TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 06/11/2022
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 06/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
17வது பிரவாசிபாரதிய திவாஸ் 2023 மாநாட்டில் தலைமை விருந்தினர்
- 17வது பிரவாசிபாரதிய திவாஸ் 2023 மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்பவர் = யானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி // President of Guyana Dr. Mohammad Irfan Ali will be the Chief Guest at the 17th Pravasi Bharatiya Divas Conference.
- 17வது பிரவாசிபாரதிய திவாஸ் 2023 மாநாடு நடைபெறவுள்ள இடம் = இந்தூர், மத்தியப்பிரதேசம்
- பிரவாசிபாரதிய திவாஸ் தினம் = ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் தேதி
- 2023 ஆம் ஆண்டின் இளைஞர்கள் பிரவாசிபாரதிய திவாஸ் தினத்தின் சிறப்பு விருந்தினர் = ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனெட்டா மஸ்கரென்ஹாஸ்.
திட்டம் அருணாங்க் (Project Arunank)
- பதப்படுத்தப்பட்ட எஃகு கசடு அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைச் சாலை அமைப்பதற்கு (BRO) ‘திட்ட அருணாங்க்’ கீழ் பயன்படுத்தப்படுகிறது // Processed steel slag is used to build border road in Arunachal Pradesh under ‘Project Arunank’ of the Border Road Organisation’s (BRO).
- அருணாங்க் திட்டமானது எல்லை சாலை அமைப்பின் (BRO) கீழ் உள்ள திட்டங்களில் ஒன்றாகும்.
- அருணாச்சல பிரதேசத்தில் சாலைகளை நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்கும் அருணாங்க் திட்டம் பொறுப்பேற்றுள்ளது, எனவே இதற்கு ‘அருணாங்க்’ என்று பெயர்.
- ரோடு கட்டுமானத்தில் ஸ்டீல் கசடு பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிப்பது மட்டுமின்றி கட்டுமான செலவை குறைக்கவும் உதவும்.
- இந்தியாவின் முதல் முறையாக எஃகு கசடுகளை கொண்டு சாலை அமைக்கப்பட்ட இடம் = சூரத், குஜராத்.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 06/11/2022
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பேங்க் ஆஃப் இந்தியாவின் ஸ்டார் சூப்பர் டிரிபிள் செவன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்
- பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டார் சூப்பர் டிரிபிள் செவன் ஃபிக்ஸட் டெபாசிட் என்ற சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது // Bank of India has launched a special fixed deposit scheme named Star Super Triple Seven Fixed Deposit.
- இந்த சிறப்புத் திட்டம், 777 நாட்களுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, 25% வட்டி விகிதத்தை (குடிமக்களுக்கு 7.75 சதவீதம்) வழங்குகிறது.
- வங்கி அதன் தற்போதைய 555 நாட்கள் நிலையான வைப்புத் திட்டத்தின் வட்டி விகிதத்தை 6.30% ஆக உயர்த்தியுள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய பாலின செல்வ இடைவெளி கொண்ட நாடு – இந்தியா
- மற்ற ஆசியா-பசிபிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகப்பெரிய பாலின செல்வ இடைவெளி (64%) இருப்பதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது // A new study revealed that India has the Largest gender wealth gap (64%) as compared to other Asia-Pacific countries.
- 2022 WTW Global Gender Wealth Equity அறிக்கை, தலைமைப் பதவிகளில் பெண்களுக்கான வாய்ப்புகளும் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது, இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 3% பேர் மட்டுமே மூத்த பதவிகளை வகிக்கின்றனர்.
- பாலின செல்வ இடைவெளியின் அடிப்படையில் தென் கொரியா APAC பிராந்தியத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 06/11/2022
உலகப் சுற்றுலா பயணச் சந்தை கண்காட்சி
- உலகப் சுற்றுலா பயணச் சந்தை கண்காட்சி நடைபெற உள்ள இடம் = லண்டன் நகரம் // Ministry of Tourism, Government of India will participate in World Travel Market (WTM) 2022 from 7th to 9th November in London which is one of the largest international travel exhibitions.
- இந்த ஆண்டு கண்காட்சியின் கருப்பொருள் ‘பயணத்தின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது’.
- 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயணம் மற்றும் சுற்றுலாவின் பங்களிப்பு மொத்தப் பொருளாதாரத்தில் 5.19% ஆகும்.
27வது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (COP 27)
- 27வது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (COP 27) நடைபெறவுள்ள இடம் = எகிப்தின் ஷார்ம் எல்ஷேக்கில் // 27th Conference of Parties of the UNFCCC (COP 27)
- இம்மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்துக் கொள்பவர் = பூபேந்தர் யாதவ் (சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர்)
- UNFCCC = United Nations Framework Convention on Climate Change
- நோக்கம்: பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் மாநாட்டின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட உலகின் கூட்டு காலநிலை இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கை எடுப்பது.
உலக அளவில் பாம்பு கடிக்கு இறப்பவர்கள் 80% இந்தியர்கள்
- இந்தியாவில் ஆண்டுக்கு 64000 பேர் பாம்பு கடிக்கு பலியாவதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
- இது உலகளவில் ஒப்பிடும் பொது பாம்பு கடிக்கு பலியாகும் நபர்களில் 80 சதவீதம் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக சையது முஸ்தாக் கோப்பையை வென்ற மும்பை அணி
- மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்ற சையது முஸ்தாக் கோப்பைக்கான கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பை அணி, இமாச்சலப் பிரதேச அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.
- இது 15 வது சையது முஸ்தாக் கோப்பை தொடர் ஆகும்.
சென்னையில் முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா
- வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் முதல் முறையாக பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
- இதற்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் விழா நடைபெற்றது.
- இந்த விழாவில் 20 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பதிப்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இருவிரல்” பரிசோதனை முறைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்
- பாலியல் வழக்குகளை விசாரிக்கும் போது “இரு விரல்” பரிசோதனை முறையைப் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு உத்தரவிட்டுள்ளது.
- பெண்ணுறுப்பில் “ஹைமன்” என்ற சவ்வு இருக்கும். அந்தச் சவ்வு கிழிந்துள்ளதா, இல்லையா என்பதைப் பரிசோதிப்பது “இருவிரல்” பரிசோதனை முறையாகும்.
- மிகவும் வலி தரக்கூடிய இந்த இருவிரல் பரிசோதனைக்கு கடந்த 2018 ஆம் ஆனசு ஐ.நா சபை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கடைசி டீக்கடை
- உத்தராகண்ட் மாநிலத்தில் 10500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கிராமம் = மானா.
- இந்தியாவின் கடைசி கிராமம் எனப்படும் கிராமம் = உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மானா மலைக்கிராமம்.
- இக்கிராமத்தில் உள்ள டீக்கடையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பான “யுபிஐ” சென்று சேர்ந்துள்ளதை குறிப்பிடும் வகையில் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா “இந்தியாவின் கடைசி டீக்கடையிலும் யுபிஐ” என பதிவிட்டு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 5
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 4
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 3
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 1