TNPSC Current Affairs in Tamil September 2017- Part-6

குறியீடு

 • உலகளாவிய மனித மூலதன குறியீடு (GLOBAL HUMAN CAPITAL INDEX REPORT) வெளியிடப்பட்டுள்ளது. இதனை உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிடுள்ளது. மொத்தம் 13௦ நாடுகள், இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. முதல் 3 இடங்கள் = நார்வே, பின்லாந்து, சுவிட்சர்லாந்து. கடைசி இடம் = ஏமன். இந்தியா, 1௦3வது இடத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகளிலே கடைசி இடஹ்டில் இந்தியா உள்ளது. அண்டை நாடுகளில் நேபாளம் மற்றும் இலங்கை நம்மை விட முன்னே உள்ளன.
 • ஜிப்ஜெட் என்ற நிறுவனம் நடத்திய, “குறைந்த மற்றும திகழவு மன அழுத்தம் கொண்ட நகரங்கள்” (GLOBAL RANKING FOR LEAST AND MOST STRESSFUL CITIES, BY ZIPJET (150 CITIES) கொண்ட பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இப்பட்டியலில் 15௦ நகரங்கள் உள்ளன. மன அழுத்தம் குறைவான நகரங்களில் முதல் 3 இடங்கள் = ஜெர்மனியின் ஸ்டாக்ஹார்ட், லக்செம்பார்க் மற்றும் ஜெர்மனியின் ஹானோவர். மிக அழுத்தம் கொண்ட நகரம் = ஈராக் நாட்டின் பாக்தாத் (15௦வது இடம்). இந்தியாவின் பெங்களூரு 13௦வது இடத்திலும், கொல்கத்தா 131வது இடத்திலும், மும்பை நகரம் 138-வது இடத்திலும் உள்ளன, தேசிய தலைநகர் டெல்லி 142-வது இடத்தில் உள்ளது.
 • ஹென்லே நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட, “தேசிய தரக் குறியீட்டில்” (HENLEY & PARTNERS – KOCHENOV QUALITY OF NATIONALITY INDEX (QNI) REPORT), முதல் 3 இடங்களில் = ஜெர்மனி, இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் இணைந்து, மூன்றாவது ஆயச்லாந்து ஆகும். இந்தியா இப்பட்டியலில் 159 நாடுகளில், 1௦1-வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
 • உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள, “உலக போட்டித்தன்மை குறியீட்டில்” (WORLD ECONOMIC FORUM’S (WEF) GLOBAL COMPETITIVENESS INDEX (GCI) 2017-18 (137 NATIONS)), மொத்தம் ஆய்விற்கு 137 நாடுகள் உட்படுத்தப்பட்டன. இதில் முதல் 3 இடங்களில் = சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில ஏமன் உள்ளது. இப்பட்டியலில் 40-வது இடத்தில் இந்தியா உள்ளது. பிரிக்ஸ நாடுகளான சீனா 27வது இடத்திலும், ரசியா 38வது இடத்திலும், தென் ஆப்ரிகா 61வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான வங்கதேசம் 99வது இடத்தில் உள்ளது.
 • உலக அணு தொழிற்சாலை அறிக்கை 2௦17 (World Nuclear Industry Status Report 2017) படி, இந்தியா 6 அணு உலைகளை இதுவரை இந்தியாவில் நிறுவி உள்ளதின் மூலம் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 2௦ அணு உலைகள் கொண்ட சீனா முதல் இடத்தில் உள்ளது.

ஒப்பந்தம்

 • இந்தியாவில் பேரழிவு மேலாண்மையில் நிவாரணம் வழங்குவதற்காக “நிவாரணம் 123” என்ற தொலைபேசி சேவையை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துடன் இணைந்து, தொலைத் தொடர்பு சாதன வழங்குனரான வைஹான் நெட்வொர்க்ஸ் லிமிடெட் (விஎல்எல்) ஒப்பந்தம் செய்துள்ளது.
 • இலங்கையில் உள்ள தொண்டைமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மறுசீரமைத்து தருவதற்கு, இந்தியா மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 • அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தின் 26௦௦௦ கிராமங்கள் மற்றும் 15௦௦ தேயிலை தோட்டங்கள் கொண்ட பகுதியில், இணையதள சேவையை அளிக்கும் வகையில், கூகுல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இடஹ்ன் மூலம் அங்கு டிஜிட்டல் தொழிநுட்ப அறிவு வளர்ச்சி ஏற்படும் என அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

நியமனம்

 • இந்திய விளம்பர தரக் கவுன்சிலின் (ADVERTISING STANDARD COUNCIL OF INDIA) புதிய தலைவராக அபந்தி சங்கர நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ஜெர்மனி அதிபராக ஏஞ்செலா மெர்கல் நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தின் (NPCI – NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA) இடைக்காலத் தலைவராக பி.சம்பமூர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார்
 • தேசிய நீர் ஆற்றல் கழகத்தின் (NHPC – NATIONAL HYDRO POWER CORPORATION) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பால்ராஜ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தேவேந்திர குமார் ஜோஷி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் லெப்டினென்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்
 • ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் அபய் ஃபைரோடியா, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் சங்கத்தின் (SIAM – SOCIETY OF INDIAN AUTOMOBILE MANUFACTURERS) தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்
 • முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தார்மீக ஆணையத்தின் தலைவராக (CHAIR OF ETHICS COMMISSION OF THE INTERNATIONAL OLYMPIC COMMITTEE) தேர்ந்தெடுக்கப் பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் நீடிப்பார்
 • பிரதமர், தனது பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் பதவி கால வரையறையை அக்டோபர் 2018 வரை நீட்டித்தார்
 • தேசிய இரசாயின ஆயுதக் கழக ஆணையத்தின் (NACWC – NATIONAL AUTHORITY OF CHEMICAL WEAPONS CONVENTION) தலைவராக, இந்தர சித் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • சர்வதேச முட்டை ஆணையத்தின் (INTERNATIONAL EGG COMMISSION, BELGIUM) துணைத் தலைவராக இந்திய நபர் சுரேஷ் சித்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமையகம் பெல்ஜியத்தில் உள்ளது.
 • தெற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் 38 ஆண்டுகள் கழித்து புதிய ஜனாதிபதியாக ஜோவா லாரெங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • கென்னத் ஐ. ஜஸ்டர் இந்தியாவிற்காண அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்
 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்திய – அமெரிக்கரான ராஜ் ஷாவை ஜனாதிபதியுடனான துணை உதவியாளராகவும், துணை ஊடக செயலாளராகவும் நியமித்துள்ளார்
 • இந்தியாவின் பிரஸ் டிரஸ்ட் தலைவர் விவேக் கோயங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார் (PTI – PRESS TRUST OF INDIA)
 • தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குநராக வை.சி.மோடி நியமிக்கப்பட்டார்
 • ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம் – பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா
  • பீகார் – சத்யா பால் மாலிக்
  • தமிழ்நாடு – பன்வரிலால் புரோகித்
  • அஸ்ஸாம் – ஜகிஷ் முகி
  • மேகாலயா – கங்கா பிரசாத்
 • இந்திய தலைமை கணக்காயர் சசி காந்த் ஷர்மாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய கனக்காயவராக, முன்னாள் உள்துறை செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார் (NEW COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA)

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.