TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 16TH
TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 16TH WILL BE UPDATED HERE FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 2, 2A, 4 ETC.,
உலக சுங்க கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் வட்டார மையம்:
- உலக சுங்க கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் வட்டார மையத்தின் துணைத் தலைமை பதவி (வட்டார தலைமை), இந்தியாவிற்கு தரப்பட்டுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியாவை தலைமை தாங்க வைக்கும்
- இது, ஒரு அரசு சாரா சுதந்திர நிறுவன அமைப்பாகும். இது 1952ம் ஆண்டு துவக்கப்பட்டது
- இதன் தலைமையகம் ப்ருசெல்ஸ், பெல்ஜியம் ஆகும்
இஸ்ரோவின் “விகாஸ் இஞ்சின்”:
- தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “மகேந்திரகிரி” பகுதியில் அமைந்துள்ள “இஸ்ரோ உந்துவிசை மையத்தில்” இருந்து வெற்றிகரமாக “உயர் அழுத்த திறன் மிக்க விகாஸ் எஞ்சின்” சோதனை மேற்கொள்ளப்பட்டது
- இது மொத்தம் 195 வினாடிகள் நடத்தப்பட்டது
- விகாஸ் எஞ்சின், ஒரு திரவ எரிபொருள் ராக்கெட் இஞ்சின் வகை ஆகும்
2018 பிபா உலகக் கோப்பை:
- ரசியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றுவந்த 2018ம் ஆண்டின் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, குரோசியா அணியை 4 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது
- முதல் முறை 1998ம் ஆண்டு பிரேசில் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது
- பிபா உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக குரோசியா அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது
- முதல் இடம் = பிரான்ஸ் (சாம்பியன்)
- 2-வது இடம் = குரோசியா
- 3-வது இடம் = பெல்ஜியம்
- 4-வது இடம் = இங்கிலாந்து
- தங்கப் பந்தப் விருது = குரோசியாவின் லுகா மோட்றிக்
- தங்க காலனி விருது = இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி கேன்
- தங்க கையுறை விருது = பெல்ஜியம் அணியின் திபவுட் கொர்டைஸ்
- பிபா இளைய வீரர் விருது = பிரான்ஸ் அணியின் 19 வயது கைலியன் மாபெ
- பிபா சிறந்த ஆட்ட அணி விருது = ஸ்பெயின்
ராஜ்யசபாவின் புதிய நியமன உறுப்பினர்கள்:
- ராஜ்யசபாவின் புதிய நியமன உறுப்பினர்களாக நால்வரை, குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்
- ராம் ஷகால் = முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- ராகேஷ் சின்கா = ஆர்.எஸ்.எஸ் தலைவர்
- சோனல் மான்சிங் = நடன ஆசிரியர்
- ரகுநாத் மொகபத்ரா = கற்சிற்ப ஓவியர்
- இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 80(1)A படி, இவர்களை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்
- பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அமைச்சரவை குழு இவர்களை பரிந்துரை செய்தது
- இதன் மூலம், ராஜ்யசபா நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது
சங்கீத கலாநிதி விருது:
- 2018ம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது, பிரபல கர்நாடக பாடகி “அருணா சாய்ராம்” அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- சங்கீத கலாநிதி விருது = அருணா சாய்ராம்
- சங்கீத கலா ஆச்சார்யா விருது = மிருதங்க வித்துவான் தஞ்சாவூர் ஆர்.ராமதாஸ் மற்றும் பாடகர் கே. ஓமன் குட்டி
- டி.கே.விருது = வீணை இசைப்பாளர் கல்யாணி கணேசன் மற்றும் நாதஸ்வரம் வித்துவான் ராஜண்ணா
- இசை பற்றிய ஆய்வு விருது = தமிழாண்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி
- நிர்தியா கலாநிதி விருது = ஷாந்தா தனஞ்சயன்
இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம்:
- இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் சார்பில், “ஐ-மண்டி” என்ற புதிய மொபைல் செயலி வெளியிடப்பட்டது
- இந்நிறுவனத்துடன் தொடர்புடைய அணைந்து நடைவடிக்கைகளும் இணையதளம் மூலம் மேற்கொள்ளும் புதிய நடவடிக்கையை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது
“பன்சாகர் கால்வாய் திட்டம்”:
- இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் 171 கிலோமீட்டர் நீளமுடைய பன்சாகர் கால்வாய் திட்டத்தை, உத்திரப் பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்
- மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுகின்றன
- மேலும் மிர்சாபூர் மருத்துவக் கல்லூரி துவக்க விழாவில் அடிக்கல் நாட்டினார்
2018 விம்பிள்டன் சாம்பியன்சிப்:
- இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வந்த 2018ம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன
- இது 132-வது விம்பிள்டன் சாம்பியன்சிப் போட்டிகளாகும்
- ஆண்கள் ஒற்றையர் = செர்பியாவின் நோவாக் ஜோகோவிக், தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்
- பெண்கள் ஒற்றையர் = ஜெர்மனியின் ஏஞ்செலா கேர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்
- ஆண்கள் இரட்டையர் = அமெரிக்காவின் மைக் ப்ரியன் மற்றும் ஜாக் சாக் இணை, தென்னாப்ரிக்காவின் ரேவன் க்லாசன் மற்றும் நியுசிலாந்தின் மைக்கல் வீனஸ் இணையை வீழ்த்தியது
- பெண்கள் இரட்டையர் = செக் குடியரசின் பார்போரா க்ரேஜிகொவா இணை, செக் குடியரசின் க்வேடா மற்றும் அமெரிக்காவின் நிகோல் இணையை வீழ்த்தியது
- கலப்பு இரட்டையர் = ஆஸ்திரியவின் அலெக்சாண்டர் பெயா மற்றும் அமெரிக்காவின் நிகோல் இணை, இங்கிலாந்தி சேமி முர்ரே மற்றும் பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஜர்நிகா இணையை வீழ்த்தியது
- நோவாக் ஜோகோவிக், நான்காவது முறையாக விம்பிள்டன் ஒற்றையர் பட்டதை வென்றுள்ளார்
- ஏஞ்செலா கேர்பர், முதல் முறையாக பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டதை வென்றார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்:
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயத்தில் இருந்து அமெரிக்க வெளியேறிய இடத்தை,”ஐஸ்லாந்து” நிரப்பியுள்ளது
- அமெரிக்க வெளியேறிய வெற்றிடத்தை, ஐஸ்லாந்து நாடு இந்த அமைப்பில் சேர்ந்து நிரப்பியுள்ளது