TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 30.06.2018
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,
யுனஸ்கோ – உலக பாரம்பரிய இடப் பட்டியல்:
- “யுனஸ்கோ உலக பாரம்பரிய இடப் பட்டியல்” வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில், இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த 19ம் நூற்றாண்டு கட்டிடமான “விக்டோரியன் கோதிக்” கட்டிடமும், 2௦ம் நூற்றாண்டை சேர்ந்த “ஆர்ட் டேகோ” கட்டிடமும் இடம் பிடித்துள்ளன
- ஏற்கனவே மும்பையின் கடற்கரை அருகே உள்ள எலிபெண்டா குகை மற்றும் விக்டோரியா முனையம் ஆகியவை யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், 3-வதாக இந்த கட்டிட மையமும் இடம் பிடித்துள்ளன
- இதன் மூலம் இந்தியாவின் உள்ள மொத்த யுனஸ்கோ பாரம்பரிய சின்ன இடங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 29 கலாச்சார இடங்கள், 7 இயற்கை இடங்கள் மற்றும் 1 கலப்பு இடமாகும்.
- உலகளவில் அதிக யுனஸ்கோ பாரம்பரிய இடங்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது
- இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிரா மாநிலம் 5 பாரம்பரிய இடங்களை கொண்டுள்ளது = அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகை பகுதிகள், எலிபெண்டா குகை, விக்டோரியா முனையம் மற்றும் தற்போதையவிக்டோரியன் கோதிக் இடம்
யுனஸ்கோ உலக பாரம்பரிய குழு:
- “யுனஸ்கோ உலக பாரம்பரிய குழு” வின் 42-வது கூட்டம், பக்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வருகிறது
- இக்கூட்டத்தின் முடிவில், யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலில் புதிதாக நான்கு இடங்கள் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை
- விக்டோரியா கோதிக், ஆர்ட் டேகோ (மும்பை, இந்தியா)
- சசானித் தொல்லியல் இயற்கை நிலப்பகுதி (பார் மாகாணம், ஈரான்)
- நாகாசாகி பகுதியின் மறைக்கப்பட்ட கிறித்துவ ஆலய பகுதி (ஜப்பான்)
- சன்சா, புத்த மடாலய மலைப் பகுதி (தென்கொரியா)
தேசிய காளிதாஸ் சம்மான் விருது:
- “தேசிய காளிதாஸ் சம்மான் விருது”, இந்த ஆண்டு காட்சிக் கலைகள் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த “ஏஞ்சலி இலா மேனன்” அவர்களுக்கு மத்தியப்பிரதேச அரசால் வழங்கப்படவுள்ளது
- ரபிந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், “பத்மஸ்ரீ” விருதையும் பெற்றவர் ஆவார்
9-வது தலைமைக் கருத்தரங்க இயக்க கூட்டம்:
- “9-வது தலைமைக் கருத்தரங்க இயக்க கூட்டம்”, புது தில்லியில் நடைபெற்றது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் துவக்கி வைத்தார்
- இக்கூட்டத்தின் கரு = Unprecedented Outreach: Unparalleled Outcomes
- இக்கூட்டத்தில் இந்திய தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் பலர் கலந்துக் கொண்டனர்
முதல் சர்வதேச பாராளுமன்றவாத தினம், ஜூன் 3௦:
- “முதல் சர்வதேச பாராளுமன்றவாத தினம், ஜூன் 3௦”ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
- உலகளவில் பாராளுமன்ற செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடனும், மக்களுக்கான மையமாகவும் இருக்க வேண்டும் எனபதை வலியுறுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது
நிதி ஆயோக்கின் “முதல் டெல்டா தரவரிசை”:
- நிதி ஆயோக்கின் “முதல் டெல்டா தரவரிசை” வெளியிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களை தேர்வு செய்து அதனை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னேற்றுதல் இதன் நோக்கமாகும்
- மொத்தம் 108 மாவட்டங்களை கொண்ட இந்த பட்டியலில் 49 பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது
- முதல் இடம் = குஜராத்தின் தாகோத் மாவட்டம்
- இரண்டாவது இடம் = சிக்கிம் மாநிலத்தின் மேற்கு சிக்கிம் மாவட்டம்
- மூன்றாவது இடம் = தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம்
- 1௦-வது இடம் = தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம்
- 108-வது இடம் = ஜம்மு காஸ்மீரின் குப்வாரா மாவட்டம்
ஐக்கிய நாடுகள் சர்வதேச இடப்பெயர்வு அலுவலகம்:
- ஐக்கிய நாடுகள் சர்வதேச இடப்பெயர்வு அலுவகத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக போர்ச்சுகல் நாட்டின் அந்தோனியோ விடோரினோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
- இது ஐக்கிய நாடுகளின் இடப்பெயர்வு முகமையின் கீழ் உள்ள தலைமை அலுவலகம்.
- நடப்பு நிகழ்வுகள்
காணாமல் போன குழந்தைகளுக்கான “ரீயுனைட்” மொபைல் செயலி:
- இந்தியாவில் காணாமல் போன குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் போன்றோரை கண்டுபிடிக்கவும், தேடவும் உதவியாக “ரீயுனைட்” என்ற புதிய மொபைல் செயலியை மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
- இதனை நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அவர்களின் தொண்டு நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் முதல் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் (எக்கு) ரயில் பெட்டிகள் உருவாக்கம்:
- இந்தியாவின் முதல் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் (எக்கு) ரயில் பெட்டிகள், தமிழகத்தின் சென்னை நகரில் உள்ள பெரம்பூர் ஐ.சி.எப் (INTEGRAL COACH FACTORY) சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது
- சென்னை நகர ரயில் சேவைகளுக்காக இந்த வகை பேட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது
உலக கூட்டமைப்பின் மொத்த வியாபார சந்தை கருத்தரங்கம்:
- உலக கூட்டமைப்பின் மொத்த வியாபார சந்தை கருத்தரங்கம், ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் பகுதியில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- ஹரியானா மாநில வேளாண் வணிகத் துரையின் சார்பில் இது நடத்தப்படவுள்ளது
“அகிம்சா” புத்தகம்:
- “அகிம்சா’ என்ற பெயரில் புத்தகத்தை, பிரபல எழுத்தாளர் சுப்ரியா கேல்கர் அவர்கள் எழுதியுள்ளார். இது அடுத்தமாதம் வெளிவர உள்ளது
- இது அவரின் முதல் நாவலாகும்.
கபடி மாஸ்டர்ஸ் துபாய் கோப்பை:
- துபாயில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான “கபடி மாஸ்டர்ஸ் துபாய் கோப்பை” போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய ஆண்கள் கபடி அணி ஈரான் அணியை 44-26 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது
16 வயது முடிவடைந்தோருக்கு கட்டாய நாட்டு சேவை:
- பிரான்ஸ் நாட்டு அரசு, அந்நாட்டில் 16 வயது நிரம்பிய அணைத்து ஆண் மற்றும் பெண்களுக்கும் கட்டாய நாட்டு சேவையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
- ஆசிரியர் சேவை, தொண்டு நிறுவன் சேவை என என்தாவது ஒரு சேவை செயலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளது