TNPSC Current Affairs in Tamil September 2017- Part-1

இந்தியா

  • குழந்தை தொழிலாளர் தொடர்பான தேசிய மாநாட்டில், “குழந்தை தொழிலாளர் (PENCIL – PLATFORM FOR EFFECTIVE ENFORCEMENT FOR NO CHILD LABOUR) போர்ட்டலுக்கான சிறந்த அமலாக்கத்திற்கான” புதிய இயங்குதளத்தை மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மொபைல் எங்களை ஆதார் என்னுடன் இணைக்க மத்திய அரசு, இறுதி கெடுவாக வரும் பிப்ரவரி மாதத்தை அறிவித்துள்ளது.
  • இந்திய எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (EESL – ENERGY EFFICIENCY SERVICES LIMITED), “உஜாலா” (UJALA – UNNATI JYOTI BY AFFORDABLE LIGHTNING FOR ALL) திட்டத்தை, மலேசியாவின் மேல்கா மாகணத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் உஜாலா திட்டத்தை ஏற்றுள்ள இரண்டாவது நாடு மலேசியா ஆகும். முதல் நாடு, ஐக்கிய ராஜிய பிரிட்டன் ஆகும்.
  • இந்தியா, ரஸ்யாவுடன் இணைந்து வங்கதேசத்தில், அந்நாட்டின் முதல் அணு உலையை கட்டித் தர உள்ளது. மூன்றாவது நாட்டினில் இந்தியா – ரசிய இணைந்து மேற்கொள்ளும் முதல் அணுஉலை திட்டம் இதுவாகும். “ரூப்பூர் அணு உலை” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள, “ரோகிங்கயா முஸ்லிம்கள்”, வங்கதேசத்தில் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “ஆப்பரேசன் இன்சனியாத்” (OPERATION INSANIYAT) என்ற பெயரில் வங்கதேசத்திற்கு உதவிகளை மேற்கொண்டுள்ளது.
  • இந்தியாவின் சென்னை நகர துறைமுகத்தில் இருந்து, வடகிழக்கு ஆசிய மற்றும் மேற்கு பசிபிக் கடல் வழியாக சென்று, ரசியாவின் விளாடிவோஸ்டாக் நகர துறைமுகத்திற்கு சரக்கு சேவை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா வழியாக மேற்கொள்வதால் ஏற்படும் நாற்பது நாள் பயணத்தை, இவ்வழி மூலம் இருபத்தி நான்கு நாட்களில் அடைய முடியும்.
  • எகிப்து தலைநகர் கெய்ரோவில், “வியத்தகு இந்தியா” என்ற தலைப்பில் புதிய இயக்கத்தை இந்தியா துவங்கியுள்ளது. இந்தியாவில் விடுமுறை கால சுற்றுலாவில் காணக்கூடிய இடங்களை எடுத்துக் கூறி, அந்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்தல் இதன் நோக்கமாகும்.
  • 6௦௦ ஆண்டுகள் பழமையான குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சுவர் நகரம், யுனஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது (600-YEAR-OLD WALLED CITY IN GUJARAT’S AHMEDABAD HAS BEEN FORMALLY ACCORDED STATUS OF INDIA’S FIRST WORLD HERITAGE CITY BY UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION (UNESCO)). இது இந்தியாவின் முதல் யுனஸ்கோ பாரம்பரிய நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது 15ம் நூற்றாண்டில், குஜராத்தை ஆண்ட சுல்தான் மன்னர், அகமது ஷா அவர்களால் கட்டப்பட்டது. இது சபர்மதி ஆற்றில் கரையில் அமைந்துள்ளது. பாரம்பரிய நகர அந்தஸ்தை பெற்றுள்ள இது, 3-வது ஆசிய நகரம் ஆகும். முதல் இரண்டு நகரங்கள் = நேபாளத்தின் பக்தாபூர் மற்றும் இலங்கையில் கல்லி நகரம் ஆகும்.
  • ராஜஸ்தான் மாநிலதி ஜெய்பூர் நகரில், “வஸ்த்ரா” (INTERNATIONAL TEXTILE AND APPAREL FAIR NAMED VASTRA) என்ஜ்ரா பெயரில் சர்வதேச ஜவுளி மற்றும் ஆடைகள் விழா நடைபெற்றது.
  • ஆந்திர மாநில அரசு, அவ்வொரு வெள்ளிக் கிழமையும், “உதவும் கைகள் தினம்” (DAY OF HELPING HAND) என்ற முறையை கொண்டுவந்துள்ளது. ஏழைகள் மற்றும் வறுமையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்தல் இதன் நோக்கமாகும்
  • ஆந்திர மாநில அரசு, 2௦17ம் ஆண்டை “மின்-பிரகதி” (ANDHRA PRADESH GOVERNMENT DECLARED 2017 AS E-PRAGATI YEAR) ஆண்டாக அறிவித்துள்ளது. சிறந்த ஆட்சி முறையை அளிக்க இது அறிவிக்கப்பட்டுள்ளது
  • இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், முதலாம் நூற்றாண்டை சேர்ந்த புத்த மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்த பகுதியை, ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்
  • லட்சத்தீவுகளில் உள்ள, “பிரகதி முதல் தீவு”, கடல் ஏற்றதால், மூழ்கியது. கடல் அரிப்பு போன்ற காரணங்களால் விரைவில் லட்சத்தீவுகளில் உள்ள நான்கு சிறிய தீவுகள் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளன
  • ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடைபெற்ற, “முதல் ராஸ்ட்ரிய ஆயுர்வேத யுவ மகோத்சவ” நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மாணவர்கள் ஒன்றிணைந்து, “நஸய பஞ்ச கர்மா” (‘NASYA PANCHAKARMA’ TREATMENT AT 1ST RASHTRIYA AYURVED YUVA MAHOTSAV ORGANISED BY NATIONAL AYURVEDA STUDENT YOUTH ASSOCIATION (NASYA)) சிகிச்சையை, அதிகமான மாணவர்கள் எடுத்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
  • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர், மும்பை நகரங்களில் உள்ள ஏழைகள் உள்ள வார்டுகளை கண்டறிந்து, “மிசன்-24” 0020 என்ற பெயரில் அடுத்த 24 மாதங்களில் அங்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்தை துவங்கி உள்ளார்
  • மகாராஷ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தில் நகரப் பகுதி முழுவதும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், “திறந்தவெளி கழிப்பிடமில்லா” (GOVERNMEN DECLARED URBAN MAHARASHTRA OPEN DEFECATION FREE (ODF) UNDER HE SWACCH BHARAT MISSION) நிலையை எட்டி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரிய மாநிலங்கள் பட்டியலில், நகரப் பகுதியில் தூய்மை நிலையை அடைந்த மூன்றாவது மாநிலம் என்ற சிறப்பை மகாராஷ்டிரா பெற்றுள்ளது.
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள 2௦17ம் ஆண்டிற்கான உயர்கல்வி நிலையங்களில் ச்வச்தா தரவரிசை (SWACHTA RANKING 2017 OF HIGHER EDUCATIONAL INSTITUTIONS) பட்டியல்
    • பல்கலைக்கழகம் – ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் உள்ள ஓ.ப்.ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம்
    • கல்லூரி – தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    • தொழில்நுட்ப கழகம் – தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டதில் உள்ள அம்ரிதா விஸ்வ வித்யாபீட தொழில்நுட்ப கல்லூரி
    • அரசு நிறுவனம் – உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜி.பி.பண்ட வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி
  • 2018ம் ஆண்டிற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்காத மொபைல் எண்களின் சேவைகள் துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • கர்நாடகா மாநில அரசு, அம்மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை, அரசு மற்றும் நிதி உதவி பெறும் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
  • மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம், குஜராத்தின் கண்டலா துறைமுக கழகத்தை, தீனதயாள் துறைமுக கழகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றி அறிவித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி, உலகின் இரண்டாவது மிகபெரிய மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய அனையான, “சர்தார் சரோவர் அணையை”, குஜராத்தில் திறந்து வைத்தார். இது நர்மதை ஆற்றில் நடுவில் கட்டப்பட்டுள்ளது.
    • இது 1.2 கிலோமீட்டர் நீளமுடையது மற்றும் 163 மீட்டர் ஆழமுடையது.
    • இதன் மூலம் 18 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசனப் பயன் பெறும்
    • குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இருந்து, குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி தலைமையில் “நர்மதா மகோத்சவ யாத்திரை” நடைபெற்றது
    • இந்த அணையில் இருந்து உறபத்தி செய்யப்படும் மின்சாரம் குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படும்
    • உலகின் மிகப்பெரிய ஆணை = அமெரிக்காவின் கிராண்ட் கவுலி அணை ஆகும்
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் புதிதாக சிரிடி விமான நிலையத்தை துவக்கி வைத்தார்
  • “சவுனி” திட்ட கால்வாய் இணைப்பு பணியை, குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார். குஜராத் மாநிலத்தின் வறட்சி பகுதியான சவுராஷ்டிரா பகுதியில், வறட்சியை சமாளிக்க சவுனி திட்டம் கொண்டுவரப்பட்டது (SAURASHTRA NARMADA AVATARAN IRRIGATION SCHEME (SAUNI) YOJANA)
  • நிதி ஆயோக் அமைப்பு தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் ஊட்டச்சத்து குறைவு, நாட்டில் படிப்படியாக குறைக்கப்பட்டு முழுவதுமாக நீக்கப்படும்.
  • மத்திய அரசு நிறுவனமான, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், எட்டாவது மகாரத்னா நிறுவனமாக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் சுமார் 5௦ ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சக்மா, ஹஜோங் அகதிகள் ஒரு லட்சம் பேருக்கு விரைவில் இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • செப்டெம்பர் 25, சமூக சேவகரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினம். பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு உடையவர். இத்தினத்தை முன்னிட்டு, உத்திரப் பிரதேச அரசு, 1௦௦ கைதிகளை விடுதலை செய்தது.
  • உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏ.டி.ஏ.ஜி.எஸ் (ATAGS – ADVANCED TOWED ARTILLERY GUN SYSTEM) எனும் மேம்படுத்தப்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கிகள் 48 கிலோ மீட்டர் தூரமுடைய இலக்கினை தாக்கி சாதனை படைத்தது. தனியார் துறை மற்றும் இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த பீரங்கி துப்பாக்கி உருவாக்கப்பட்டது.
  • காஸ்மீர் மாநிலத்தின் குரூஸ் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்கள், “ஆபெரேசன் சாத்பாவனா”வில் கலந்துக் கொண்டனர். சாத்பாவனா என்பது இந்திய ராணுவத்தின் 1௦9 படைப்பிரிவுகள் நடத்தும் ஒரு சுற்றுலாவாகும். இதன் நோக்கம் இளைஞர்கள் இடையே நம்பிக்கையையும் எழுச்சியையும் தேச ஒற்றுமைக்காக மேம்படுத்தல் ஆகும்.

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.