TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 20TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 20TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 20TH WILL BE UPDATED HERE FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 4, 2, 2A ETC.,

வாகன திருட்டை தடுக்க புதிய தொழில்நுட்பம்

 • இந்தியாவில் அதிகரித்து வரும் வாகனத் திருட்டை தடுக்க, “MicroDotஎன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
 • Government has announced the launch of a new MicroDot Technologythat would help check on vehicle thefts
 • இந்த தொழில்நுட்பம் படி, சிறிய புள்ளி போன்ற லேசர் கற்றை தூவல்கள், வண்டியின் அணைத்து பகுதியிலும் பதியப்படும். இந்த லேசர் புள்ளியின் வாகனம் எங்குள்ளது என்பதனை எளிதில் அறிந்துக் கொள்ள முடியும். இதனை வாகனத்தில் இருந்து தனியாக எடுக்க இயலாது

4-வது இந்திய, ஜப்பான் கடல்சார் பேச்சுவார்த்தை

 • 4-வது இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான கடல்சார் உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை, புது தில்லியில் நடைபெற்றது
 • The Ministry of External Affairs announced the fourth round of Maritime Affairs Dialoguebetween India and Japan that was held in New Delhi
 • இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் பங்கஜ் சர்மா இதில் கலந்துக் கொண்டார்

ஆந்திர அரசின் “இ-பிரகதி” மைய தளம்

 • ஆந்திர மாநிலம் உந்தவல்லி என்னுமிடத்தில், அம்மாநில முதல்வர் “இ-பிரகதி மைய தளம்” என்ற புதிய செயல்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்
 • Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu launched ‘e-Pragati core platform’ at Undavalli, Andhra Pradesh
 • “இ-பிரகதி” என்பது அம்மனிழ்த்தாய் டிஜிட்டல் முறையில் முன்னெடுத்தும் செல்லும் ஒரு புதிய முயற்சி ஆகும்.
 • அம்மாநிலத்தில் உள்ள 34 துறைகளையும், 336 சுயாட்சி அமைப்புகளையும், 745 அரசு சேவைகளையும் பொதுமக்களுடன் எளிதில் இணைக்கும் திட்டம் இதுவாகும்

மேற்கு வங்கத்தின் உலகத்தர கண்காட்சி

 • மேற்கு வாங்க மாநில அரசு, அம்மாநிலத்தின் உயர் புகழ் பெற்ற நான்கு முக்கிய சிறப்பு பெற்றவர்கள் தொடர்பான உலகத்தரத்தில் நிரந்த கண்காட்சி மையம் கொல்கத்தா நகரில் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது
 • A world class exhibition on 4 eminent personalities of Bengal: Gurudev Rabindranath Tagore, Netaji Subha Chandra Bose, Rishi Bankim Chandra Chattopadhyay and Dr. Syama Prasad Mukherjee will be organized soon at National Library in Kolkata on a permanent basis
  1. குருதேவ் ரபிந்திரநாத் தாகூர்
  2. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
  3. ரிஷி பங்கிம் சந்திர சத்தோபதாய்
  4. ஷியாம் பிரசாத் முகர்ஜி
 • இந்த நால்வர் தொடர்பான புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள் பல்வேறு விவரங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெரும்

8-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

 • 8-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம், தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது
 • 8th BRICS Health Ministers’ Meetingheld in Durban, South Africa
 • இந்தியாவின் சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்துக் கொண்டார். வருகின்ற 2௦25ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் எனத் தெரிவித்தார்

2௦22 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

 • சீனாவின் பீஜிங்க நகரில் நடைபெறவுள்ள 2௦22ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், புதிதாக 7 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மொத்த தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 1௦9 ஆக உயர்ந்துள்ளது
 • The International Olympic Committee (IOC) in its Tokyo 2020 Olympics schedule announced that it had added 7 medal event to its 2022 Beijing Winter Olympics
 • சர்வதேச ஒலிம்பிக் குழு இதனை ஜப்பானின் டோக்யோ நகரில் அறிவித்துள்ளது
 • 2024ம் ஆண்டிற்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டிகள்

 • செக் குடியரசு நாட்டின் பில்சென் நகரில் நடைபெற்று வந்த 28-வது ஓஓடீண ஹோப்ஸ் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா மொத்தம் 24 பதக்கங்களை வென்றது
 • 28thMeeting of Shooting Hopes junior International Championship
 • இதில் 1௦ தங்கப் பதக்கம் வெள்ளப்பட்டுலல்து குறிப்பிடத்தக்கது
 • இந்தியாவின் “மனு பகேர்”, தந்து 9-வது சர்வதேச தங்கப் பதக்கத்தை வென்றார். அதவும் ஒரே ஆண்டின் 9 சர்வதேச தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய மங்கை இவராவார்
 • உலக அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற குறைந்த வயது இந்தியர் என்ற சிறப்பையும் இவர் பெற்றவர் ஆவார்

ஜம்முகாஸ்மீரின் முதல் பெண்கள் வங்கி

 • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முதல் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வங்கி, ஸ்ரீநகரில் துவங்கப்பட்டது
 • All-Women J&K Bank branch inaugurated by First Lady Usha Vohra
 • “ஜம்மு காஸ்மீர் வங்கி” சார்பில் நடைபெற்ற இந்த விழாவினை, அம்மாநில ஆளுநரான வோரா அவர்களின் துணைவியார் உஷா வோரா அவர்கள் துவக்கி வைத்தார்

உதய்பூர் : சுற்றுலா + ஒய்விற்கான உலகின் 3-வது சிறந்த நகரம்

 • பிரபல சுற்றுலா இதழான “Travel + Leisure” பத்திரிக்கை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா + ஓய்விற்கான உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த “உதய்பூர்”, இரண்டாவது முறையாக 3-வது இடத்தை பிடித்துள்ளது
 • “ஏரிகளின் நகரம், கிழக்கின் வெனிஸ்” என்றெல்லாம் போற்றப்படும் உதய்பூர் நகரம் இந்திய சுற்றுலாத் துரையின் முக்கிய அங்கமாகும்
 • முதல் 2 இடங்களிலும் மெக்சிகோவின் 2 நகரங்கள் உள்ளன

உடல் ஊனமுற்றோருக்கான தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையம்

 • உடல் ஊனமுற்றோருக்கான தேசிய வேலைவாய்பு மேம்பாட்டு மையத்தின் புதிய தலைவராக “அர்மான் அலி” அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • Arman Ali was appointed as Executive Director of National Centre for Promotion of Employment for Disabled People (NCPEDP)
 • தற்போதைய தலைவர் ஜாவித் அபிதி அவர்களின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இவர் நியமனம் செய்யப்பட உள்ளார்

டெல்லி பேச்சுவார்த்தை 10

 • 10-வது டெல்லி பேச்சுவார்த்தை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமையில் நடைபெற்றது
 • The 10th edition of Delhi Dialogue (DD X) was held in New Delhi and was hosted by Union External Affairs Minister Sushma Swaraj
 • இக்கூட்டத்தின் கரு (THEME) = Strengthening India-ASEAN Maritime Cooperation
 • கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற “ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டிற்கு” பிறகு நடைபெறும் முதல் பெரிய கூட்டம் இதுவாகும்
 • “டெல்லி பேச்சுவார்த்தை” என்பது அரசியல் பாதுகாப்பு, பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையே ஒரு கூட்டு பேச்சுவார்த்தை ஆகும்

புவியின் தற்போதைய காலம் = மேகாலயன் வயது

 • விஞ்ஞானிகள் தற்போதைய புவியின் “ஹோலோசீன்” (HOLOCENE) காலத்தை 3 புதிய வயதுகலாக பிரித்துள்ளனர்
  1. MEGHALAYAN AGE
  2. MIDDLE HOLOCENE NORTHGRIPPIAN AGE
  3. EARLY HOLOCENE GREENLANDIAN AGE
 • மேகாலயன் வயது
  1. இது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் உள்ள பாறையில் ஏற்பட்ட காலச்சூழ்நிலை மாற்றத்தை கொண்டு வகுத்துள்ளனர்
  2. இந்த மாற்றம் கடந்த 4200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளது
  3. இந்த மேகாலயன் வயது, புயின் தற்போதைய காலமாகும்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர்

 • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் “பகர் ஜமான்”, 156 பந்துகளில் 210 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் புதிய சாதனை படைத்துள்ளார்
 • ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்
 • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களை கடந்த 6-வது வீரர் இவராவார்

2+2 பேச்சுவார்த்தை

 • இந்தியா மற்றும் அமேரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை, வருகின்ற செப்டம்பர் 6-ம் தேதி புது தில்லியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 • The inaugural ‘Two-plus-Two Dialogue’ between India and the US will be held on September 6 in New Delhi
 • இந்தப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் இந்தியா வர உள்ளார்

“பிம்ஸ்டெக்” மாநாடு

 • 4-வது பிம்ஸ்டெக் மாநாடு, வருகின்ற ஆகஸ்ட் மாதம் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெறுகிறது
 • The Bay of Bengal Initiatives for Multi-Sectoral, Technical and Economic Cooperation (BIMSTEC)
 • இந்த மாநாட்டின் முக்கிய தலைப்பு = வறுமை
 • பிம்ஸ்டெக் அமைப்பின் தற்போதைய தலைமை தாங்கும் நாடு = நேபாளம்

நபார்டு விருது 2018

 • 2018ம் ஆண்டிற்கான “நபார்டு விருது”, “ரேப்கோ நுண் நிதி நிறுவனத்திற்கு” வழங்கப்பட்டது
 • Repco Micro Finance Ltd got his Award for its service to self-help group (SHG) linkage in Tamil Nadu for the fiscal year 2017-18
 • கடந்த நிதி ஆண்டின் தமிழகத்தில் உள்ள சுயஉதவிக் குழு சேவைகளில் மிகபெரிய பங்கு வகித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது

 

Leave a Comment