TNPSC DAILY CURRENT AFFAIRS 8TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 8TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 8TH JULY WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

 

 

பாகிஸ்தானின் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்மணி:

  • பாகிஸ்தானில் நடைபெற உள்ள மாகாணத் தேர்தலில், முதல் முறையாக சிறுபான்மை இனத்தவரான ஒரு இந்துப் பெண்மணி முதன் முதலாக போட்டியிடுகிறார் (SUNITA PARMAR, A HINDU WOMAN IN SINDH PROVINCE, HAS CREATED HISTORY BY BECOMING THE FIRST FROM THE MINORITY COMMUNITY TO CONTEST THE PROVINCIAL ASSEMBLY ELECTIONS IN PAKISTAN)
  • சுனிதா பர்மர், சிந்து மாகாணத் தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறார். பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்மணி என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்

இந்திய சிவில் விமானவியல் ஆராய்ச்சி கழகம்:

  • இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில், ஹைதராபாத் நகரில் உள்ள பெகும்பேட் விமான நிலையத்தில் “இந்திய சிவில் விமானவியல் ஆராய்ச்சி கழகம்” அமைக்கப்பட உள்ளது (AIRPORTS AUTHORITY OF INDIA (AAI) WILL SET UP A STATE-OF-THE-ART CIVIL AVIATION RESEARCH ORGANISATION (CARO) AT BEGUMPET AIRPORT, HYDERABAD)
  • மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், இதற்கான அடிக்கல்லை நாட்டினார்

5௦௦ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய 3-வது இந்தியர்:

  • 5௦௦ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய 3-வது இந்தியர் என்ற சிறப்பை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி பெற்றுள்ளார் (3RD INDIAN CRICKETER TO REACH THE COVETED MILESTONE OF PLAYING 500 INTERNATIONAL MATCHES)
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-2௦ சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பொழுது, இவர் தனது 5௦௦வது சர்வதேச கிரிக்கெட் போட்டியினை நிறைவு செய்தார்
  • இதற்கு முன்னர் 5௦௦ போட்டிகளை நிறைவு செய்த 2 இந்தியர்கள் = சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்
  • தோனி 9௦ டெஸ்ட் போட்டிகள், 318 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி-2௦ சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்
  • சர்வதேச அளவின் 5௦௦ கிரிக்கெட் போட்டிகளை கடந்த 9-வது வீரர் தோணி ஆவார்

முதுமலை புலிகள் காப்பகம்:

  • முதுமலை புலிகள் காப்பகத்தை மத்திய அரசு கடந்த ஜூலை 6-ம் தேதி, “பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியாக (உயிர்ச்சூழல் மண்டலமாக)” அறிவித்துள்ளது (ON JULY 6, THE UNION MINISTRY OF ENVIRONMENT, FORESTS AND CLIMATE CHANGE (MOEFCC) DECLARED THE 438 SQ. KM. OF AREA AROUND MUDUMALAI TIGER RESERVE (MTR) AS AN ECO-SENSITIVE ZONE (ESZ))
  • 438 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த புலிகள் காப்பகம், மேற்குத் தொடர்ச்சி மலையுடன் பின்னிப்பிணைந்து உள்ளதாகும்

சர்வதேச வட்டமேசை மாநாடு:

  • “புதிய இந்தியாவிற்கான தகவல்” என்ற தலைப்பில் சர்வதேச வட்டமேசை மாநாடு வருகின்ற 9-ம் தேதி, புது தில்லியில் மத்திய புள்ளியியல் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது (THE INTERNATIONAL ROUND TABLE CONFERENCE ON “DATA FOR NEW INDIA’’)
  • இந்தியாவில் புள்ளியியல் துறை மேம்படுத்தும் விதமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது

கபுத்தரி தேவி:

  • புகழ் பெற்ற கௌமுனி நாட்டுபற பாடகியான கபுத்தறி தேவி உத்திரகாண்டின் பித்தோகார் நகரில் காலமானார்
  • அவருக்கு வயது 7௦.

தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காண மேலாண்மை மையம்:

  • இந்திய தேசிய மென்பொருள் கூட்டமைப்பான “நாஸ்காம்” (NATIONAL ASSOCIATION OF SOFTWARE AND SERVICES COMPANIES (NASSCOM)), கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் “தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மையத்தை” (CENTRE OF EXCELLENCE FOR DATA SCIENCE AND ARTIFICIAL INTELLIGENCE) துவக்கி உள்ளது
  • இதற்காக நிதி ஆயோக் அமைப்புடன் நாஸ்காம் அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது

உலக ஜூனோசிஸ் தினம், ஜூலை 6:

  • உலக ஜூனோசிஸ் தினம் (WORLD ZOONOSES DAY), உலகம் முழுவதும் ஜூலை 6-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த் தாக்குதலை குறிப்பிடுகிறது, “ஜூனோசிஸ்”.

உலகின் முதல் காண்டாமிருக கருமுட்டை உருவாக்கம்:

  • ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் காண்டாமிருகம் கருமுட்டையை, சோதனை குழாயின் மூலம் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் (RESEARCHERS HAVE CREATED THE WORLD’S FIRST RHINO EMBRYOS IN A TEST TUBE)
  • அழிந்து வரும் வட பகுதி வெள்ளை பெண் காண்டாமிருகங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது
  • தற்போது உலகின் 2 பெண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன
  • நடப்பு நிகழ்வுகளை மேலும் அறிய

இந்தியாவின் முதல் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை:

  • இந்தியாவின் முதல் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை புது தில்லியில், மத்திய அமைச்சர் நிதின் கத்காரி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது (INDIA’S 1ST TAXI AMBULANCE SERVICE)
  • “வேகன் காப்” என்ற நிறுவனத்தால் துவங்கப்பட்டுள்ள இந்த டாக்சி ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவிமுறைகள் அறிந்த ஓட்டுனர்கள கொண்டு இயக்கப்படுகிறது

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.