TNPSC DAILY CURRENT AFFAIRS 10TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 10TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 10TH JULY WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

“சாதி”, மொபைல் உதவி மையம்:

 • மத்திய ரிசர்வ் போலிஸ் பாதுகாப்புப்படையின் சார்பில், அமர்நாத் யாத்திரை புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவியாக “சாதி” (SAATHI) என்ற மொபைல் உதவி வேன் வண்டி சேவை துவக்கப்பட்டுள்ளது (CENTRAL RESERVE POLICE FORCE (CRPF), LAUNCHED “SAATHI”, A MOBILE HELP CENTRE FOR AMARNATH PILGRIMAGE POEPLES)
 • யாத்திகர்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பது, அவர்களுக்கு பயணப் பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய மொபைல் போன் தொழிற்சாலை:

 • உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான “சாம்சங்” நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய மொபைல் போன் தொழிற்சாலையை உத்திரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் துவங்கியுள்ளது (SAMSUNG, INAUGURATED THE WORLD’S LARGEST MOBILE MANUFACTURING UNIT IN NOIDA, UTTAR PRADESH, INDIA)
 • இதற்கான துவக்க விழாவில், இந்தியப் பிரதமர் மோடியும், தென் கொரிய அதிபரும் கலந்துக் கொண்டு துவக்கி வைத்தனர்
 • 2௦2௦ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் இந்த ஆலையின் மூலம் சுமார் 7௦௦௦௦ பேர் வேலைவாய்ப்பை பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதல் இந்திய சுற்றுலா அங்காடி கண்காட்சி:

 • முதல் இந்திய சுற்றுலா அங்காடி கண்காட்சி, வருகின்ற செப்டம்பட்ர் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ளது
 • First India Tourism Mart (IMT), will be held in New Delhi on September 2018.
 • உலகம் முழுவதும் இருந்து, பல்வேறு நாடுகளை சேர்ந்த விற்பனை பிரதிநிதகள் இதில் கலந்துக் கொள்வர். இந்திய சுற்றுலா துறையை வணிக நோக்கில் உயர்த்த இயலும்

பீகாரின் சண் கால்வாய் திட்டம்:

 • பீகாரின் ஷாகபாத் – போஜ்பூர் பகுதிக்கு உட்பட்ட சண் கால்வாய் பணிக்காக ரூபாய் 3272 கோடி ரூபாய் கடனாக வழங்க “ஆசிய வளர்ச்சி வங்கி” ஒப்புதல் அளித்துள்ளது
 • The Asian Development Bank (ADB) has approved Lining Project of Son canal in Shahabad-Bhojpur region of Bihar
 • இத்திட்டம் நிறைவு பெரும் பொழுது பீகாரின் போஜ்பூர் பகுதி வேளாண் துறையில் மிகுந்த முன்னேற்றம் பெறும்.

யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்தை வழங்கிய குஜராத் அரசு:

 • குஜராத் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள யூதர்களுக்கு “சிறுபான்மையினர்” என்ற அந்தஸ்த்தை வழங்கியுள்ளது
 • Gujarat Government gives Minority status to Jews.
 • Gujarat is the third state to give minority status to Jews, only after West Bengal and Maharashtra.
 • யூதர்களுக்கு மத அந்தஸ்தை வழங்கிய 3-வடு மாநிலம் குஜராத் ஆகும். இதற்கு முன்னர் மேற்குவங்கம் மற்றும் மகாராஸ்டிரா மாநில அரசுகள் வழங்கியுள்ளன

உயர் மதிப்புமிக்க கல்விக் கழக அந்தஸ்து:

 • மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்தியாவில் உள்ள 6 உயர் கல்வி நிறுவனங்களுக்கு “உயர் மதிப்பு மிக்க அந்தஸ்தை” வழங்கியுள்ளது (Union Ministry of Human Resource Development (HRD) has granted Institution of Eminence (IoE) status to six educational institutions)
 • இதி 3 அரசு கல்வி நிறுவனங்களும், 3 தனியார் கல்வி நிறுவனங்களும் அடங்கும்
 • 3 அரசு கல்வி நிறுவனங்கள்
  1. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம்
  2. பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம்
  3. டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகம்
 • 3 தனியார் கல்வி நிறுவனங்கள்
  1. ராஜஸ்தானின் பிலானி நகரில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம்
  2. கர்நாடகத்தின் மணிபால் நகரில் உள்ள மணிபால் உயர்கல்வி நிறுவனம்
  3. மகாராஸ்டிராவின் பூனே நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கல்விக் கழகம்
 • ஆனால் ஜியோ கல்விக் கழகம் இதுவரை எந்த கல்வி செயல்களிலும் பெரிதாக ஈடுபடாத நிலையில், இந்நிறுவனத்திற்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 • இந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுவிற்கு தலைவராக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால் சுவாமி அவர்கள் இருந்தார்

காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் “தடகள அறிவுரைக் குழு”:

 • காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் “தடகள அறிவுரைக் குழுவிற்கு” ஆசியாவின் பிரதிநிதியாக இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை “தீபிகா பள்ளிகல்” தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • India’s ace squash player Dipika Pallikal has been appointed as Asia’s representative in the prestigious Athletes Advisory Commission of the Commonwealth Games Federation (CGF)
 • இந்தக் குழு 2௦17ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது

ஆசிய விளையாட்டு போட்டிகள்:

 • 2018ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டிகள் வருகின்ற அகஸ்ட் மாதம் ஜகார்த்தா நகரிலும், பாலேம்பாங் நகரிலும் நடைபெற உள்ளது
 • Goalkeeper PR Sreejesh will lead the 18-member Indian men’s hockey squad in the 18th Asian Games, which is scheduled to begin in Jakarta and Palembang from August 18.
 • இது 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகும். இந்த ஆசியப் போட்டிகளின் ஹாக்கி பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொள்ளும் அணிக்கு “ஸ்ரீ]ஜேஷ்” தலைமை தாங்குகிறார்

சர்வதேச டி-2௦ போட்டிகளில் மூன்று முறை சதமடித்த முதல் இந்திய வீரர்:

 • சர்வதேச டி-2௦ போட்டிகளில் மூன்று முறை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை “ரோகித் ஷர்மா” பெற்றுள்ளார்
 • Team India opener Rohit Sharma has become the first Indian cricketer to smash three centuries in T20I cricket
 • இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது சதத்தை பதிவு செய்தார்
 • உலக அளவில் மூன்று முறை டி-2௦ போட்டிகளில் சதமடித்த ஓரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்

நடுத்தர அதி வேக ரயில், “ரயில் 18”:

 • சென்னையில் உள்ள “ஐ.சி.எப்” ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில், நடுத்தர அதிவேக ரயில் பெட்டி இஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு “ரயில் 18” எனப் பெயரிடப்பட்டுள்ளது
 • India’s much-awaited indigenously manufactured semi high-speed train called “Train 2018”, code-named Train 18
 • மணிக்கு 16௦ கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயில், “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது

எளிதில் தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியல்:

 • தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையால் வெளியிடப்படும் எளிதில் தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் 2-வது ஆண்டாக ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது
 • தமிழகம் இப்பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. தெலுங்கானா
  3. ஹரியானா
  4. ஜார்கண்ட்
  5. குஜராத்

இந்தியாவின் முதல் ஊட்டச்சத்து அதிகரிக்கப்பட்ட சோளம் – “”பர்பானி சக்தி”:

 • இந்தியாவின் முதல் ஊட்டச்சட்டு அதிகரிக்கப்பட்ட “சோளம்” – “பர்பானி சக்தி” என்ற பெயரில் வெளியிடப்பட்டது
 • India gets its first biofortified sorghum (jowar) – Parbhani Shakti
 • இதில் இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது

இரும்பில்லா தனிமம் மற்றும் உலோங்கங்களுக்காண சர்வதேசக் கருத்தரங்கம்:

 • 22-வது இரும்பில்லா தனிமம் மற்றும் உலோகங்களுக்கான சர்வதேச கருத்தரங்கம், ஜார்கண்டு மாநிலத்தின் ராஞ்சி நகரில் நடைபெற்றது
 • 22nd International Conference on Non-Ferrous Minerals and Metals 2018 at Ranchi, Jharkhand
 • பல்வேறு தொழில் அதிபர்கள் இதில் கலந்துக்கொண்டனர்

பலாப்பழ இயக்கம்:

 • மேகாலயா மாநில முதல்வர், அம்மாநிலத்தில் “பலாப்பழ இயக்கம்” தொடர்பான கொள்கை அறிக்கையினை வெளியிட்டார்
 • The policy document of the five year jackfruit missionhas been released 
 • அடுத்த 5 ஆண்டுகளில் பலாப்பழ உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை தொடர்பாக இந்த அறிக்கை விவரங்கள் இருந்தன

இந்திய வரலாற்றில் முதல் முறையாக “ராஜ்யசபா” ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளது:

 • ராஜ்யசபாவின் தலைவரான, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ருவாண்டா நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார்
 • This is the first time that Rajya Sabha entered into an MOU in its 76years of existence
 • 76 ஆண்டு கால பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக ராஜ்யசபா தலைவர் ஒருவர் ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்
 • ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்ட முதல் ராஜ்யசபா தலைவர் என்ற பெருமையை வெங்கையா நாயுடு பெற்றார்

உலகிலேயே பழமையான வண்ணம் கண்டுபிடிப்பு:

 • புவி வரலாற்றில் பதிவான வண்ணங்களிலே மிகவும் பழமையான வண்ணம், ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது “அடர் இளஞ்சிவப்பு” நிறம் ஆகும்
 • Scientists have discovered the oldest colorsin the geological record, 1.1-billion-year-old bright pink pigments, in  Sahara desert in Africa
 • ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்
 • இந்த வண்ணம் 1.1 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது அங்குள்ள பாறைகளில் படிவங்களாக புதைந்து இருந்தன

 

 

 

Leave a Comment

Your email address will not be published.