TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 19TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 19TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 19TH WILL BE UPDATED HERE FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC ETC,. HERE THA NATIONAL, WORLD, SPORTS ETC., RELATED CURRENT INFORMATIONS WILL BE UPDATED.

லிகோ – இந்தியா ஆய்வகம்

  • புவியீர்ப்பு அலை ஆய்வு மைய ஆய்வகமான, “லிகோ – இந்தியா” ஆய்வகம், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு முறையான ஒப்புதல் அளித்துள்ளது
  • The Government of India (GoI) has given ‘In-Principle’ approval for construction and operation of LIGO-India (Laser Interferometer Gravitational-wave Observatory in India) Laboratory in Hingoli District of Maharashtra
  • இந்த ஆய்வகம் 2024ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும். இது அமேரிக்கா லிகோ ஆய்வகத்தின் கூட்டு தயாரிப்பு ஆகும்
  • ஏற்கனவே 2 லிகோ ஆய்வகங்கள் அமெரிக்காவில் உள்ள நிலையில், தற்போது அதே போன்ற 3-வது லிகோ ஆய்வகம் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது

“பிட்ச் பிளாக் 2018” போர் பயிற்சி நிகழ்ச்சி

  • ஆஸ்திரேலியாவின் ராயல் விமானப் படை நடத்தும், பல்வேறு நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய போர் பயிற்சி நிகழ்ச்சியான “பிட்ச் பிளாக் 2018” நிகழ்ச்சி வருகின்ற ஜூலை 24ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற உள்ளது
  • The biennial multi-national large force employment warfare exercise “Pitch Black 2018 (PB-18)” will be hosted by the Royal Australian Air Force (RAAF) in Australia
  • இப்பயிற்சியில் முதல் முறையாக இந்திய விமானப்படையும் கலந்துக் கொள்கிறது. இந்தியாவில் இருந்து சுமார் 145 விமானப்படை வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர்

சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • இந்திய அரசியல் அமைப்பு சட்ட உரிமையின் படி, கேரளாவின் புகழ்பெற்ற சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
  • The Supreme Court of India (SCI) has stated that women have the constitutional right to enter the famous Sabarimala temple in Kerala and pray like men without being discriminated against
  • 1௦ வயது முதல் 5௦ வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதி இல்லாத நிலையில், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது

இந்தியா, அமேரிக்கா இடையேயான 7-வது ராணுவ தொழில்நுட்ப மற்றும் வணிக துவக்கக் கூட்டம்

  • இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான 7-வது ராணுவ தொழில்நுட்ப துவக்கக் கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது
  • 7th Defence Technology and Trade Initiative (DTTI) meeting
  • இருதரப்பு ராணுவ வணிக நட்புறவு தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது

ராஜமாதா சத்வசிலா தேவி போஸ்லே காலமானார்

  • மகாராஸ்டிரா மாநிலத்தின் கொண்கன் பகுதியை சேர்ந்த பிரபல “சவந்த்வதி சன்ஸ்தான்” அமைப்பை சேர்ந்த ராஜமாதா சத்வசிலா தேவி போஸ்லே காலமானார்
  • Rajmata Satvashila Devi Bhosle (83), the noted activist from Konkan region in Maharashtra, has passed away at Sawantwadi
  • இவர் சவந்த்வதி வம்சத்தின்” கடைசி அரசரான மறைந்த ஷிவ்ராம்ராஜே போஸ்லே அவர்களின் துணைவியார் ஆவார்

வட்டார விமானவியல் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

  • “பிரிக்ஸ்” நாடுகள் இடையே “வட்டார விமானவியல் கூட்டு ஒத்துழைப்பு” ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • The Union Cabinet has approved the signing of Memorandum of Understanding (MoU) amongst BRICS Nations (viz. Brazil, Russia, India, China and South Africa) on Regional Aviation Partnership Cooperation
  • “பிரிக்ஸ்” நாடுகள் இடையே இந்த ஒப்பந்தத்தின் மூலம் விமானவியல் துறையில் மிக்க நன்மைகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முத்திரை சின்னம் பெற்ற மும்பை பங்குச்சந்தை கட்டிடம்

  • இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமைப்பான “மும்பை பங்குச்சந்தை” இயங்கும் “பிரோஸ் ஜீஜீபாய்” கட்டிடத்திற்கு “முத்திரை” சின்னம் வழங்கப்பட்டுள்ளது
  • Stock exchange major Bombay Stock Exchange (BSE) has secured image trademark for its iconic building, Phiroze Jeejeebhoy Towers located on Dalal Street in Mumbai, Maharashtra
  • முத்திரை விதி 1999ன் படி, இந்தக் கட்டிடத்திற்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மும்பையில் தலால் தெருவில் அமைந்துள்ளது
  • இதன் மூலம், இனி எந்தவொரு அமைப்பு அல்லது நிறுவனமும் இனி இந்த கட்டிட புகைப்படத்தை முறையான அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 2-வது சட்டத் திருத்தும்

  • இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2௦௦9ல் மேற்கொள்ளப்பட்ட 2-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு லோக்சபா அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
  • Lok Sabha has passed The Right of Children to Free and Compulsory Education (Second Amendment) Bill, 2017 to abolish the ‘no detention policy’ in schools. The Bill amends the Right of Children to Free and Compulsory Education Act, 2009
  • இதன் படி இனி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் இனி கட்டாய தேர்ச்சி என்ற முறை நீக்கப்பட்டு, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு 2 மாதத்திற்குள் மீண்டும் தேர்வு எழுத வைப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • மீண்டும் அத்தேர்வில் தோல்வி அடைந்தாள், அவர்கள் அதே வகுப்பிலேயே தொடர வேண்டும். கட்டாய தேர்ச்சி என்ற முறை செயல்படுத்த இயலாது

கைதிகளுக்காக “சிறப்பு மன்னிப்பு திட்டம்”

  • வருகின்ற 2௦19ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 15௦-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சிறைக் கைதிகளுக்காக “சிறப்பு மன்னிப்பு திட்டத்தை” மத்திய அரசு கொண்டு வர உள்ளது
  • Union Cabinet has approved to grant Special Remission to Prisoners as part of commemoration of 150th birth anniversary of Mahatma Gandhi to be observed in 2019
  • இதன் படி 5 பிரிவுகளில் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது
    1. பெண்கள் மற்றும் திருநங்கை கைதிகள் = 55 வயது மற்றும் அதற்கு மேலான வயதை உடையவர்களில், தங்களின் தண்டனை காலத்தில் 5௦% காலத்தை சிறையில் கழித்தவர்கள்
    2. ஆண் குற்றவாளிகள் = 6௦ மற்றும் அதற்கு மேல் வயதானவர்களில் 5௦% தண்டனைக் காலத்தை முடித்தவர்கள்
    3. உடல் குறைபாடு / ஊனமுற்ற குற்றவாளிகள் = 7௦% குறைபாடு உடையவர்களில் 5௦% தண்டனைக் காலத்தை முடித்தவர்கள்
    4. இறப்பு அடையும் நிலையில் உள்ள நோயுற்ற குற்றவாளிகள்
    5. தங்கள் தண்டனைக் காலத்தில் 3-ல் 2 (66%) பங்கு காலத்தை அனுபவித்தவர்கள்

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா

  • பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற “சோட்விள்ளே தடகள சாம்பியன்சிப்” போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 85.17 மீட்டர் வீசி தங்கப் பதக்கம் வென்றார்
  • Neeraj Chopra, who had become the first Indian to win gold in javelin throw at Commonwealth Games in April this year, won gold at Sotteville Athletics meet in France 
  • இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார். காமன்வெல்த் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் வேரற் இவராவார்.

முதல் புதுச்சேரி சர்வதேச திரைப்பட திருவிழா

  • புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில், “முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட திருவிழா” நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது
  • Puducherry Tourism has announced the first Pondicherry International Film Festival (PIFF). France is the partner country for the festival
  • இந்நிகழ்ச்சியின் கூட்டாளி நாடாக “பிரான்ஸ்” அறிவிக்கப்பட்டுள்ளது

புதிய 1௦௦ ரூபாய் நோட்டு

  • இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் “வெளிர் ஊதா நிறத்தில் புதிய வகை 1௦௦ ரூபாய் நோட்டினை” வெளியிட உள்ளது
  • The Reserve Bank of India announced it will shortly issue lavender coloured new ₹100 denomination banknotes in the Mahatma Gandhi (New) Series
  • இதில் முன்பக்கத்தில்
    1. மகாத்மா காந்தி படம் முன்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது
    2. அசோக தூண் சின்னம்
    3. முன்பக்கத்தின் வடது மற்றும் இடது பக்கங்களில் சாய்ந்த நிலையில் நான்கு கோடுகள்
  • இந்த புதிய நாட்டின் பின்பக்கத்தில்
    1. குஜராத் மாநிலத்தின் புகழ் பெற்ற “ராணிப் படிக்கட்டு” தொல்லியல் துறை புராதான கலாசார சின்னம் இடம் பெற்றுள்ளது
    2. பின்பக்கத்தில் “தூய்மை இந்தியா சின்னம்” இடம் பெற்றுள்ளது
  • இந்த ரூபாய் நாட்டின் அளவு = 66 மி.மீ X 142 மி.மீ ஆகும்

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.