TNPSC DAILY CURRENT AFFAIRS 7TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 7TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 7TH JULY IN TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR VARIOUS COMPETITIVE EXAMS LIKE TNPSC, SSC ETC.,

 

பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக மாற்ற இந்திய சட்டக் கமிசன் பரிந்துரை:

 • இந்திய சட்டக் கமிசன் தனது 276-வது பரிந்துரை அறிக்கையில், விளையாட்டு துறையில் பணம் வைத்து விளையாடுதல் மற்றும் சூதாட்டம் போன்றவற்றை தடை செய்வதால் மட்டும் தடுக்க இயலாது என்றும், இதனை சட்ட பூர்வமாக மாற்றுவது சிறந்தது என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது (THE LAW COMMISSION OF INDIA, IN ITS 276TH REPORT, HAS RECOMMENDED LEGALISATION OF REGULATED BETTING AND GAMBLING ACTIVITIES)
 • இதனை சட்ட பூர்வமாக மாற்றி அதற்கு வரி விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது

அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து தடுப்பு சோதனை கட்டாயம்:

 • பஞ்சாப் மாநிலத்தில் அணைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டாய போதைப் பொருள் மருந்து சோதனை அறிவிக்கப்பட்டுள்ளது (PUNJAB CHIEF MINISTER, AMARINDER SINGH HAS ORDERED A MANDATORY DOPE TEST FOR ALL GOVERNMENT EMPLOYEES, INCLUDING POLICE PERSONNEL)
 • காவல் துறை உட்பட அணைத்து துறை ஊழியர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் முறை பணியில் சேர்வதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் கட்டாய சோதனை மேற்கொள்வதுடன், பதவி உயர்வு போன்ற தருணங்களிலும் இது கட்டாயம் ஆகும்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்பிற்கு 1௦ ஆண்டு தண்டனை:

 • “பனாமா பேப்பர்ஸ்” தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபப்ட்ட ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு 1௦ ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்
 • மேலும் நவாஸ் ஷெரிப்பிற்கு 1௦ மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சர்வதேச கூட்டுறவு தினம்:

 • சர்வதேச கூட்டுறவு தினம் (International Day of Cooperatives) இந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது
 • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை “சர்வதேச கூட்டுறவு தினம்” கொண்டாடப்படும்
 • இந்த ஆண்டிற்கான கரு = Sustainable societies through cooperation
 • 1923ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய தலைவர்:

 • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது (JUSTICE ADARSH KUMAR GOEL, HAS BEEN APPOINTED AS THE NEW CHAIRPERSON OF THE NATIONAL GREEN TRIBUNAL (NGT))
 • ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்

ஆளில்லா ரயில்வே கிராசிங் இல்லாத இந்தியாவின் முதல் ரயில்வே கோட்டம்:

 • இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை முற்றிலும் ஒழித்த முதல் ரயில்வே மண்டலம் என்ற சிறப்பை கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தை சேர்ந்த சம்பல்பூர் ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது (SAMBALPUR DIVISION IS THE FIRST OF ITS KIND NOT ONLY IN EAST COAST RAILWAY, BUT ALSO IN THE ENTIRE INDIAN RAILWAYS)
 • ஒரே சமயத்தில் அக்கோட்டதில் உள்ள 6 ரயில்வே கிராசிங்கையும் ஒழித்து, புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டது

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் “சியட்” நிறுவ டயர் தொழிற்சாலை அமைய உள்ளது.

 • இந்தியாவின் முன்னை டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான “சியட்” நிறுவனம் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனது புதிய ஆலையை அமைக்க உள்ளது
 • 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த ஆளை, நாளொன்றுக்கு 25௦ டன் டயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைய உள்ளது
 • நடப்பு நிகழ்வுகளை மேலும் அறிய

முதல் மின்-வணிக செயலாக்கக் குழு கூட்டம்:

 • முதல் மின்-வணிக செயலாக்கக் குழு கூட்டம் புது தில்லியில் வணிகத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது (FIRST MEETING OF THE TASK FORCE ON E-COMMERCE)
 • வணிகத் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது

உலகின் 3-வது பெரிய பணக்காரர்:

 • உலகின் 3-வது பெரிய பணக்காரராக “வாட்ஸ்அப்” (முகநூல்) நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேறியுள்ளார் (FACEBOOK INC. CO-FOUNDER MARK ZUCKERBERG HAS OVERTAKEN WARREN BUFFETT AS THE WORLD’S THIRD-RICHEST PERSON)
 • 3-வது இடத்தில இருந்த வாறன் பபட்டை பின்னுக்கு தள்ளி இவர் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 2 இடங்களில் முறையே அமேசான் அதிபர் ஜெப் பெசொஸ் மற்றும் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் நாட்டிலே அதிக வரி செலுத்திய நிறுவனம்:

 • ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முகேஷ் அம்பானி, நாட்டிலேயே அதிக வரி செலுத்திய தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளதாக தெரிவித்தார் (RELIANCE IS INDIA’S LARGEST PAYER OF GOODS AND SERVICES TAX (GST), EXCISE AND CUSTOMS DUTY, AND INCOME TAX IN THE PRIVATE SECTOR PAYING RS.9844 CRORE IN FY18)
 • இந்த ஆண்டு மட்டும் சுமார் 9844 கோடி ரூபாய் வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

“ஒரு நபர், ஒரு கார் கொள்கை”:

 • அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளின் போக்குவரத்து செலவை குறைக்க ஏதுவாக, மேற்குவங்க மாநில அரசு “ஒரு நபர், ஒரு கார் கொள்கையை” கொண்டு வந்துள்ளது (ONE PERSON, ONE CAR POLICY)
 • அதுபோல் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்களுக்கு அரசு படிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், ரயில்களிலும் பொருளாதார வகுப்பு பெட்டிகளில் மட்டுமே பயண அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பார்வைத்திறன் அற்ற உலகின் முதல் ரோபோட்:

 • அமெரிக்காவின் மசாசுட்டஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் பார்வைத்திறன் இன்றி செயல்படும் ரோபோவை உருவாக்கி உள்ளனர்
 • இதற்கு “சிறுத்தை 3” (CHEETAH 3) எனப் பெயரிட்டுள்ளனர். இது 40 கிலோ எடை கொண்ட 4 கால்களில் இயங்கும் திறன் கொண்டது (FOUR-LEGGED ROBO)
 • “பார்வை திறன் இன்றியும்” செயல்படும் விதத்தில் இதற்கான மென்பொருள் அல்காரிதம் உருவாக்கப்பட்டுள்ளது

முதல் பி.எஸ்.-6 இஞ்சின் சான்றிதழ்:

 • “ஐகேட்” எனப்படும் சர்வதேச மோட்டார் தொழில்நுட்ப மையத்தால், இந்தியாவில் முதல் பி.எஸ்-6 இஞ்சின் உற்பத்திக்கான சான்றிதழ், “வால்வோ” நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது (ICAT HAS ISSUED THE FIRST BS-VI CERTIFICATION FOR A HEAVY DUTY ENGINE MODEL FOR M/S VOLVO EICHER COMMERCIAL VEHICLE LIMITED)
 • கனரக வாகன மாதிரி தயாரிப்பிற்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது

Leave a Comment

Your email address will not be published.