TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 12TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 12TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 12TH WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

 

கோவா பல்கலைக்கழகம்:

  • கோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உள்ளூர் “காளான்”களில் இருந்து புற்றுநோயை எதிர்க்கும் திறன் கொண்ட நிறமி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்
  • இந்த காளான்களில் “பழுப்பு அல்லது கருப்பு நிற நிறமி” உள்ளதாகவும், “அதிக சல்பர் சத்து மிக்க மெலனின் நிறமி” உள்ளதையும் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
  • Roen alamis or Termitomyces எனப்படும் இந்த சாதாரண வீட்டுக் காளான்களில் அதிகளவு சல்பர் சக்தி உள்ளதை இவர்கள் உறுதி செய்துள்ளனர்

அண்ணா உணவகம்:

  • ஆந்திர மாநில அரசு, அம்ம்நிலத்தில் ஏழை எளிய மக்கள் உணவருந்தத்தக்க வகையாக “அண்ணா உணவகம்” என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை திறந்துள்ளது
  • முதல் கட்டமாக 35 ஊரகப் பகுதிகளில் 1௦௦ அண்ணா உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரூ.5 என்ற விலையில் இங்கு உணவு வழங்கப்படுகிறது.
  • இந்தியாவில் முதல் முறையாக மலிவு விலை உணவகம், “அம்மா உணவகம்” என்ற பெயரில் சென்னை நகரில் 2௦13ம் ஆண்டு துவக்கப்பட்டது
  • FOR MORE CURRENT AFFAIRS CLICK HERE

இந்தியாவின் முதல் தனியார் “ஆளில்லா விமான தயாரிப்பு” தொழிற்சாலை:

  • “ஆளில்லா விமானம்” (UAV – UNMANNED AIR VEHICLES) மற்றும் “இலகு ரக குண்டு துளைக்காத வாகன” (LBPV – LIGHT BULLET PROOF VEHICLES) தயாரிப்பு தொழிற்சாலை, இந்தியாவில் முதல் முறையாக தனியார் துறை சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் துவக்கப்பட்டுள்ளது
  • டி.சி.எம் ஸ்ரீராம் தொழிலக குரூப் நிறுவனம் இந்த தொழிற்சாலையை துவக்கி உள்ளது

ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் 69-வது பங்குதாரர், இந்தியா:

  • ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் 69-வது பங்குதார நாடாக இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது
  • இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று ஐரோப்பிய நாடுகள் இதனை அறிவித்துள்ளன. ஆனால் இந்தியா இதில் உறுப்பு நாடாக சேர்க்கப்படவில்லை.
  • இந்தியா இதில் பங்குதாரர் மட்டுமே, உறுப்பினர் இல்லை.
  • இதன் தலைமையகம் “லண்டன்” நகரில் உள்ளது

மரபணு மாற்றப்பட்ட தாவர பயிரிடலில் இந்தியா 5-வது இடம்:

  • சர்வதேச வேளாண் – உயிரி தொழில்நுட்ப பயன்பாட்டியல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை 11.4 மில்லியன் ஹெக்டேர் அளவில் பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இதன் மூலம் உலகளவில் மரபணு மாற்றபப்ட பயிரிடுதலில் இந்தியா 5-வது இடத்தில உள்ளது. முதல் இடத்தில் அமேரிக்கா உள்ளது
  • இந்தியாவில் முதன் முதலில் பயிரிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட தாவரம் = பி.டி. பருத்தி ஆகும்
  • இந்தியாவில் தற்போது வரை மரபணு மாற்றப்பட்ட பருத்தி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

இந்தியா, அமேரிக்கா இடையேயான முதல் 2+2 பேச்சுவார்த்தை:

  • இந்தியா மற்றும் அமேரிக்கா நாடுகள் இடையேயான முதல் 2+2 பேச்சுவார்த்தை வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தப் பேச்சுவார்த்தை, தள்ளி வைக்கப்பட்டது.

ஆசியாவின் நெ.1 பணக்காரர்:

  • ஆசியாவின் முதன்மை பணக்காரர் என்ற சிறப்பை, ரிலையன்ஸ் நிறுவன் அதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்
  • இது வரை பெரும் பணக்காராக இருந்த அலிபாபா நிறுவன தலைவரை பின்னுக்கு தள்ளி, அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார்

ஹிமா தாஸ்:

  • பின்லாந்து நாட்டின் டாம்பெர் நகரில் நடைபெற்ற 2௦ வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்சிப் போட்டியின் 400 மீ ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றார்
  • அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது புயல் மங்கை, 51.46 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து, இந்தியாவின் முதல் தங்கத்தை பதிவு செய்தார்
  • இதுவே உலக ஜூனியர் தடகள் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் முதல் தங்கம் ஆகும்.

புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் “சவ் சவ்” காய்:

  • மெக்சிகோ நாட்டினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலப்பின “சவ் சவ்” (பெங்களூரு கத்திரிக்காய்” எனப்படும் காயில் இருந்து “சைட்ராபின்” என்னும் மருந்தினை உருவாக்கி உள்ளனர்
  • இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

தாரோகர் பவன்:

  • “இந்திய தொல்லியல் துறை”க்கு என தனியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதனை பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார்
  • “தாரோகர் பவன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது
  • இந்திய தொல்லியியல் துரையின் தந்தை எனப்படுபவர் = அலெக்சாண்டர் கன்னிங்காம் ஆவார்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.