TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 21ST

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 21ST

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 21ST WILL BE UPDATED HERE, WHICH INCLUDES ALL IMPORTANT CURRENT AFFAIRS RELATED INFORMATIONS, WHICH WILL BW MORE USEFUL TO COMPETITIVE EXAMS

 

2018 ஆசிய ஜுனியர் மல்யுத்த சாம்பியன்சிப்

 • புது தில்லியில் நடைபெற்ற 2018 ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியின் 97 கிலோ கிரேக்க – ரோமானிய மல்யுத்த பிரிவில், இந்தியாவின் “விரேஸ் குண்டு”, வெண்கலப் பதக்கம் வென்றார்
 • Viresh Kundu has won bronze in the 97kg Greco-Roman wrestling category at the 2018 Asian Junior Championships in New Delhi
 • உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், தென்கொரியாவின் ஜியோங்க்யுள் க்வோன் என்பவரை 14 – 5 என்ற கணக்கில் வீழ்த்தி, தனது முதல் சர்வதேச பதக்கத்தை வென்றார்

சர்வதேச சூரியக் கூட்டமைப்பின் 68-வது உறுப்பு நாடு

 • இந்தியாவால் உருவாக்கப்பட்ட “சர்வதேச சூரிய கூட்டமைப்பு” நாடுகள் அமைப்பில் 68-வது உறுப்பு நாடாக மியான்மர் இணைந்துள்ளது
 • Myanmar has joined the India-initiated International Solar Alliance (ISA) and became the 68th signatory to the Framework Agreement of the ISA
 • சர்வதேச சூரியக் கூட்டமைப்பின் தலைமையகம் = ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் பகுதியில் உள்ள குவால் பஹாரி கிராமம்

தாய்லாந்து ஓபன்

 • 2018 தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இறுதி ஆட்டத்தில் ஜப்பான் நாட்டினை சேர்ந்த நோசொமி ஒக்குரா அவர்களிடம் தோற்று 2-வது இடத்தை பிடித்தார்
 • India’s star shuttler PV Sindhu (seeded second) suffered a defeat to fourth seed Nozomi Okuhara of Japan
 • இப்போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்றது

பூர்வாஞ்சல் அதிவிரைவுச்சாலை

 • உத்திரப்பிரதேச மாநிலத்தின் அசாம்கார் பகுதியில் நடைபெற்ற விழாவில் “பூர்வாஞ்சல் அதிவிரைவு சாலைக்கான” அடிக்கல்லை பிரதமர் நாட்டினார்
 • The Prime Minister, Shri Narendra Modi laid the Foundation Stone of the Poorvanchal Expressway in Azamgarh in Uttar Pradesh
 • டெல்லி முதல் காசிப்பூர் வரையிலான 340 கிலோமீட்டர் நீளமுடைய அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளது
 • இது மேலும் டெல்லியில் இருந்து ஆக்ரா வரையிலும், லக்னோவில் இருந்து ஆக்ரா வரையிலும் நீட்டிக்கப்பட உள்ளது

டி.சி.எஸ் நிறுவனத்தின் “டிஜிட்டல் புதுமை மையம்”

 • இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான “டி.சி.எஸ்” எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “டோட்டல்” என்ற நிறுவனத்துடன் சேர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தின் பூனே நகரில் “டிஜிட்டல் புதுமை மையம்” அமைக்க உள்ளது
 • Tata Consultancy Services (TCS) announced that, it had signed a partnership with French energy company Total to develop a digital innovation centre in India
 • வணிக பயன்பாட்டிற்கான புதிய வகை தொழில்நுட்பங்களை கண்டறியும் மையமாக இது இருக்கும்

பாரத ஸ்டேட் வங்கியின் “கிசான் மேளா”

 • பாரத ஸ்டேட் வங்கி சார்பில், விவசாயிகளை நேரடியாக தேடி சென்று நிதியறிவு தொடர்பான விவரங்களை எடுத்துரைக்கும் “கிசான் மேளா” திட்டத்தை துவக்கியுள்ளது
 • State Bank of India (SBI) announced that it would launch a kisan Mela outreach program for farmers to help in imparting financial literacy to the farmers
 • பாரத ஸ்டேட் வங்கியின் 14000 ஊரக வங்கி கிளைப் பகுதிகளில் உள்ள சுமார் 10 லட்சம் விவசாயிகளை சந்தித்து இந்த நிதியறிவு விவரங்கள் எடுத்துரைக்கப்பட உள்ளது

900 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உலகின் 2-வது நிறுவனம்

 • உலகின் மிகப்பெரிய மின்-வணிக நிறுவனமான “அமேசான்”, 900 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய வர்த்தக நிறுவனமாக உயர்ந்துள்ளது.
 • E-commerce giant Amazon briefly crossed $900-billion market cap for the first time in its history becoming only the second company after Apple to achieve this milestone
 • 900 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்த உலகின் 2-வது நிறுவனம் அமேசான் ஆகும். முதல் முதலில் இந்த மைல்க்கல்லை எட்டிய நிறுவனம் ஆப்பில் ஆகும்
 • ஆப்பில் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு = $935 பில்லியன் ஆகும்

கூகுள் நிறுவனத்திற்கு $5 பில்லியன் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

 • ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனத்திற்கு $5 பில்லியன் டாலர் அளவிற்கு அபராதம் விதித்துள்ளது.
 • The European Union regulators have slapped Alphabet-owned Google with a record 4.34 billion euro ($5 billion) antitrust fine for abusing the dominance of its Android mobile operating system
 • ஆண்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்தை பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களிடம் கூகுள் இயங்குதளத்தையே பயன்படுத்த நிர்பந்தம் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது

67-வது தேசிய ஆடை கண்காட்சி

 • மகாராஷ்டிராவின் மும்பை நகரில் “67-வது தேசிய ஆடை கண்காட்சி” நிகழ்ச்சி நடைபெற்றது
 • “India’s Largest Apparel Trade Show – The 67th National Garment Fair”
 • குஜராத் வணிக ஆடை நிறுவனங்கள் இங்கு பெருமளவு ஆடைகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்

திருநங்கைகளுக்கான முதல் இலக்கிய சந்திப்பு

 • திருநங்கைகளுக்கான முதல் இலக்கிய சந்திப்பு (திருநங்கை கவிஞர்கள் கூட்டம்), சாகித்ய அகாடெமி சார்பில் கொல்கத்தா நகரில் நடத்தப்பட்டது
 • India’s first government sponsored ‘Transgender Poets’ meet held in Kolkata. This Meet was chaired by India’s first transgender college principal Manabi Bandopadhyay
 • இக்கூட்டத்திற்கு இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வரான “மானாபி பந்தோபதாய்” தலைமை தாங்கினார்

அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் விளையாட்டு தூதர்

 • அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் விளையாட்டு தூதராக “ஹிமா தாஸ்” நியமிக்கப்பட்டுள்ளார்
 • Assam Chief Minister Sarbananda Sonowal has named Indian Athlete Hima Das as the first sports ambassador of Assam
 • உலக தடகள சாம்பியன்சிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை இவராவார்

கூகுளின் ஆண்டராய்டு மாநாடு

 • வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கூகுள் நிறுவனம் சார்பில் “ஆண்டராய்டு உருவாக்க மாநாடு” நடத்தப்பட உள்ளது
 • The Android Dev Summit is being organized at the Computer History Museum, Moutain View, California on 7 – 8 Nov 2018

முகநூல் (பேஸ்புக்) நிறுவனத்தின் “ஏதெனா” செயற்கைக்கோள் திட்டம்

 • முகநூல் (பேஸ்புக்) நிறுவனம் சார்பில் “ஏதெனா” என்ற புதிய செயற்கைக்கோள் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது
 • Facebook has confirmed it is working on a new satellite project, named Athena, that will provide broadband internet connections to rural and underserved areas
 • இதன் நோக்கம் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை இணையதள சேவை வழங்குதல் ஆகும்
 • இது 2௦19ம் ஆண்டு முடிவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குருங்கோளினை விண்வெளி கலமாக மாற்றும் திட்டம்

 • “MADE IN SPACE” என்ற நிறுவனம் சார்பில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவன நிதி உதவியுடன், “குருங்கோள்களை விண்வெளி கலமாக மாற்றும்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
 • இதன் தற்போதைய செயல் திட்டம் = RAMA (Reconstituting Asteroids into Mechanical Automata)

வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் “வடிவமைப்பு மையம்”

 • ஜெர்மனி நாட்டினை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான “வோல்க்ஸ்வேகன்”, மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே நகரில் “வடிவமைப்பு மையத்தை” துவக்க உள்ளது
 • German auto major Volkswagen (VW) Group has planned to set up a design centre in Chakan near Pune
 • இதன் மூலம், அந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வருவாயை பெருக்க இயலும் என நம்பப்படுகிறது

 

Leave a Comment

Your email address will not be published.