TNPSC Current Affairs in Tamil September 2017- Part-4

பொருளாதாரம்

 • மத்திய புள்ளியியல் துறை, 2௦11-12ஐ அடிப்படை ஆண்டாக கொண்டு, மொத்த மாநில உற்பத்தி விவரங்களை (GSDP – GROSS STATE DOMESTIC PRODUCT) வெளியிட்டுள்ளது. இதன் படி, 2௦15-16ம் ஆண்டில் மாநில வருவாயை அதிகளவில் அதிகரித்த மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம் (16.5%) முதல் இடத்திலும், ஜம்மு காஸ்மீர் (14.7%) இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஒட்டு மொதத் மாநில உற்பத்தியில் முதல் 3 இடங்களில் உள்ள மாநிலங்கள் = மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் குஜராத்

வங்கி

 • குறைந்த வருவாய் கொண்ட ஊரகப் பகுதி பெண்களுக்கு கடன் வழங்க ஏதுவாக, இந்தஸ்இந்த் வங்கிக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 2௦௦ மில்லியன் ரூபாயை கடனாக வழங்கியுள்ளது.
 • கூகுல் நிறுவனம் தனது புதிய மொபைல் மற்றும் வாலெட் செயலியான, “தெஸ்” செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 • இந்தியாவின் மிகபெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், லண்டனை சேர்ந்த ப்ரில்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை கையகப் படுத்தியுள்ளது

விளையாட்டு

 • காமன்வெல்த் இளையோர் பளு தூக்கும் சாம்பியன்ஷி போட்டியில் இந்தியாவின் கொன்சாம் ஆர்மிலா தேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரை பகுதியில் நடைபெற்ற இப்போட்டிகளில் 44 கிலோ எடைபிரிவில் இவர் தங்கம் வென்றார்.
 • ஸ்டார் இந்திய தொலைக்காட்சி நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியன் பர்மியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஒலிபரப்பு உரிமையை 16347 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
 • 16 வயதுக்கு உட்பட்டோருக்கான “தெற்காசிய கூடைபந்து விளையாட்டு” (SOUTH ASIAN BASKETBALL U-16 CHAMPIONSHIP) போட்டிகள் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பூட்டன் அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது.
 • 2௦17ம் ஆண்டி யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டிகள்
  • ஆண்கள் ஒற்றையர் = ஸ்பெயினின் ரபேல் நடால்
  • பெண்கள் ஒற்றையர் = அமெரிக்காவின் சலோன் ஸ்டீபன்ஸ்
  • ஆண்கள் இரட்டையர் = நெதர்லாந்தின் ஜெஈன் ஜூலியன் ரோபர் மற்றும் ரோமானியாவின் ஹோறியோ இணை
  • பெண்கள் இரட்டையர் = சுவிட்சர்லாந்து நாட்டின் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் சீனாவின் சான் யுங் இணை

விருது

 • 2௦17 பல்சான் பரிசு வெற்றியாளர்கள்
  • அமரிக்காவின் ஜேம்ஸ் பி அல்லிசன்
  • இந்திய பிரிட்டிஷ்காரர் பினா அகர்வால்
  • பெல்ஜியத்தின் மைக்கேல் கில்லான்
  • ஜெர்மனியின் அலைடா மற்றும் ஜான் அஸ்மான்
 • கானாவை சேர்ந்த இந்திய தொழிலதிபர் பிரேந்திரா சாம்சல், லண்டனில் நடைபெற்ற ஆசிய சாதனையாளர் விருது விழாவில், இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச வர்த்தக நபர் விருதை வென்றார்.
 • இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில், எரிசக்தி முகாமைத்துவத்தில் ‘சிறப்பு’ தேசிய விருது ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது
 • இஸ்கான் அமைப்பின் கோவர்தன் சுற்றுச்சூழல் கிராமம் (மஹாராஷ்ட்ரா), ஆமிர்கேர்ஸ் நிறுவனம் வழங்கிய மனிதகுல விருதை வென்றது.
 • சர்வதேச ஊட்டச்சத்து அறிவியல் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட, “வாழும் மேதை விருது” (INTERNATIONAL UNION OF NUTRITIONAL SCIENCE’S LIVING LEGEND AWARD), இந்திய ஆராய்ச்சியாளரான மக்தாப் பம்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • இந்தியாவின் முதல் செயல்பாட்டு ஸ்மார்ட் சிட்டி மற்றும் IFSC குறியீடு பெற்ற நகரமான, குஜராத் இன்டர்நேஷனல் ஃபினான்ஸ்-டெக் சிட்டி (GIFT சிட்டி) இந்தியாவின் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (அஷோச்சாம்) சேவைகள் மையத்தின் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது
 • இன்போசிஸ் கோஃபண்டேர் என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் மும்பையில் பிறந்த விஞ்ஞானியான வீணா சகஜால்லா ஆகியோருக்கு பி.எல்.யூ.எஸ் அலையன்ஸ் பரிசு (PLuS ALLIANCE AWARD) வழங்கப்பட்டது. உலகளாவிய தலைமைத்துவத்திற்கான பிரிவில் நாராயண மூர்த்தி அவர்களுக்கும், பேராசிரியர் சஹஜ்வாலா, அவரது திட்டத்திற்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது
 • மும்பையில் நடைபெற்ற 1௦வது கேட்வே விருது விழாவில், “இந்த ஆண்டின் சிறந்த துறைமுக பெட்டக நிறுவனமாக”, ஜவஹர்லால் நேரு துறைமுக சரக்கு பெட்டக முனையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
 • “என்.ஆர்.மாதவ மேனன் சிறந்த சட்ட ஆசிரியர் விருது” (N.R.MADHAVA MENON BEST LAW TEACHER AWARD), பிரபல நீதியாளரான தாகிர் மொகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • கர்நாடகா வங்கி நிதியுதவிக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக சிறு வங்கிகளிடையேயான சிறந்த வங்கி விருது (BEST BANK AWARD) வென்றது.
 • கர்நாடகத்தை சேர்ந்த பெண் காவல் அதிகாரியான டி.ரூபா அவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் (PRESIDENT MEDAL) வழங்கப்பட்டது
 • “ஐக்கிய நாடுகளின் பூமத்தியரேகை விருது” (UNITED NATIONS EQUATOR PRIZE), மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வயம் சிக்சான் பிரயாக் (SWAYAM SIKSHAN PRAYOG) அமைப்பிற்கு வழங்கப்பட்டது. பெண் விவசாயிகளுக்காக சேவை புரிந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது
 • 2௦17ம் ஆண்டிற்கான, “க்ரிஷி பிரகதி விருது”, ரகுநந்தன் தொழிலக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது
 • ஜெர்மனியில் நடைபெற்ற “ஒரு உலக திருவிழாவில்” (ONE WORLD FESTIVAL), இயற்கை விவசாயத்திற்காக சிறப்பாக செயல்பட்ட சிக்கிம் முதல்வர் பவன் சம்ப்ளிங் அவர்களுக்கு “கிராண்டு பிரிக்ஸ் விருது” (GRAND PRIX AWARD) வழங்கி கவுரவிக்கப்பட்டது.
 • அமெரிக்காவில் உள்ள பிரபல மார்கோனி சமூக அமைப்பு, 3 இந்தியர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது
  • கூகுல் நிறுவன ஆராய்ச்சி விஞ்ஞானியான ஆனந்த தீர்த்த சுரேஷ், பால் பாரன் இளைய அறிஞர் விருது வழங்கப்பட்டது (PAUL BARAN YOUNG SCHOLAR AWARD)
  • தாமஸ் கைலாத் – நவீன தொலை தொடர்பு துறைக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது (LIFETIME ACHIEVEMENT AWARD)
  • அருண் நேத்ரவள்ளி – மார்கோனி பரிசு (MARCONI PRIZE)
 • யுனஸ்கோ அமைப்பு, 2௦17ம் ஆண்டிற்கான சர்வதேச இலக்கிய விருதுகளை 2 பிரிவுகளில் அறிவித்துள்ளது. சீனாவின் கண்பூசியஸ் விருது மற்றும் தென் கொரியாவின் அரசர் செஜாங் இலக்கிய விருது என்ற பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டது.
  • கண்பூசியஸ் விருது, கொலம்பியாவின் AdulTICoProgram என்ற அமைப்பிற்கும், பாகிஸ்தானை சேர்ந்த Citizens Foundation அமைப்பிற்கும், தென் ஆப்ரிக்காவின் FunDza அமைப்பிற்கும் வழங்கப்பட்டது.
  • அரசர் செஜாங் இலக்கிய விருது, கனாடாவின் கன்கார்டியா பல்கலைக்கழகத்திற்கும், ஜோர்டான் நாட்டின் We Love Reading அமைப்பிற்கும் வழங்கப்பட்டது
 • நைஜீரியாவில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்தல் மற்றும் மத்தியஸ்தம் செய்தல் ஆகியவற்றிற்காக ஜன்னா முஸ்தபா அவர்களுக்கு இந்த ஆண்டின், “நான்சென் அகதி விருது” வழங்கப்பட்டது (2017 NANSEN REFUGEE AWARD)
 • இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான தொழில்நுட்ப விருதை, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, “ஹேய்டி” நிறுவனம் வென்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பத் திட்டங்கள் உருவாக்குவதற்காக மிகப் பெரிய அளவில் மாதிரி திட்டங்களை இந்நிறுவனம் உருவாக்கி தந்து.

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.