TNPSC DAILY CURRENT AFFAIRS 9TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 9TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS 9TH JULY WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

 

6-வது உலக நகரங்கள் மாநாடு:

  • 6-வது உலக நகரங்கள் மாநாடு (6TH WORLD CITIES SUMMIT), சிங்கப்பூரின் மரினா பே சான்ஸ் பகுதியில் துவங்கியது.
  • இம்மாநாட்டிற்கான கரு (THEME) =LIVEABLE & SUSTAINABLE CITIES : EMBRACING THE FUTURE THROUGH INNOVATION AND COLLABORATION
  • மேலும் இந்த மாநாட்டை ஒட்டி சிங்கப்பூரில், “சிங்கபூர் சர்வதேச நீர் வாரம்” (SINGAPORE INTERNATIONAL WATER WEEK) கொண்டாடப்பட்டது.

உலக சம்ஸ்கிருத கருத்தரங்கம்:

  • உலக சம்ஸ்கிருத கருத்தரங்கின் 17-வது நிகழ்ச்சி (17TH WORLD SAMSKRIT CONFERENCE), கனடா நாட்டின் வான்கூவர் நகரில் 9ம் தேதி முதல் துவங்கியது
  • இம்மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவ்தேகர் துவக்கி வைத்தார்
  • இம்மாநாட்டின் நோக்கம், சம்ஸ்கிருத மொழியை முன்னிலைப்படுத்தி வளர்ச்சி பெற செய்தல் ஆகும்
  • 16-வது உலக சம்ஸ்கிருத மாநாடு, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2௦15ம் ஆண்டு நடைபெற்றது

உலகின் உயரமான எரிமலையை ஏறிய இந்தியாவின் 2-வது நபர்:

  • உலகின் மிக உயரமான எரிமலையான “ஒஜோஸ் டெல் சலோடா”வை ஏறிய இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை “சத்யருப் சித்தாந்தா” பெற்றுள்ளார் (SATYARUP SIDDHANTA HAS BECOME SECOND INDIAN MOUNTAINEER AFTER MALLI MASTAN BABU TO CLIMB MT OJOS DEL SALADO (6893 M), THE HIGHEST VOLCANO IN THE WORLD)
  • முதன் முதலில் இந்த எரிமலையை ஏறிய முதல் இந்தியர் = மல்லி மஸ்தான் பாபு ஆவார்
  • இந்த எரிமலையின் உயரம் = 6893 மீ. இந்த எரிமலை அர்ஜென்டினா – சிலி நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ளது

நீட், ஜே.இ.இ தேர்வுகள் இனி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும்:

  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள “தேசிய தேர்வுகள் முகமை” (NATIONAL TESTING AGENCY) அமைப்பு மூலம் இனி ஆண்டுக்கு இரு முறை நீட் (NEET), ஜே.இ.இ. (JEE) போன்ற தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
  • மேலும் இந்த அமைப்பு, “நெட்” எனப்படும் தேசிய தகுதித் தேர்வையும் (NET – NATIONAL ELIGIBILITY TEST) நடத்தும்

67-வது வடகிழக்கு கவுன்சில் கூட்டம்:

  • 67-வது வடகிழக்கு கவுன்சில் கூட்டம் (67TH PLENARY MEETING OF NORTHEAST COUNCIL), மேகாலயாவின் சில்லாங் நகரில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்
  • வடகிழக்கு கவுன்சிலின் உறுப்பினர்கள் = அஸ்ஸாம், அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா

உலக ஜிம்னாஸ்டிக் சேலஞ்சர் கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியர்:

  • துருக்கி நாட்டின் மெர்சின் நகரில் நடைபெற்று வந்த “ஜிம்னாஸ்டிக் உலக சேலஞ்சர் கோப்பை” (GYMNASTICS WORLD CHALLENGE CUP) போட்டியின் வால்ட் பிரிவில், இந்தியாவின் “தீபா கர்மாகர்” தங்கம் வென்றார்
  • சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் (FIRST INDIAN TO CLINCH GOLD IN GYMNASTICS WORLD CHALLENGE CUP) என்ற சிறப்பை தீபா கர்மாகர் பெற்றுள்ளார். அவர் பெற்ற புள்ளிகள் 14.150 ஆகும்
  • ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றவர் இவர் (2௦16 ரியோ ஒலிம்பிக்)

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா:

  • கடந்த 3 ஆண்டுகளில், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” (PRADHAN MANTRI AWAS YOJANA (RURAL)) திட்டத்தின் கீழ் 51 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
  • இதில் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 28 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கஸ்தூரி ரங்கன் குழு:

  • “புதிய கல்விக் கொள்கை” (NEP – NEW EDUCATION POLICY) உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் காலக்கெடு வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது
  • மூன்றாவது முறையாக இக்குழுவின் காலெக்]கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • தற்போதைய “தேசிய கல்விக் கொள்கை” (NEP – NATIONAL EDUCATION POLICY) 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இது 1992ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
  • கஸ்தூரி ரங்கன், முன்னாள் இஸ்ரோ மைய தலைவர் ஆவார்

மேன் புக்கர் பரிசு 2018:

  • 2018ம் ஆண்டிற்கான “மேன் புக்கர் பரிசு”, “மைக்கேல் ஒண்டாட்ஜே” எனபவர் எழுதிய போர்க்கால காதல் கதை கொண்ட நாவலான “THE ENGLISH PATIENT” என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது (‘THE ENGLISH PATIENT’, THE WARTIME LOVE STORY BY MICHAEL ONDAATJE, HAS WON THE GOLDEN MAN BOOKER PRIZE AT THE CLOSING EVENT OF THE MAN BOOKER 50 FESTIVAL)
  • இது மேன் புக்கர் பரிசின் 5௦-வது ஆண்டாகும். 5௦-வது தங்க ஆண்டு மேன் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது

“இரும்புமனித முத்தடகள” போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதிய பெண்மணி:

  • உலகிலேயே கடினமான விளையாட்டாக கருதப்படும் ஆஸ்திரியாவில் நடத்தப்படும் “இரும்புமனித முத்தடகள” (IRONMAN TRIATHLON) போட்டியில் இந்தியாவை சேர்ந்த 52 வயதான “அஞ்சு கோஸ்லா” என்ற முதிய பெண்மணி வெற்றிபெற்றார் (ANJU KHOSLA (52) HAS BECOME THE OLDEST INDIAN WOMAN TO COMPLETE AN IRONMAN TRIATHLON)
  • இந்த முத்தடகள போட்டியானது ஒரே நாளில் இடைவெளி இன்றி 3.86 கிலோமீட்டர் நீந்தி, 180.25 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஒட்டி, 42.2 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஓடி வெற்றியை அடைய வேண்டும்

ஜூனியர் உலக பளுதூக்கும் சாம்பியன்சிப்:

  • உஸ்பெகிஸ்தான் நாட்டின் “தாஸ்கன்ட்” நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டின் உலக ஜூனியர் பளு தூக்கும் சாம்பியன்சிப் போட்டியின் 48 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த “ஜில்லி தளபெகரா” என்ற மங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றார் (INDIAN LIFTER JHILLI DALABEHERA FROM ODISHA BAGGED THE BRONZE MEDAL IN THE 48 KG CATEGORY AT THE 2018 IWF JUNIOR WORLD WEIGHTLIFTING CHAMPIONSHIPS AT TASHKENT, UZBEKISTAN)
  • ஜூனியர் உலக பளு தூக்கும் சாம்பியன்சிப் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி என்ற சிறப்பை இவர் பெற்றார்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.