TNPSC Current Affairs in Tamil September 2017- Part-7

இடங்கள்

  • புது தில்லியில் ‘வட-கிழக்கு அழைப்பு’ விழா நடைபெற்றது. இது இந்தியா கேட் பகுதியில் நடைபெற்றது.
  • “முதல் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை பயிற்சி – 2௦17” (FIRST BIMSTEC DISASTER MANAGEMENT EXERCISE- 2017 (DMEX-2017)) வரும் அக்டோபர் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ளது.
  • வரும் அக்டோபர் மாதம் இந்தியாவின் டெல்லியில், “11வது உலக காங்கிரஸ் இளம்பருவ உடல்நல சுகாதாரக்” (11TH WORLD CONGRESS ON ADOLESCENT HEALTH) கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
  • 13வது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தொடக்க தினம், புது தில்லியில் நடைபெற்றது. இதன் கரு = SCHOOL SAFETY
  • “3-வது பெண்கள், இந்திய கரிம விழா” (3RD WOMEN OF INDIA ORGANIC FESTIVAL), புது தில்லியில் நடைபெற்றது. வேளாண்மை துறையில் இயற்கை கரிம வளத்தை மேம்படுத்த பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் பெண் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் இவ்விழா நடைபெற்றது.
  • 2-வது சர்வதேச யோகா திருவிழா மற்றும் சர்வதேச யோகா விளையாட்டு சாம்பியன்சிப் போட்டிகள் (2ND INTERNATIONAL YOGA FESTIVAL AND INTERNATIONAL YOGA SPORTS CHAMPIONSHIP), ஜம்மு காஸ்மீரில் நடைபெற்றது
  • “வடகிழக்கு அழைப்பு திருவிழா” (NORTH EAST CALLING FESTIVAL), புது தில்லியில் நடைபெற்றது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு தொழில் முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், Swachhata Hi Sewa என்ற இயக்கத்தை உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் நகரில் துவக்கி வைத்தார்.

கருத்தரங்கம்

  • 2௦17ம் ஆண்டி சர்வதேச சட்டக் கழகக் கூட்டம் (INTERNATIONAL INSTITUTE OF LAW) , இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. இந்த அமைப்பு 19௦4ம் ஆண்டு அமைதிகாக நோபல் பரிசை வென்றுள்ளது.
  • சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, 12வது ASEAN COMPUTER EMERGENCY RESPONSE TEAM INCIDENT DRILL (ACID) கூட்டம், வியட்நாம் நாட்டின் ஹனாய் நகரில் நடைபெற்றது.
  • “சர்வதேச இந்து கருத்தரங்கம்” (INTERNATIONAL HINDU CONFERENCE), நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் கரு = EMERGING SPIRITUALISM: RENAISSANCE OF HINDUISM
  • 5-வது கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதரா அமைச்சர்கள் (5TH EAST ASIA SUMMIT ECONOMIC MINISTERS MEETING) கலந்துக் கொண்ட மாநாடு, பிலிப்பைன்ஸ் நாட்டின் பசாய் நகரில் நடைபெற்றது.
  • சர்வதேச அணுசக்தி ,முகமையின் 61வது பொது கருத்தரங்கம் (61ST IAEA (INTERNATIONAL ATOMIC ENERGY AGENCY) GENERAL CONFERENCE), ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில், இந்திய அணுசக்தி மையத்தின் தலைவர் சேகர் பாசு கலந்துக் கொண்டார்.
  • உலக சுகாதார அமைப்பின் 7௦வது வட்டார தெற்காசிய நாடுகளின் கூட்டம், மாலத்தீவுகளின் மாலே நகரில் நடைபெற்றது. வரும் 2௦3௦ ஆண்டிற்குள், காசநோயை முற்றிலும் ஒழிக்கவேண்டும் (TUBERCULOSIS ELIMINATION BY 2030) என இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 7-வது ஆசிய – ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர்கள் கூட்டம், தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய கரு = INNOVATIVE PARTNERSHIP FOR INCLUSIVE PROSPERITY
  • 9-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு (9TH BRICS SUMMIT) சீனாவின் சியாமன் மாகாணத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டின் கரு =
    • புதிய வளர்ச்சி வங்கி மற்றும் 5 நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஏற்படுத்தல்
    • 2௦11ம் ஆண்டிற்கு சீனா இரண்டாவது முறையாக இம்மாநாட்டை நடத்துகிறது
    • மாநாட்டின் முடிவில், “சியாமன் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது
    • மாநாட்டில் இந்தியாவின் சார்பில், “தீவிரவாதப் பிரச்சனை” அதிகமாக எழுப்பப்பட்டது.
    • அடுத்த பிரிக்ஸ் மாநாடு 2018ல் தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ளது.
  • முதல் மொபைல், இணையதள மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியான, “மொபைல் காங்கிரஸ் 2௦17’ (FIRST EVER MOBILE, INTERNET AND TECHNOLOGY EVENT IN INDIA – INDIA MOBILE CONGRESS 2017) நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
  • “உலகளாவிய தொழில் முனைவோர்கள் மாநாடு” (GES 2017 – GLOBAL ENTERPRENURSHIP SUMMIT) முதன் முதலாக ஆசிய நாடான இந்தியாவில் வரும் நவமபர் மாதம் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் இது நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் கரு = WOMEN FIRST, PROSPERITY FOR ALL
  • 2-வது கண்பரிசோதனை உலக காங்கிரஸ் கருத்தரங்கம் (SECOND WORLD CONGRESS OF OPTOMETRY), தெலுங்கனா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
  • 1௦வது தேசிய மருத்துவ தொழில்நுட்ப கருத்தரங்கம் (10TH MEDICAL TECHNOLOGY CONFERENCE) புது தில்லியில் நடைபெற்றது
  • 2-வது மாநில ஸ்டார்ட்அப் கருத்தரங்கம் (2-ND STATE STARTUP CONFERENCE), புது தில்லியில் நடைபெற்றது.
  • தெற்காசிய பெண்கள் மேம்பாட்டு மன்றம் – “எல்லைகளுக்கு குறுக்கே – சர்வதேச வியாபார பெண்கள் மாநாடு”, என்ற நிகழ்வை நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வு சார்க் நாடுகளிலும், ஆசியான் நாடுகளிலும் உள்ள பெண் தொழில் முனைவோர்கள் இடையே ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

குழு

  • சைபர் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் லோக்சபா பொதுச் செயலாளர் டி.கே. விஸ்வநாதன் தலைமையிலான அமைக்கப்பட்ட நிபுணர் குழு, குறிப்பாக “ஆன்லைன் வெறுப்பு பேச்சு” தொடர்பான தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • பங்குச்சந்தை கட்டுபாட்டு அமைப்பான செபி, “ஜெயந்த் ஆர்.வர்மா” தலைமையில் அறிவுரைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. பங்குச்சந்தை நேரத்தை மதியம் 3.3௦ மணியில் இருந்து மாலை 7.3௦ மணி வரை நீதிபது தொடர்பாக அறிக்கையை அளிக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது
  • பூபிந்தர் யாதவ் தலைமையில், பாராளுமன்ற குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது. நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்ட மசோதா தொடர்பான ஆராய இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • பீகார் துணை முதல்வர் சுசில்குமார் மோடி தலைமையில், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் பொழுது ஏற்படும் தகவல் தொழிநுட்ப சவால்களை ஆராய குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • 5-வது கடலோர கப்பல் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து தொழிலக மாநாடு (COASTAL SHIPPING AND INLAND WATER TRANSPORTATION BUSINESS SUMMIT), கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்றது.

திட்டம்

  • சுற்றுச்சூழல் அமைச்சகம் “பிரகிருதி கோஜ்” (PRAKIRITI KHOJ, AN ENVIRONMENTAL AWARENESS INITIATIVE) எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் ஆன்லைன் சுற்றுச்சூழல் வினாடி போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஜார்கண்டு மாநில அரசு, அம்மாநிலத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ள ஊர்களை வளர்ச்சி பெறும் விதமாக, முன்னேற்ற “ஷாகீத் கிராம் விகாஸ் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 25ம் தேதி, பாரத பிரதமர், “சவுபாக்யா”, திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்குதல் இதன் நோக்கமாகும். 2௦19ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் இலக்காகும்.

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil September 2017-Part-7

Leave a Reply

Your email address will not be published.