TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 28.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 28.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

 

இந்திய மொழிகள் கணக்கெடுப்பு அறிக்கை:

  • 2௦11 மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் மொழிகள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    1. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி = இந்தி
    2. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 2-வது மொழி = பெங்காலி
    3. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 3-வது மொழி = மராத்தி
    4. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 4-வது மொழி = தெலுங்கு
    5. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 5-வது மொழி = தமிழ்
    6. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 6-வது மொழி = குஜராத்தி
    7. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 7-வது மொழி = உருது
    8. இந்தியாவில் குறைவான மக்களால் பேசப்படும் மொழி = சமஸ்கிருதம் 88(24,821 பேர்)
    9. இந்திய அரசியல் அமைப்பு மொழி அட்டவணையில் இல்லாமல், அதிகம் பேசப்படும் மொழி = பிலி (அ) பிலோடி (ராஜஸ்தானில் பேசப்படுகிறது)
    10. இந்தியாவில் 195௦௦ மொழிகளுக்கு மேல் பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
    11. 1௦௦௦௦ பேருக்கு மேற்பட்டோர் பேசும் மொழிகளின் எண்ணிக்கை = 121 (22 அட்டவணை மொழிகள் + 99 அட்டவணையில் இல்லாத மொழிகள்)
    12. தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை = 6,90,26,881
    13. கடந்த 1௦ ஆண்டுகளில் அதிக பட்ச வளர்ச்சி % கொண்ட மொழி = சமஸ்கிருதம் (75%)
    14. கடந்த 1௦ ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சி சதவிகிதம் % = 13.54%
    15. கடந்த 1௦ ஆண்டுகளில் வீழ்ச்சியை கண்டுள்ள 2 மொழிகள் = கொங்கணி (-9.34%), உருது (-1.48%)
    16. கடந்த 1௦ ஆண்டுகளில் அதிகபட்ச வீழ்ச்சியை கண்ட மொழி = கொங்கணி (-9.34%)
    17. கடந்த 1௦ ஆண்டுகளில், தென்னிந்திய மொழிகளில் அதிகபட்ச வளர்ச்சி அடைந்த மொழி = கன்னடா (15.99%)
    18. கடந்த 1௦ ஆண்டுகளில், தென்னிந்திய மொழிகளில் குறைவான வளர்ச்சி அடைந்த மொழி = மலையாளம் (5.36%)

பாகிஸ்தானின் முதல் கண்பார்வை அற்ற நீதிபதி:

  • பாகிஸ்தான் நாட்டின் முதல் கண்பார்வை அற்ற நீதிபதியாக “யூசப் சலீம்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • பிறவியில் இருந்து கண் பார்வை அற்றவர் இவர். இவரின் சகோதரி பாகிஸ்தானின் முதல் கண் பார்வை அற்ற சிவில் சர்விஸ் அதிகாரியாக இருந்தவர்
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

800 மீ ஓட்டப்பந்தயத்தில் 42 ஆண்டுகால தேசிய சாதனை முறியடிப்பு:

  • அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் நடைபெற்ற 58-வது மாநிலங்களுக்கு இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்சிப் போட்டியில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த “ஜின்சன் ஜான்சன்” என்பவர் 1 நிமிடம் 45.65 நொடிகளில் ஓடி, புதிய தேசிய சாதனையை படைத்தார்
  • இதற்கு முன்னர் ஸ்ரீராம்சிங் என்பவர் 1 நிமிடம் 45.77 வினாடிகளில் ஓடியதே சாதநியாக இருந்தது. இது அவர் 1976ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்தியது ஆகும்
  • 42 ஆண்டுகளுக்கு பிறகு இச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில், “கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான” புதிய தொழில்நுட்பம்:

  • தமிழகத்தில், “கர்ப்பப் பை வாய் புற்றுநோயினை” கண்டறிய “LIQUID BASED CYTOLOGY TECHNOLOGY (LBC)” என்ற புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது
  • கர்ப்பப்பை பகுதியில் இருந்து சிறிய பிரஷ் மூலம் செல்கள் எடுக்கப்பட்டு அதனை சோதனை கூடத்தில் உட்படுத்தப்பட்டு, நோயினை உறுதி செய்ய இயலும்

கன்ய வன் சம்ருத்தி யோஜனா திட்டம்:

  • மகாராஸ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தில் “கன்ய வன் சம்ருத்தி யோஜனா” என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது
  • இதன் படி, விவசாய குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக அரசு மூலம் 1௦ செடிகள் வழங்கப்படும். இதன் மூலம் பெண் பிள்ளைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மரம் வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறவும் அரசு முயல்கிறது

“கபீர் மகோற்சவம்”

  • புகழ்பெற்ற சமயசார்பற்ற துறவியான, “கபீர் தாஸ்” அவர்களின் 5௦௦-வது இறந்த தினத்தை முன்னிட்டு, உத்திரப்பிரதேச மாநிலத்தின் கபீர் நகர மாவட்டத்தில் “கபீர் மகோற்சவம்” என்ற 2 நாள் நிகழ்ச்சியினை பிரதமர் துவக்கி வைத்தார்

“செபி” அமைப்பின் முழுநேர உறுப்பினர்:

  • இந்திய பங்குச்சந்தை கட்டுபாட்டு வாரியமான “செபி” அமைப்பின் அதிகாரமிக்க முழுநேர உறுப்பினர் பதவிக்கு “ஆனந்த் பருவா” அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது
  • இவருக்கு மாத ஊதியம் சுமார் நான்கு லட்சம் ஆகும்

ஆக்சிடோசின் பயன்பாட்டிற்கு தடை:

  • மத்திய அரசு வருகின்ற ஜூலை 1-ம் தேதி, நாடு முழுவதும் மருத்துவ பயன்பாட்டினை தவிர பிற அணைத்து வகை பயன்பாட்டிற்கு “ஆக்சிடோசினை” பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனை இறக்குமதி செய்யவும் தடை விதித்துள்ளது
  • ஆக்சிடோசின் என்பது பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன் ஆகும்.
  • கர்நாடக மாநிலஹ்டில் உள்ள “கர்நாடக மருந்து நிறுவனத்தை” தவிர எந்த நிறுவனமும் இதனை தயாரிக்க அனுமதி இல்லை
  • ஆக்சிடோசின் ஹார்மோனை “காதல் ஹார்மோன்” என்பர்

 

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.