TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 13TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 13TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 13TH WILL BE UPDATED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC, TNUSRB ETC.,

 

உலக விவகாரங்களுக்காண இந்திய கவுன்சில்:

  • உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சிலின் புதிய இயக்குனர் ஜெனரலாக “டி.சி.ஏ ராகவன்” அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • TCA Raghavan, a 1982 batch officer of the Indian Foreign Service (IFS), has been appointed as Director General of Indian Council of World Affairs (ICWA)
  • இப்பதவியானது இந்திய அரசு செயலாளருக்கு இணையானது ஆகும்.
  • உலக விவகாரங்களுக்காண இந்திய கவுன்சிலின் நிரந்தர தலைவர் = துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்
  • இந்தக் கவுன்சிலின் நிரந்தர துணைத் தலைவர் = வெளியுறவுத் துறை அமைச்சர்

ராணுவ வீரர்களின் ஊதியம் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம்:

  • இராணுவ வீரர்களின் ஊதியம் தொடர்பாக இந்திய ராணுவம், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது
  • இதில் இலவச விபத்து காப்பீடு, நிரந்தர இலவச உடற்குறைபாடு காப்பீடு மற்றும் பிற விபத்து காப்பீடுகள் போன்றவை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தாதா வஸ்வானி:

  • “சாது வஸ்வானி இயக்கத்தின்” தலைவரான பிரபல் ஆன்மீகவாதி “தாதா வஸ்வானி” 99 வயதில் மகாராஸ்டிரா மாநிலத்தின் பூனே நகரில் காலமானார்
  • “சைவ உணவு” மற்றும் “விலங்குகள் உரிமை” தொடர்பான விவகாரங்களில் முன்னின்று நடத்தியுள்ளார்
  • “சாது வஸ்வானி இயக்கத்தை” துவக்கிய சாது தன்வர்தாஸ் லீலாராம் வஸ்வானி” இவரின் குரு ஆவார்
  • இவரின் பிறந்த தினத்தை, “உலக மன்னிப்பு தினமாக” (world forgiveness day) கொண்டாடப்படுகிறது

இந்து கதையாசிரியர் விருது 2018:

  • தி இந்து கதையாசிரியர் விருது 2018க்காண சிறந்த கதையாசிரியர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் “HELLO FARMAISH” என்ற கதை இடம் பெற்றுள்ளது
  • இந்தக் கதையின் ஆசிரியர் = ஸ்னே சப்ரு

“அலுமினியம் : எதிர்கால உலோகம்”:

  • “ALUMINIUM : THE FUTURE METAL” (அலுமினியம் : எதிர்கால உலோகம்) என்ற நூலை “தபன் குமார் சந்த்” என்பவர் எழுதி வெளியிட்டுள்ளார்
  • “நால்கோ” எனப்படும் தேசிய அலுமினியம் நிறுவனத்தின் தலைவரான தபன் குமார் சந்த், எதிர்காலத்தில் அலுமினியம் உலோகம் அதிக கவனத்தை ஈர்க்கும் எனப் பதிவு செய்துள்ளார்

பி.கே.சின்கா குழு:

  • மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைப்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க, மத்திய காபினெட் செயலாளரான “பி.கே. சின்கா” தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்துள்ளது
  • இது நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வழிமுறைகளையும், இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க உள்ளது

உலகின் முதல் முப்பரிமான வண்ண எக்ஸ்-ரே:

உலகின் முதல் முப்பரிமான வண்ண எக்ஸ்-ரே:

உலகின் முதல் முப்பரிமான வண்ண எக்ஸ்-ரே:

  • நியுசிலாந்து நாட்டினை சேர்ந்த விஞ்ஞானிகள், “உலகின் முதல் முப்பரிமான வண்ண எக்ஸ்-ரே” வை மனிதர்களில் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர்
  • “மெடிபிக்ஸ்” (MEDIPIX) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் இந்த வண்ண எக்ஸ்-ரே முறையை உருவாக்கி உள்ளனர்

சுரங்கம் மற்றும் கனிமங்களுக்காண நான்காவது தேசிய கூடுகை:

  • 4-வது சுரங்கம் மற்றும் கணிமங்களுக்காண தேசிய கூடுகை, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்றது
  • சுரங்கத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், இந்தியாவின் ஏற்றுமதியி அதிகரிக்க தேவையான நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது

அஜந்தா குகை, லே அரண்மனை மற்றும் தாஜ்மகால் தவிர பிற இடங்களில் புகைப்படம் எடுக்க அரசு அனுமதி:

  • இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அஜந்தா குகை, லே அரண்மனை மற்றும் தாஜ்மகால்” ஆகிய இடங்களை தவிர பிற இடங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஓடிஸா அரசின் “பாரம்பரிய காபினட்”:

  • ஓடிஸா மாநில அரசு, அம்மாநிலத்தின் கலாசார பாரம்பரிய பண்பாடு, கோவில்கள், தொல்லியல் துறை இடங்கள் போன்றவற்றை பாதுகாக்க ஏதுவாக “பாரம்பரிய காபினட்” என்ற துறையை உருவாக்கியுள்ளது
  • இதன் தலைவராக அம்மாநில முதல்வர் உள்ளார்

இந்திய – சீன கடல்சார் உறவுகள் பேச்சுவார்த்தை:

  • இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையேயான 2-வது கடல்சார் உறவுகள் பேச்சுவார்த்தை சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது
  • கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது

ரயில்நிலைய அழகு போட்டி:

  • ரயில் நிலையங்களில் அழகாக பராமரிக்கப்படும் சிறந்த ரயில் நிலையங்களுக்கு விருதுகளை மத்திய அரசு வழங்கியது
  • முதல் இடம் = மத்திய ரயில்வேயின் பலஹர்ஷா மற்றும் சந்திராபூர் ரயில் நிலையங்கள்
  • இரண்டாவது இடம் = மதுரை ரயில் நிலையம் (தமிழ்நாடு) மற்றும் கிழக்கு மத்திய ரயில்வேயின் மதுபானி ரயில் நிலையம்

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினம்:

  • 15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினம், வருகின்ற 2௦19ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • இத்தினத்திற்கான கரு (THEME) = Role of Indian Diaspora in building a New India
  • பிரதமர் மோடி அவர்களின் நாடாளுமன்ற தொகுதி வாரணாசி என்பது குறிப்பிடத்தக்கது

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.