TNPSC Daily Current Affairs July 22nd

TNPSC Daily Current Affairs July 22nd

TNPSC Daily Current Affairs July 22nd will be provided here for competitive exams prepartion. It will be more useful to TNPSC exams like group 2, 2a, 4 etc.,

பொது விவகார குறியீடு 2018

  • பெங்களூரு நகரை சேர்ந்த “பொது விவகார மையம்” சார்பில் வெளியிடப்பட்ட 2018ம் ஆண்டிற்கான சிறந்த ஆளுகை மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
    1. முதல் இடம் = கேரளா
    2. 2-வது இடம் = தமிழ்நாடு
    3. 3-வது இடம் = தெலுங்கானா
    4. 29-வது திடம் = மேகாலயா
    5. 30-வது இடம் = பீகார்
  • Kerala has been rated as the best-governed state in India for the third consecutive time in the Public Affairs Index released by Bengaluru-based think tank Public Affairs Centre (PAC)
  • சிறப்பாக செயல்படும் மாநிலங்களை 30 பிரிவுகளின் கீழ் அலசப்பட்டு இந்த குறியீடு வெளியிடப்பட்டுள்ளது

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்

  • ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற “ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய” போட்டியில் நான்கு முறை உலகச் சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்
  • Four-time world champion Lewis Hamilton won the German Grand Prix
  • தொடக்க சுற்றில் 14-வது இடத்தில இருந்து பந்தயத்தை துவக்கிய போதும், இறுதியில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்

  • 2017ம் ஆண்டிற்கான “அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு” சார்பில் சிறந்த கால்பந்து வீரர் விருது, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் “சுனில் சேத்ரி” அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • Indian men’s football team captain Sunil Chhetri has been named as the 2017 All India Football Federation (AIFF) Player of the Year
  • தேசிய அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் இவராவார்

ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்சிப்

  • 53 ஆண்டு இந்திய பாட்மிண்டன் வரலாற்றில் முதல் முறையாக ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்சிப் ஒட்ட்ரையர் பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை “லக்சயா சென்” பெற்றுள்ளார்
  • 16 வயதான லக்சயா சென் உலகின் முதல் நிலை வீரரான குன்வ்லத் விதித்ஸ்ராம் என்பவரை வீழ்த்தி தங்கம் வென்றார்

உலகின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்

  • “இலான் முஸ்க்” அவர்களின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் உலகிலேயே அதிக எடை கொண்ட செயற்கைக்கோளினை விண்ணில் செலுத்தியுள்ளது
  • 7௦௦௦ கிலோ எடை கொண்ட “டெல்ஸ்டார் 19 வேண்டேஜ்” என்ற வணிக செயற்கைகோளினை பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது

ருவாண்டா அதிபருக்கு 2௦௦ பசுக்களை பரிசாக வழங்கிய மோடி

  • அரசு முறை பயணமாக இந்தியா வந்த ருவாண்டா நாட்டு அதிபருக்கு, அந்நாட்டு ஏழை மக்களுக்காக இந்தியாவின் சார்பில் 2௦௦ பசு மாடுகள் பரிசாக இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் வழங்கினார்
  • ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு பசு மாடு என்ற வகையில் 2௦௦ பசு மாடுகள் வழங்கப்பட்டது

புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு மையம்

  • இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயதிர தயாரிப்பு மையத்தை பெங்களூரு நகரில் துவக்கி வைத்தார்
  • இது பெங்களூரு நகரில் உள்ள பாரத் மின்னுவியல் நிறுவன மையத்தில் அமைந்துள்ளது

தென்கிழக்கு ஆசியாவின் முதல் பருவநிலை மாற்ற மையம்

  • “நபார்டு” அமைப்பு சார்பில் தென்கிழக்கு ஆசியாவின் முதல் பருவநிலை மாற்ற மையம், உத்திரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் அமைக்கப்பட உள்ளது
  • பருவநிலை மாற்றம் தொடர்பாக அரசு, அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளடக்கிய அமைப்பாக இது செயல்படும்

இந்திய நிதி உதவியில் இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவை

  • இலங்கையில் உள்ள மக்களுக்காக இந்தியாவின் சார்பில் 22.8 அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி உதவி வழங்கும் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் இந்தியாவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
  • முதல் கட்டமாக 7.6 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் 88 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும். இலங்கை முழுவதும் மொத்தம் 2௦9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர உதவிக்காக வழங்கப்படும்

உலகில் அதிக நடைப்பயணம் மேற்கொள்ளும் நகரமாக லண்டன் நகரை மாற்ற திட்டம்

  • லண்டன் நகர மேயர், அந்நகரத்தை உலகின் அதிக நடைபயணம் மேற்கொள்பவர்கள் நகரமாக மாற்றும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்
  • நடைபயணம் மேற்கொள்ள ஏதுவாக லண்டன் நகரை அழகாக புதுப்பிக்கவும், சுற்றுச்சூழல் மாசுவை அதிகளவு குறைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன

40 நாட்கள் நடைபெறும் “ஓடிஸா சர்வதேச கலை” விழா

  • மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் “ஓடிஸா சர்வதேச கலை” விழா, இந்த முறை 40 நாட்கள் நடைபெறுகிறது
  • புவனேஸ்வர், பூரி மற்றும் கோனார்க் ஆகிய நகரங்களில் இந்த கலை விழா நடைபெற உள்ளது

“கேளோ இந்தியா” திறமை அடையாளம் காணும் திட்டம்

  • மத்திய அரசின் “கேளோ இந்தியா” திட்டத்தின் கீழ் 734 இளைய விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
  • இது “திறமையை அடையாளம் கண்டு அவர்கள் மேம்படுத்தும்” திட்டமாகும்
  • இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு 1.2 லட்ச ரூபாய் அரசால் வழங்கப்படும்

உலக அடிமைத்தன குறியீடு

  • “வாக் ப்ரீ” அமைப்பு சார்பில் 2018ம் ஆண்டிற்கான “உலக அடிமைத்தன குறியீடு” வெளியிடப்பட்டுள்ளது
    1. இதில் உலகளவில் அதிக நவீனகால அடிமைத்தன வாழ்வு வாழும் மக்களை கொண்ட நாடாக “வடகொரியா” அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 1௦௦௦ மக்களுக்கு 1௦௦ பேர் அடிமைகளாக வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 1௦௦ பேருக்கு 1௦ பேர்
    2. 2-வது இடம் = எரித்திரியா
    3. 3-வது இடம் = புருண்டி
    4. 8-வது இடம் = பாகிஸ்தான்
    5. 53-வது இடம் = இந்தியா. இந்தியாவில் 1௦௦௦ மக்களுக்கு 6.1 பேர் நவீனகால அடிமைகளாக வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. 2௦16ம் ஆண்டு குறியீட்டில் முதல் 1௦ இடத்தில் இருந் இந்தியா, அடிமைத்தனத்தை குறைத்து தற்போது முன்னேறியுள்ளது.
    6. உலகளவில் 29% ஆண்களும், 71% பெண்களும் அடிமைகளாக வாழ்வை வாழுகின்றனர்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.