TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 11TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 11TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 11TH WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

உலக மக்கள் தொகை தினம்:

  • உலக மக்கள் தொகை தினம், உலகம் முழுவதும் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு (THEME) = Family planning is a human right

சரியாக சாப்பிடுதல் இயக்கம்:

  • குடிமக்களின் உடல் ஆரோக்கியத்தை வலுசேர்க்கும் பொருட்டும் அவர்களின் வாழ்வை அதிகரிக்கும் பொருட்டு, “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்” (FSSAI = FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA) சார்பில் “சரியாக சாப்பிடுதல் இயக்கம்” (EAT RIGHT MOVEMENT) தொடங்கப்பட்டுள்ளது
  • இந்த இயக்கம் சார்பில், மக்கள் சரியான உணவை தேர்ந்தெடுத்தல், ஆரோக்கியத்திற்கு உதவிடம் உணவுகளை எடுத்துக் கூறல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு வாழ்வை வலு பெற செய்ய உதவும்
  • இந்த இயக்கத்தின் 2 முக்கிய தூண்களாவன = “ஆரோகியமான உணவை உண்ணுதல்” (EAT HEALTHY) மற்றும் “சரியான் உணவை உண்ணுதல்” (EAT SAFE)
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் = உப்பு / சர்க்கரை இரண்டையும் பெருமளவு குறைத்தல் மற்றும் எண்ணெய் பயன்பாட்டை அடுத்த 3 ஆண்டுகளில் 3௦% அளவிற்கு குறைத்தல் (The aim of the programme is to cut down salt/sugar and oil consumption by 30% in three years)

மேற்கு தொடர்ச்சி மலை – ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று:

  • பிரபல “லோன்லி பிளானட்” நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட 2018ம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த 1௦ சுற்றுலா தளங்கள் பட்டியலில் இந்தியாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதி 4-வது இடத்தை பிடித்துள்ளது
  • இது இமயமலை பகுதியை காட்டிலும் பழமையானது ஆகும். இது யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலில் உள்ள இடமாகும். இது உலகின் சிறந்த பல்லுயிர் வளம் மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாகும்
  • இப்பட்டியலில் முதல் இடத்தில தென் கொரியாவின் பூசான் பகுதி உள்ளது

உலக புதுமைக் குறியீடு:

  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு சார்பில் 11-வது “உலக புதுமைக் குறியீடு” (2018 Global Innovation Index (GII)) வெளியிடப்பட்டுள்ளது. 13௦ நாடுகளை கொண்டுள்ள இப்பட்டியலில் இந்தியா 57-வது இடத்தை பிடித்துள்ளது
    1. முதல் இடம் = சுவிட்சர்லாந்து
    2. 2-வது இடம் = நெதர்லாந்து
    3. 3-வது இடம் = ஸ்வீடன்
    4. 57-வது இடம் = இந்தியா
  • சென்ற ஆண்டு 6௦-வது இடத்தில இருந்த இந்தியா தற்போது 57-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்தியாவின் முதல் இணையதள தொலைபேசியியல் சேவை:

  • இந்தியாவின் முதல் இணையதள தொலைப்பேசியியல் சேவையை, “பி.எஸ்.என்.எல்” நிறுவனம் துவங்கியுள்ளது
  • இதற்காக “விங்ஸ்” என்ற மொபைல் செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
  • இந்த மொபைல் ஆப் மூலம் இந்தியாவின் எந்த நெட்வொர்க் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த செயலி மூலம் எல்லா நிறுவன சேவைகளையும் பயன்படுத்த இயலும்

இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு:

  • இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் புதிய தலைவராக, “சந்தீப் சஞ்செட்டி” அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • இவர் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் ஆவார்

இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்தை அடைந்த இந்தியாவின் முதல் போர்க் கப்பல்:

  • இந்தியக் கப்பல் படையின் ஐ.என்.எஸ் சுமித்ரா என்ற போர்க்கப்பல், இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்திற்கு சென்றடைந்துள்ளது. இந்திய போர்கப்பல் ஒன்று இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்தை அடைவது இதுவே முதல் முறையாகும்
  • இந்தோனேசியாவின் பாரம்பரிய நடன முறையின் படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா – கொரியா தொழில்நுட்ப பரிமாற்று மையம்:

  • இந்திய – கொரிய தொழில்நுட்ப பரிமாற்று மையம் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது
  • இரு நாடுகள் இடையே தொழில்நுட்ப ரீதியாக கொண்டுவரப்படும் புதிய தொழில்நுட்பங்களை, வளர்ச்சிக்காக பரிமாற்றம் செய்துக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

தீர்மானம் 2427:

  • குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் தொடர்பாக “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்” சபை “தீர்மானம் 2427”ஐ நிறைவேற்றியுள்ளது
  • குழந்தைகள் ஆயுதம் ஏந்தி போராடுதல், பாலியல் கொடுமைகள், கடத்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் சட்ட பூர்வமான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது ஐக்கிய நாடுகள் அவை

உலகின் 6-வது பெரிய பொருளாதார நாடு, இந்தியா:

  • உலகின் 6-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது
  • முதல் 5 பெரிய பொருளாதார நாடுகள் = அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இங்கிலாந்து
  • 7-வது யாதில் இருந்த இந்தியா, பிரான்ஸ் நாட்டினை பின்னுக்கு தள்ளி தற்போது 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

பசு சரணாலயம்:

  • ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தின் “கோட்டா பரோக்” என்னுமிடத்தில் விரைவில் “பசு சரணாலயம்” அமைக்க முடிவு செய்து நிதி ஒதுக்கி உள்ளது
  • கால்நடைகள் எண்ணிக்கையை பேருக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது

இந்திய கருவிழி உள்வைப்பு மற்றும் கதிர்சிதைவு சங்க கருத்தரங்கம்:

  • சென்னையில் நடைபெற்ற “இந்திய கருவிழி உள்வைப்பு மற்றும் கதிர்சிதைவு சங்க கருத்தரங்கை” துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்

ஸ்ரீ இராமாயணா எக்ஸ்ப்ரெஸ்:

  • இந்திய ரயில்வே துறை “ஸ்ரீ இராமாயண எக்ஸ்ப்ரெஸ்” என்ற சுற்றுலா ரயில் சேவையை வருகின்ற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது
  • 16 நாட்கள் சுற்றுலாவில், நாட்டின் முக்கிய இராமாயண தளங்கள் காட்டப்படும். இதற்கான பயண செலவு நபர் ஒருவருக்கு ரூ. 1512௦ ஆகும்

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.