TNPSC Current Affairs in Tamil September 2017- Part-2

தமிழகம்

 • தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வரிலால் புரோஹித் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்கான “ஆபரேசன் சாகர் கவச்’ என்னும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டது
 • தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில், “அந்தரா”, என்ற திட்டத்தின் கீழ் உட்செலுத்தக்கூடிய கருத்தடை மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
 • சமீபத்தில் வெளியிடப்பட்ட மாதிரி பதிவுகள் புல்லட்டின் (SRS) படி, இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் குழந்தை இறப்பு விகிதத்தில் (IMR) குறிப்பிடத்தக்க அளவாக 8% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் IMR ஆனது, 2015 ல் 1000 பிறப்புக்கு 37 என்றார் அளவில் இருந்து தற்போது குறைந்து, 2016 ஆம் ஆண்டில் 1000 பிறப்புக்கு 34 ஆக உள்ளது
 • 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகத்தில் கொண்டாடப்படும், “காவேரி மகா புஷ்கரம்” நிகழ்ச்சி தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒரு நதி வீதம் கொண்டாடப்படும் இவ்விழா, இந்த ஆண்டு காவிரி அன்னைக்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
 • இந்திய ரிசர்வ் வங்கி, முன்னாள் முதல்வரும், ஆ.தி.மு.க கட்சியின் நிறுவனருமான டாக்டர்.எம்.ஜி.ஆரின் 1௦௦வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 1௦௦ ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 35 கிராம் எடை கொண்டதாகும்.
 • 3-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (3RD INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL (IISF-2017)), வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சென்னையில் நடைபெற்ற 57வது தேசியத் தடகள போட்டியில், தமிழக வீரர் லட்சுமணன், 5௦௦௦ மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.

சர்வதேசம்

 • 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அமெரிக்காவின் லாஸ் அன்ஜெல்ஸ் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.
 • அமெரிக்க பிரதிநிதித்துவ சபையில், ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவையும் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று இரண்டு குடியரசு கட்சி சட்ட வல்லுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 • ஏ.கே.47 ரக துப்பாக்கியை கண்டுபிடித்த, மிகைல் கலச்நிகோவ், அவர்களின் உருவச்சிலை ரசிய தலைநகர் மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இது 3௦ அடி உயர சிலையாகும்.
 • எகிப்தின் லக்சர் பகுதியில், 35௦௦ ஆண்டுகளுக்கு, முன்வாழ்ந்த பொற்கொல்லரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 • ஏர்இந்தியா நிறுவனம், டென்மார்க்கின் “கோபென்ஹேகன்” நகருக்கு நேரடி விமான சேவையை துவக்கியுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நகரத்திற்கு ஏர் இந்தியா மேற்கொல்லம் 11வது நேரடி விமான சேவை இதுவாகும். இதனை, “கடற்கன்னியுடன் மகாராஜா” (MAHARAJA WITH THE MERMAID) என கூறுகின்றனர்
 • கம்பியுட்டர் சிப்களை உற்பத்தி செய்யும் ஏ.எம்.டி நிறுவனம், “ரைசன் ப்ரோ” (MICROPROCESSOR RYZEN PRO) என்ற புதிய வகை நுண்செயலியை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது
 • “உலகில் அதிக மதிப்பு மிக்க 1௦௦ நிறுவனங்கள்” பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக முதல் இடத்தில் ஆப்பில் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் கூகுல் நிறுவனமும் உள்ளன
 • 9௦% பாலைவனப் பகுதியை கொண்ட ஜோர்டான் நாட்டில், அதன் “அக்பா நகர்” அருகே, “சகாரா காடு திட்டம்” என்ற திட்டத்தின் மூலம், பாலைவனப் பகுதியில் வேளாண்மை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. சூரிய ஆற்றல் மற்றும் கடல் நீரை கொண்டு இங்கு வேளாண்மை நடைபெற உள்ளது
 • ரோகிங்கியா பிரச்சனையில், தீர்வு ஏற்பட, வங்கதேச பிரதமர் ஷேய்க் ஹசீனா, 5 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்துள்ளார்
 • பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான, “மைன்ட்ட்ரீ”, அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் தந்து முதல் டிஜிட்டல் மையத்தை, DIGITAL PUMPKIN INNOVATION HUB” என்ற பெயரில் துவக்கியுள்ளது.
 • உலகின் அதிவேக புல்லட் ரயிலை, சீனா TRAIN FUXING“ என்ற பெயரில் பீஜிங் நகரில் இருந்து ஷாங்காய் நகரம் வரை இயக்க உள்ளது. 125௦ கிலோமீட்டர் தூரத்தை 35௦ கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, 4 மணிநேரம் 30 நிமிடங்களில் வந்தடையும்.
 • சீனா, திபத்தில் இருந்து நேபாள எல்லை வரை, சாலை அமைதுள்ளது. இது ராணுவம் மற்றும் பொது மக்கள் ஆகிய இரு பிரிவிற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
 • ஜப்பானின் அஞ்சல்துறை, இந்திய யோகா குருவான, பிஷ்ணு சரண் கோஸ்”, போற்றும் வகையில் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
 • உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திமிக்க பணிஉடைப்பு கப்பலை (WORLD’S LARGEST AND MOST POWERFUL ICEBREAKER SHIP, SIBIR), ராஸ்யா அறிமுகம் செய்துள்ளது. ஆர்டிக் பணி கடல்பகுதி வழியாக வணிகம் மேற்கொள்ள இக்கப்பல் உதவும். இக்கப்பலுக்கு “சிபிர்” (SIBIR) என பெயரிடப்பட்டுள்ளது.
 • சவூதி அரேபிய அரசு, அந்நாட்டில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தேசிய மைதானங்களில் விளையாடவும் அனுமதி வழங்கியுள்ளது.
 • லெபனான் நாட்டு அரு, அந்நாட்டின் முதல் விலங்குகள் நல மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக இயற்றியுள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் காடுகளில் உள்ள விலங்குகள், பாதுகாக்கப்படும்.
 • ஜெர்மனியின் டுயச்பார்க் நகரில், உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டை கட்டப்பட்டுள்ளது. இது 16.68 மீட்டர் உயர் கொண்டதாகும். இதற்கு முன்னர் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் கட்டிய மணல் கோட்டை 14.84 மீட்டர் உயரமுடையதே உலகின் மிகப்பெரிய மணல் கோட்டையாக இருந்தது

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.