TNPSC Current Affairs in Tamil September 2017- Part-3

முதன் முதல்

  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அதன் முதல் பெண் தலைமைப் பொறுப்பாளராக (FIRST WOMEN CHIEF PROCTOR) ராயனா சிங்கை நியமித்தது

 

  • அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தின் சட்டமன்றத்தில், “ப்ரணாம்” என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், கண்டிப்பாக தங்களின் பெற்றர் மற்றும் சகோதர சகோதரிகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை பராமரிக்க வண்டும். இது போன்ற மசோதாவை கொண்ட வந்த இந்தியாவின் முதல் மாநிலம் அஸ்ஸாம் ஆகும் (ASSAM STATE ASSEMBLY PASSED PRANAM(PARENTAL RESPONSIBILITY AND NORMS FOR ACCOUNTABILITY AND MONITORING ) BILL, MAKING IT MANDATORY FOR STATE GOVERNMENT EMPLOYEES TO TAKE CARE OF THEIR PARENTS AND NEEDY SIBLINGS. ASSAM IS THE FIRST STATE TO APPROVE SUCH A LEGISLATION). ஊழியர்கள் ஒருவேளை பெற்றோரை கவனிக்கவில்லை என்றால், அவர்களின் மாத ஊதியத்தில், 1௦ – 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும்.

 

  • நேபாள நாடு அதிகாரப்பூர்வ முதல் ஆய்வை, இமய மலையில் மேற்கொள்ள உள்ளது. 2௦15ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதன் உயரத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற கோணத்தில், இந்த ஆய்வு மேற்கொள்ளப் படவுள்ளது. இமயமலையின் உயரம் 8848 மீட்டர் (29029 அடி). இது இந்தியாவால் 1954ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது ஆகும்.

 

  • குடியருத் தலைவரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் முதல் வெளிநாட்டு பயணம், ஆப்ரிகா நாடான எத்தோப்பியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்

 

  • ஹாலிமா யாக்கோப் சிங்கப்பூரின் 8 வது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

 

  • இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் சார்பில் “முதல் வாழ்நாள் சாதனையாளர் விருது” (FIRST LIFETIME ACHIEVEMENT AWARD), முன்னாள் பாட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவிற்கு வழங்கப்பட்டது

 

  • இந்தியாவின் முதல் முழுநேர பாதுகாப்புத் துறை பெண் அமைச்சராக, “நிர்மலா சீத்தாராமன்” அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (FIRST FULL TIME DEFENCE MINISTER OF INDIA)

 

  • விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில், பெரிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் முதன் முதலில், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை அறிந்துக் கொள்ளும் ரசித்து முறை மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது

 

  • ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 ஸ்டம்புகளைத் செய்த முதல் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோணி ஆவார். கொழும்பில் நடந்த தனது 301 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அகிலா டான்ஜாயாவின் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து இச்சாதனையை செய்தார்.

 

  • ஆஸ்திரேலிய கூடைப்பந்தாட்ட அணிக்கு விளையாட்ட கையெழுத்திட முதல் இந்திய வீரர் அமிர்தபால் சிங் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

 

  • சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் பகுதியில், “முதல் கட்ட மின்-ரிக்ஸா” வண்டிகளை அறிமுகம் செய்து துவக்கி வைத்தது. இவ்வகை ரிக்சாக்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஜி.பி.எஸ் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

 

  • மேற்குவங்க மாநிலத்தின் இசாபூரில் உள்ள துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலையில், இந்தியாவின் முதல் உள்நாட்டு ஸ்னைப்பர் ரக துப்பாக்கி (INDIA’S FIRST INDIGENOUSLY SNIPER RIFLE) தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் துல்லிய தாக்குதல் 800 மீட்டர் வரை சென்று தாக்கும் தன்மை கொண்டது.

 

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல், முறைப்படி இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டது.

 

  • சீன, தனது முதல் ரேடாரில் சிக்காத ஜே-2௦ என்ற ரகசிய விமானத்தை அறிமுகம் செய்துள்ளது

 

  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முதல் மின் நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது

 

  • மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை அறிந்துக் கொள்ளும் காகித தகவல் சீட்டு முறை, பெரிய மாநிலங்களில் முதல் முறையாக குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளது (GUJARAT WILL BECOME FIRST BIG STATE TO USE ELECTRONIC VOTING MACHINE (EVMS) EQUIPPED WITH VOTER VERIFIABLE PAPER AUDIT TRAIL (VVPAT)

 

  • மின்சாரப் பேருந்து வசதியை அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை, ஹிமாச்சலப் பிரதேசம் பெற்றுள்ளது. அங்கு மனாலியில் இருந்து ரோதங் கணவாய் வரை இந்த பேருந்து இயக்கப்படும்.

 

  • இந்தியாவின் முதல் விலங்குகள் சட்ட மையம் (INDIA’S FIRST CENTRE FOR ANIMAL LAW), ஹைதராபாத் நகரில் துவங்கி உள்ளது.

 

  • இந்தியாவின் முதல் அதிநவீன வைரஸ் ஆய்வு மையம் (INDIA’S FIRST ADVANCED VIROLOGY LABORATORY), மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் உள்ள அஞ்சலி சட்டர்ஜி ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தில் துவங்கப்பட்டுள்ளது

 

  • கேரள மாநில அரசு, அம்மாநிலத்தின் அணைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ மனைகளிலும் (KERALA WILL SOON OPEN INDIA’S FIRST TRANSGENDER-EXCLUSIVE CLINICS AT GOVERNMENT MEDICAL COLLEGES ACROSS STATE), திருநங்கைகளுக்கு என்று பிரத்யோக சிகிச்சை மையத்தை அமைக்க உள்ளது. இதுவே இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கென்ற தனி பிரத்தியோக சிகிச்சை மையங்கள் ஆகும்.

 

  • மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், “ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான முதல் தேசிய கருத்தரங்கை” (FIRST NATIONAL CONFERENCE ON MISSION MODE TO ADDRESS UNDER-NUTRITION), புது தில்லியில் நடத்தியதி. இக்கருத்தரங்கின் இலக்காக 2௦22ம் ஆண்டிற்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்தியாவை (MAL-NUTRITION FREE INDIA 2022) உருவாக்குவது உறுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது

 

  • இந்தியாவின் முதல் வேட்டைநாய் கருந்தரங்கம், ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் நகரத்தில் நடைபெற்றது. இந்திய தேசிய கருப்பு பூனை படை அமைப்பு இதனை நடத்தியது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், வேட்டைநாய் ஒரு கருவியாக பயனபடுத்துவது இக்கருத்தரங்கின் கருத்தாகும்.

 

  • தலைநகர் டெல்லியில், “இந்தியாவில் முதல் ஓய்வூதிய அதாலத்” (FIRST PENSION ADALAT) நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்.

 

  • “மாவட்ட குடும்ப நல குழுக்களை” (FAMILY WELFARE DISTRICT COMMITTEES) அமைத்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் திரிபுரா ஆகும். பெண்களால் ஆண்கள் மீதும் சுமத்தப்படும் உண்மையற்ற, பொய் குற்றச்சாட்டுகளில் தொடர்பான விசாரணையை இக்குழு மேற்கொள்ளும்

 

  • இந்தியாவின் முதல் பசுமை கள ஸ்மார்ட் நகரம் (INDIA’S FIRST GREEN FIELD SMART CITY) என்ற அடைமொழியுடன், ராஞ்சி நகரம், ஸ்மார்ட் நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • உலகின் எட்டாவது மிகப்பெரிய மலையான, “மனஸ்லு மலையை”, ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை ஐ.பி.எஸ் அதிகாரியான அபர்ணா குமார் பெற்றுள்ளார். இந்த மலையின் உயரம் 8156 மீட்டர் ஆகும்

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

Leave a Reply

Your email address will not be published.