TNPSC DAILY CURRENT AFFAIRS 15TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 15TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 15TH JULY WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

உலக இளையோர் திறன் தினம், ஜூலை 15:

  • உலக இளையோர் திறன் தினம் (WORLD YOUTH SKILLS DAY), உலகம முழுவதும் ஜூலை 15ம் தேதி கடைபிடிக்கப்பட்டது
  • இளைய சமூகத்திடம், திறன் வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்

2018 விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் சாம்பியன்:

  • 2018 விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்சிப் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி, ஜெர்மனியின் ஏன்ஜெலிக் கெர்பெர் சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்
  • 1996ம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டெப்பி கிராப் இப்பட்டத்தை வென்ற பிறகு, முதன் முறையாக் இப்பட்டத்தை வெல்லும் முதல் ஜெர்மனி வீராங்கனை என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்
  • 7 முறை விம்பிள்டன் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இம்முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்

குஜராத் அரசின் “சீமா தர்சன்” திட்டம்:

  • குஜராத் மாநில அரசு, அம்மாநிலத்தில் சுற்றுலாத் துறையை வளர்ச்சி பெற செய்யும் நோக்கில், “சீமா தர்சன்” என்ற புதிய கட்டமைப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்
  • இத்திட்டம் “எல்லை சுற்றுலா” திட்டம் என அழைக்கப்படுகிறது

ஒருங்கிணைந்த இந்திய விசா விண்ணப்ப மையம்:

  • வங்கதேச தலைநகர் டாக்காவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால், “ஒருங்கிணைந்த இந்திய விசா விண்ணப்ப மையம்” துவக்கி வைக்கப்பட்டது

  • மேலும் வங்கதேசத்தின் சார்தா நகரில், “இந்திய – வங்கதேச நட்பு கட்டிடம்”, அவரால் திறந்து வைக்கப்பட்டது

இந்திய ரயில்வேயின் “முதல் தொகுக்கப்பட்ட பால மேலாண்மை முறை”:

  • இந்திய ரயில்வே துறை சார்பில் “முதல் தொகுக்கப்பட்ட பால மேலாண்மை முறை” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இம்முறையின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பாலங்கள், அதன் விவரங்கள், அதன் தன்மை அடங்கிய தகவல்கள் சேகரிக்கப்படும்

இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ் குழு:

  • “நிறுவனங்கள் சட்டம் 2௦13”ஐ மறுஆய்வு செய்யும் பொருட்டு, மத்திய அரசு 1௦ பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • இக்குழுவின் தலைவராக “இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ்” அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

மூளையின் செயல்பாடுகளை கண்டறியும் சூப்பர் கணிணி:

  • ஜெர்மனி நாட்டினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், “spiNNaker” என்ற சூப்பர் கணிணியை உருவாக்கி உள்ளனர். இது மனித மூளையின் செயல்பாடுகளை ஓரளவிற்கு சரியாக கணித்து செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது

உலகில் அதிக செலவு மிக்க அலுவலக இடங்களை கொண்ட நகரங்கள்:

  • அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், “உலகில் அதிக செலவு மிக்க அலுவலக இடங்களை கொண்ட நகரங்கள்” பட்டியலில் ஹாங்காங் நகரம் முதல் இடத்தில உள்ளது
  • இந்தியாவின் டெல்லி நகரில் உள்ள “கான்னாட்” இடம் உலக அளவில் அதிக செலவு மிக்க அலுவலக இடங்கள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு ஒரு சதுர அடி சுமார் 1௦512 ரூபாய் வாடகை பெறுகிற அளவில் உள்ளது

ஓடிசாவின் பூரி ஜெகநாதர் ரதயாத்திரை:

  • உலகப் பகல் பெற்ற ஓடிஸா மாநிலத்தின் பூரி பகுதியில் உள்ள ஜெகநாதர் ரதயாத்திரை துவங்கி உள்ளது
  • “குடிச்சா கோவிலுக்கு” ஜெகநாதர் வருவதை கொண்டாடுவது இந்த ரதயாத்திரை விழாவாகும்
  • ஜெகநாதர் யாத்திரை முடிவு பெற்று திரும்பவும் கோவிலுக்கு அழைத்து செல்லும் விழா = பகுதா யாத்திரை ஆகும்

2-வது தேசிய சுற்றுலா கூடுகை:

  • 2-வது தேசிய சுற்றுலா கூடுகை நிகழ்ச்சி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடைபெற்றது
  • முதல் தேசிய சுற்றுலா கூடுகை, 2௦17ம் ஆண்டு சண்டிகர் நகரில் நடைபெற்றது

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.