்” சார்பில் வெளியிடப் பட்டுள்ள “உலக பட்டினி குறியீடு 2௦17”ல், மொத்தம் 119 நாடுகள் பட்டியிலடப்பட்டன. இதில் மிகவும் பின்தங்கி இந்தியா 1௦௦வது இடத்தையே(INDIA HAS BEEN RANKED 100TH OUT OF 119 COUNTRIES IN THE 2017GLOBAL HUNGER INDEX (GHI) REPORT, WHICH IS RELEASED BYWASHINGTON-BASED INTERNATIONAL FOOD POLICY RESEARCH INSTITUTE(IFPRI)) பிடித்துள்ளது. முதல் 3 இடங்கள் = பெலாரஸ், போஸ்னியா மற்றும் சிலி ஆகியவை உள்ளன.
 • ஆர்டன் கேபிடல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட, “உலகளாவிய பாஸ்போர்ட் சக்தி தரவரிசை 2௦17”ன் படி, இந்திய பாஸ்போர்ட்களின் மதிப்பு 94 நாடுகளில் 75-வது இடத்தையே பிடித்துள்ளது. உலகின் அதிக சக்திமிக்க பாஸ்போர்ட், சிங்கப்பூர் நாட்டினை உடையதாகும் (INDIAS PASSPORT HAS BEEN RANKED 75TH OUT OF 94 COUNTRIES WITH AVISA-FREE SCORE OF 51, ACCORDING TO THE GLOBAL PASSPORT POWERRANK 2017)

 

 • “2௦17 உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசாநோய் அறிக்கையில்” (WORLD HEALTH ORGANISATION (WHO)S GLOBAL TBREPORT 2017), இந்தியா முதல் இடத்தில உள்ளது. உலக அளவில் காசநோய் அதிகம் உள்ளாகும் நாடு இந்தியாவாகும். இரண்டாவது இடத்தில இந்தோனேசியா உள்ளது. மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது.

Leave a Comment

Your email address will not be published.