TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL -26.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 26.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

 

2018 ஐ.சி.சி. பெண்கள் டி-2௦ உலகக்கோப்பை கிரிக்கெட்:

  • 2018 ஐ.சி.சி பெண்கள் டி-2௦ கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது
  • முதல் நாள் ஆட்டத்தில், இந்திய பெண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் நியுசிலாந்து அணியுடன் மோதுகிறது
  • 1௦ அணிகள் இதில் பங்கு கொள்ள உள்ளன

மாநிலங்களுக்கு இடையேயான 58-வது தேசிய சீனியர் தடகள போட்டிகள:

  • மாநிலங்களுக்கு இடையேயான 58-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள் அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் துவங்கியது
  • நான்கு நாள் நடைபெறும் இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 800 வீரர்கள் கலந்துக் கொள்கின்றனர்

இந்தியாவின் முதல் பழங்குடியின அழகு ராணி:

  • ஓடிஸா மாநிலத்தில் நடைபெற்ற “ஆதி ராணி கலிங்கா பழங்குடியின அழகு ராணி” போட்டியில் ஓடிசாவின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த “பல்லவி துருவா” என்பவர் அழகி ராணியாக மகுடம் சூட்டினார்
  • இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின லகு ராணியாக அறிவிக்கப்பட்டார். இந்த விழாவின் நோக்கமானது பழங்குடியின கலை மற்றும் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துக்கூறுவதாகும்

செவாலியர் விருது:

  • பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர் விருது”, இந்தி நதிகள் “கல்கி கோச்சலின்” அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
  • இந்தியாவிற்கான பிரெஞ்ச் நாட்டு தூதர் இவ்விருதினை அவருக்கு வழங்கினார்

உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம், ஜூன் 26:

  • உலகம் முழுவதும் ஜூன் 26ம் தேதி, உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்
  • இந்த ஆண்டிற்கான கரு = Listen First – Listening to children and youth is the first step to help them grow healthy and safe

உலக உணவு விருது 2018:

  • 2018ம் ஆண்டிற்கான உலக உணவு விருது, இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் “லாரன்ஸ் ஹடாட்” என்பவருக்கும், உலக உணவு அமைப்பில் உறுப்பினரான “டேவிட் நபர்ரோ” அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது
  • உலக உணவு விருதை இதுவரை 7 இந்தியர்கள் வென்றுள்ளனர்
    1. 1987 = இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (இவ்விருதை வென்ற முதல் இந்தியர்)
    2. 1989 = இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன்
    3. 1996 = டாக்டர் குருதேவ் குஷ்
    4. 1998 = டாக்டர் பார்வலே
    5. 2௦௦௦ = சுரிந்தர் வசல்
    6. 2௦௦5 = டாக்டர் மொததுகு விசை குப்தா
    7. 2014 = சஞ்சய ராஜாராம்

இந்தியா, சிசல்ஸ் நாடுகள் இடையே 6 ஒப்பந்தம்:

  • சிசல்ஸ் நாட்டு அதிபர் டேனி பார், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் வருகையின் பொழுது, இந்தியா மற்றும் சிசல்ஸ் நாடுகள் இடையே 6 முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது
  • சிசல்ஸ் நாட்டின் ராணுவ தேவைகளுக்காக இந்தியாவின் சார்பில் 1௦௦ மில்லியர் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம், கடனாக வழங்கப்படும்
  • இந்தியப் பிரதமர் ஏற்கனவே அறிவித்தப்படி இரண்டாவது டோர்னியர் விமானம் சிசல்ஸ் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக எலிசபெத் ராணி இறுதி ஒப்புதல்:

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரிட்டன் நாடு விலகுவதற்கான “ப்ரேக்சிட்” மசோதாவிற்கு, அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்
  • கடந்த வாரம் இங்கிலாந்தின் இரண்டு பாராளுமன்றத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், ராணியின் இறுதி ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது

உலகின் முதல் விண்வெளி தேசத்தின் தலைவர்:

  • ரசியாவை சேர்ந்த செல்வந்தரும் விஞ்ஞானியுமான “இகோர் அசுர்பெய்லி”, தன்னை “விண்வெளியின் முதல் தேசமான “ஆஸ்கார்டியாவின்” தலைவராக” அறிவித்துக் கொண்டார்
  • இவரின் தனிப்பட்ட செல்வத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் முதல் விண்வெளி தேசமான ஆஸ்கார்டியாவில் வசிக்க இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

இஸ்ரேலிடம் இருந்து 4500 ஏவுகணை வாங்க இந்தியா ஒப்பந்தம்:

  • சுமார் 5௦௦ மில்லியன் அமெரிக்க டாலர் (3400 கோடி ரூபாய்) மதிப்பில் இஸ்ரேல் நாட்டிடம் இருந்து 4500 ஸ்பைக் ஏவுகணை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது
  • ஸ்பைக் ஏவுகணை, தனி ஒருவர் தூக்கி செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள நான்காம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்

வெளிநாட்டு பணியாளர்களால் அதிகம் விரும்பப்படும் நகரம்:

  • வெளிநாட்டு நபர்களால் பணிபுரிய அதிகம் விரும்பப்படும் நகரமாக இங்கிலாந்தின் லண்டன் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • முதல் இடத்தில இருந்து நியுயார்க் நகரை இந்த ஆண்டு லண்டன் நகரம் பின்னுக்கு தள்ளியது

அல்டப்ரா இராட்சத ஆமை – இந்தியாவிற்கு சிசல்ஸ் வழங்கிய பரிசு:

  • சமிபத்தில் சிசல்ஸ் நாட்டிற்கு இந்தியாவின் சார்பில் இரண்டாவது டோர்னியர் விமானம் நல்லெண்ண விதமாக வழங்கப்பட்டது
  • அதுபோல, இந்தியாவிற்கு சிசல்ஸ் நாட்டின் சார்பில் “இரண்டு அல்டப்ரா இராட்சத ஆமை” வழங்கப்பட்டன. இந்த ஆமைகள் ஹைதராபாத் நகரில் உள்ள விலங்குகள் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது

 

FOR MORE:

  1. TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25.06.2018
  2. TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24.06.2018
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.