TNPSC Daily Current Affairs July 23rd

TNPSC Daily Current Affairs July 23rd

TNPSC Daily Current Affairs July 23rd will be updated here for those who are preparing for competitve exams like tnpsc group 4, 2, 2a etc.,

செல்வமகள் சேமிப்பு திட்டம்

  • மத்திய அரசு, அஞ்சல் துறையில் கொண்டுவந்த “செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்” குறைந்தபட்ச முதலீட்டு தொகையை 1௦௦௦ ரூபாயில் இருந்து 25௦ ரூபாயாக குறைத்துள்ளது
  • குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகையாக 25௦ ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • செல்வமகள் சேமிப்பு திட்டம், பிரதமர் அவர்களால் 2௦15ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது

“சபர்” – காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு திட்டம்

  • நாட்டிலேயே முதல் முறையாக “சபர்” என்ற காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு திட்ட முறை புது தில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • 24 மணிநேரமும் அப்போதைய காற்றின் தரத்தை மிகப்பெரிய எல்.இ.டி திரையில் காட்டப்படும். மேலும் அடுத்த 72 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை துல்லியமாக இத்திரையில் காட்டப்படும்
  • இந்த “சபர்” திட்ட முறை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப் படவுள்ளது = டெல்லி, பூனே, மும்பை மற்றும் அகமதாபாத்

ஜி.எஸ்.டி வரி குறைப்பு

  • புது தில்லியில் ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், பல்வேறு பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன
  • சானிட்டரி நாப்கின், ராக்கி போன்றவற்றிற்கு முழுவதும் வரி விளக்கப்பட்டுள்ளது
  • 1௦௦௦ ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட காலணிகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது
  • 28% அதிக வரி பிரிவில் தற்போது 35 பொருட்கள் மட்டுமே உள்ளன

மாணவர் காவல் படை

  • நாடு முழுவதும் பள்ளிகளில் “மாணவர் காவல் படை” திட்டத் துவக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
  • ஹரியானா மாநிலஹ்டின் குருக்ராம் பாகுதியில் நடைபெற்ற “மாணவர் காவல் படை” துவக்க நிகழ்ச்சியில் இதனை அவர் அறிவித்தார்

நாசாவின் “பார்கர் சூரிய ஆய்வு” விண்கலம்

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான “நாசா”, சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு “பார்க்கர் சூரிய ஆய்வு” விண்கலத்தை சூரியனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது
  • இது கார் அளவுடைய ஒரு ரோபோடிக் விண்கலம் ஆகும். இது சூரியனின் மேற்பரப்பு வரை சென்று ஆய்வினை மேற்கொள்ள உள்ளது

2௦2௦ ஜப்பான் ஒலிம்பிக் போட்டி சின்னம்

  • வருகின்ற 2௦2௦ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது
  • நீளம், இளஞ்சிவப்பு என இரண்டு நிறங்களில் இரண்டு சின்னங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • ஒலிம்பிக் போட்டி = இது “மிரைட்டோவா” (MIRAITOWA) சின்னம் கட்டங்கள் கொண்ட நீல நிறத்தில் உள்ளது. இது ஒலிம்பிக் போட்டித் தொடரினை குறிக்கும். MIRAITOWA என்பது இரண்டு ஜப்பானிய வார்த்தைகளை உள்ளடக்கியது ஆகும். இதன் பொருள் “முடிவற்ற எதிர்காலம்” ஆகும்.
  • பாரா ஒலிம்பிக் போட்டி = இது “சோமெய்டி” (SOMEITY) சின்னம், காட்டனால் கொண்டு இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதாகும். இது செர்ரி மரத்தை குறிக்கும். அதாவது மன மற்றும் உடல் வலிமையை அளிக்க வல்லது எனப் பொருளாகும்

ஐ.ஐ.டி கான்பூர்

  • ஐ.ஐ.டி கான்பூர் சார்பில், “TREADWILL” என்ற இணையதள ஆன்லைன் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படுகிறது
  • இந்த இணையதளம் மூலம் மன அழுத்தம், சோர்வு மனப்பான்மை போன்ற பல்வேறு மனப் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும்
  • இதற்கான இணையதளம் = https://www.treadwill.org/

குட்டிவிமானம் மூலம் நேரடியாக மருந்துகள் வழங்குதல்

  • ஹைத்ராபாத் நகரில் உள்ள இந்திய பொது மருத்துவ கழகம் சார்பில், “ஆளில்லா குட்டிவிமானம் மூலம் மருத்துவ பொருட்களை நேரடியாக” வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது
  • வெப்பநிலையை கட்டுப்படுத்தும் இயந்திர பெட்டியின் மூலம் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்

“பிரிக்ஸ்” ஊடக மன்றம்

  • “பிரிக்ஸ்” ஊடக மன்றம், தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் துவக்கப்பட்டுள்ளது
  • இது 3-வது பிரிக்ஸ் ஊடக மன்ற கூட்டமாகும். இக்கூட்டத்தின் கரு (THEME) = BRICS Media Cooperation – Fostering an Inclusive, Just World Order

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.