TNPSC Daily Current Affairs in Tamil – July 01

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 01.07.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSC WINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 2, 2A, 4 ETC.,

 

மின்-பாண் அட்டை சேவை:

  • வருமானவரி வரித்துறை, ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டு “உடனடி மின்-பாண் அட்டை’ (PAN CARD – PERMANENT ACCOUNT NUMBER) வழங்கும் சேவை துவக்கியுள்ளது
  • இந்த வசதி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இந்த வசதியை பெற வருமான வரித்துறையின் இணையதளத்தை அணுக வேண்டும் https://www.incometaxindiaefiling.gov.in/
  • பாண் எண் “1௦” இலக்கங்களை கொண்ட எழுத்து மற்றும் எண்கலை கொண்ட தனித்துவ அடையாளமாகும்

லோக்சபாவில் கூட்டத்தொடரில் இனி ஒரு எம்.பி. 5 கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்:

  • லோக்சபாவில் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து, நாள் ஒன்றுக்கு ஒரு எம்.பிக்கு 5 கேள்விகளை மட்டுமே எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • இதற்கு முன்னர் ஒரு எம்.பி நாள் ஒன்றுக்கு 1௦ கேள்விகள் வரை கேள்விகளை எழுப்ப முடியும்

சுவிஸ் வங்கி பண முதலீட்டில் இந்தியா 73-வது இடம்:

  • சுவிஸ் வங்கியில் பணத்தை முதலீடு செய்யும் நாடுகளில் 2௦16ம் ஆண்டில் 88-வது இடத்தில இருந்த இந்தியா, 2௦17ம் ஆண்டில் 15 இடங்கள் முன்னேறி தற்போது “73து இடத்தில்” உள்ளது.
  • கடந்த ஓராண்டில், மீண்டும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துக்கொண்டே வருகிறது
  • சுவிஸ் வங்கியில் அதிகளவு முதலீடு செய்துள்ள நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள நாடு = ஐக்கிய இங்கிலாந்து ராஜ்ஜியம்
  • தற்போது சுவிஸ் வங்கியில், இந்தியர்களின் பணம் சுமார் 7௦௦௦ கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது.

இந்தியாவின் சிறந்த பல் மருத்துவ கல்லூரி:

  • இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக (BEST DENTAL COLLEGE IN INDIA) தொடர்ந்து 7-வது ஆண்டாக புது தில்லி “மவுலானா ஆசாத் பல் மருத்துவக் கல்லூரி” (MAIDS – MAULANA AZAD INSTITUTE OF DENTAL SCIENCES) தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • இந்திய தேசிய மருத்துவ வாரியத்தின் தரச்சான்றை பெற்றுள்ள முதல் மற்றும் ஒரே பல் மருத்துவக் கல்லூரி இதுவாகும்

பாண் – ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு 31 மார்ச் 2௦19 வரை நீட்டிப்பு:

  • மத்திய நேரடி வரிகள் வாரியம், ஆதார் என்னுடன் பாண் எண்ணெய் இணைப்பதற்கான காலக்கெடுவை, வருகின்ற 2௦19ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது
  • 5-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ள இந்த காலக்கெடுவில் இதுவரை 16.65 கோடி பாண் எண்கள் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்:

  • இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற சிறப்பை, தமிழகத்தை சேர்ந்த “சத்யஸ்ரீ சர்மிளா” அவர்கள் பெற்றுள்ளார் (INDIA’S FIRST TRANSGENDER LAWYER)
  • பல ஆண்டுகளாக திருநங்கைகளுக்கான சேவையை செய்துவரும் இவர், தற்போது வழக்கறிஞராக தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்
  • இவர் ராமாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆவார்

கஞ்சன்ஜங்கா மலை ஏறிய முதல் அஸாமி பெண்:

  • உலகின் மூன்றாவது பெரிய மலைப்பகுதியாக கஞ்சன்ஜங்கா மலையை (8586 மீ) ஏறிய முதல் அச்சம் மாநில பெண்மணி என்ற சிறப்பை “மோண்டி ராஜ்கோவா” என்பவர் பெற்றுள்ளார் (FIRST ASSAM LADY TO SCALE MOUNT KANCHANJANGA)
  • மேலும் கஞ்சன்ஜங்கா மலையை ஏறிய முதல் பெண் ஒ.என்.ஜி.சி அதிகாரி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்
  • TNPSC DAILY CURRENT AFFAIRS

ஆசியாவின் முதல் காப்புரிமை மத்தியஸ்த மையம்:

  • ஆசிய கண்டத்தின் முதல் காப்புரிமை மத்தியஸ்த மையம் (ASIA’S FIRST PATENT ARBITRATION CENTRE), ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது
  • காப்புரிமை தொடர்பான “அறிவுசார் சொத்துரிமை” சார்பான சிக்கல்கள் இங்கு தீர்வு காணப்படும்

உலக வங்கியின் ப்ரூக்கிங்க்ஸ் கழக அறிக்கை:

  • உலகில் வறுமை நிலைமை தொடர்பாக, உலக வங்கியின் ப்ரூக்கிங்க்ஸ் கழகம் சார்பில் வறுமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது (WORLD BANK’S BROOKINGS INSTITUTE)
  • இதன் படி, உலகில் அதிகளவு வறுமை நிலையில் உள்ள மக்களை கொண்டுள்ள நாடு என்று கூறப்பட்டு வந்த “இந்தியாவில்”, அந்நிலை மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அதாவது 2௦16ம் ஆண்டு இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை, சுமார் 125 மில்லியன் ஆகும். ஆனால் தற்போது மே 2018-ன் படி, இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை சுமார் 73 மில்லியன் ஆகும்.
  • இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 44 பேர் வறுமையில் இருந்து விடுபடுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது உலக அளவில் மிக அதிகமாகும்
  • இந்நிலை தொடர்ந்தாள் வருகின்ற 2௦22ம் ஆண்டிற்குள், இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை சுமார் 5௦ மில்லியனுக்கும் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • தற்போதே நிலையில் உலகில் அதிக அளவு வறுமை கோட்டிற்கு கீழ் மக்களை கொண்டுள்ள நாடு = நைஜீரியா ஆகும்

உலகின் மிகப்பெரிய செங்குத்தான வேளாண் பண்ணை:

  • ஐக்கிய அரேபிய எமிரகதின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, “உலகின் மிகப்பெரிய செங்குத்தான வேளாண் பண்ணை” (WORLD’S LARGEST VERICAL FARMING FACILITY) ஒன்றினை துபாயின் அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்க உள்ளன
  • சுமார் 12௦௦௦ சதுர அடி பரப்பளவில் இயற்கை முறையில், இரசாயன கொல்லி மருந்துகள் இன்றி காய் கறிகள் இங்கு வளர்க்கப்படும்.
  • நாளொன்றுக்கு சுமார் 27௦௦ கிலோ காய் இலைகள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படும்.

இணையதள தாக்குதலில் இந்தியா நான்காவது இடம்:

  • “அகாமை டெக்னாலஜிஸ்” நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் படி, உலக அளவில் இணையதள சைபர் தாக்குதல்களை அதிகம் சந்திக்கும் நான்காவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது (INDIA RANKS 4TH IN WEB APPLICATION ATTACKS)
  • சமிப காலமாக இந்தியாவில் அதிகளவு சைபர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
  • முதல் 3 இடங்களில் உள்ள நாடுகள் = ரசியா, சீனா மற்றும் இந்தோனேசியா

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.