TNPSC Daily Current Affairs in Tamil 01 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil  01.06.2018

மலபார் போர் பயிற்சி:

 • இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க கப்பல் படை வீரர்கள் கலந்துக்கொள்ளும் ஓர் பயிற்சி நிகழ்ச்சியான, “மலபார் பயிற்சி”, ஜூன் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிலிப்பைன்ஸ் கடலருகே உள்ள குவாம் தீவுகள் பகுதிகளில் நடைபெற உள்ளது
 • இது 22-வது மலபார் பயிற்சி நிகழ்ச்சி ஆகும். தென்சீன கடல்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, அமெரிக்க மேற்கொள்ளும் ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே இந்த பயிற்சி பார்க்கப்படுகிறது
 • 1992ம் ஆண்டு முதன் முதலாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த மலபார் கடல்சார் பயிற்சி துவக்கப்பட்டது.
 • 2௦15ம் ஆண்டு முதல் இந்த பயிற்சியில் ஜப்பான் நாடும் இணைந்துள்ளது.

பெண் குற்ற வழக்குகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்யோக தடயவியல் ஆய்வகம்:

 • சண்டிகர் நகரில் உள்ள “மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வக” (CFSL = CENTRAL FORENSIC SCIENCE LABORATORY, CHANDIGARH) வளாகத்தில் “சக்கி சுரக்ஸா அதிநவீன டி.என்.ஏ தடயவியல் ஆய்வகம்(SAKHI SURAKSHA ADVANCED DNA FORENSIC LABORATORY) திறக்கப்பட்டுள்ளது
 • இது இந்தியாவில் பெண் குற்றவாளிகள் தொடர்பான தடயவியல் ஆய்வு மேற்கொள்ளும் முதல் பிரத்யோக தடயவியல் மையம் ஆகும் (IT IS INDIA’S FIRST ADVANCED FORENSIC LAB DEDICATED FOR CRIMES RELATED TO WOMEN)
 • அடுத்த 3 மாதங்களில், மேலும் கூடுதலாக 5 ஆய்வக மையங்கள் மும்பை, சென்னை, குவஹாத்தி, பூனே மற்றும் போபால் ஆகிய நகரங்களில் அமைய உள்ளது

தொகுப்பமைப்பு முன்கணிப்பு முறை:

 • மத்திய புவி அறிவியல் அமைச்சகம், மிகவும் துல்லியமான முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் நிகழவிருக்கும் மழை, புயல், வெப்பக் காற்று போன்ற பல்வேறு பருவநிலை மாற்றங்களை முன்கணித்து கூறும், “தொகுப்பமைப்பு முன்கணிப்பு முறை” (EPS = ENSEMBLE PREDICTION SYSTEM) என்ற தொழில்நுட்ப முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது
 • ஐரோப்பா கண்டத்தில் மிகவும் புகழ் பெற்ற இம்முறை இந்தியாவில் தற்போது நடைமுறைக்கு வர உள்ளது

ஓடிஸா மாநில அரசின் “கோப்பந்து சம்படிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா”:

 • ஓடிஸா மாநில அரசு, அம்மாநில பத்திரிக்கையாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு (NEW HEALTH INSURANCE SCHEME FOR JOURNALISTS) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 • இந்த திட்டத்தின் பெயர் = கோப்பபந்து சம்படிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா”
 • ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அளவில் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும்

ட்ரிப்ஸ் – சி.பி.டி இணைப்பு சர்வதேச கருத்தரங்கம்:

 • ட்ரிப்ஸ் – சி.பி.டி இணைப்பு சர்வதேச கருத்தரங்கம் ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது (TRIPS – CBD LINKAGE INTERNATIONAL CONFERENCE 2018)
 • TRIPS = TRADE-RELATED ASPECTS OF INTELLECTUAL PROPERTY RIGHTS (TRIPS) AGREEMENT
 • CBD = CONVENTION ON BIOLOGICAL DIVERSITY
 • ட்ரிப்ஸ் என்பது உலக வணிக கூட்டமைப்பின் ஒரு ஒப்பந்தமாகும்

ஜூன் 1 = உலக பால் தினம்:

 • ஜூன் 1ம் தேதி, உலகம் முழுவதும் “உலக பால் தினம்” (JUNE 1 = WORLD MILK DAY) கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடும், ஒவ்வெரு கருப்பொருளை கொண்டு இத்தினத்தை கடைபிடிக்கின்றன
 • இந்தியாவில் உலக பால் தினத்தின் கரு = Drink Move Be Strong
 • ஆனால், இந்தியாவில் தேசிய பால் தினம், இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படும் வர்கீஸ் குரியனின் பிறந்த தினமான நவம்பர் 26ம் தேதியே “இந்திய தேசிய பால் தினமாக” (NOVEMBER 26 = INDIAN NATIONAL MILK DAY) கொண்டாடப்படுகிறது

இந்த ஆண்டின் சமூக நலத்தின் சிறந்த எழுச்சி மிக்க நபர்:

 • தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு, இந்த ஆண்டின் சமூக நலத்திற்கான சிறந்த எழுச்சி மிக்க நபர் என்ற கவுரவம் வழங்கப்பட்டது (INDIAN STAR CRICKETER YUVRAJ SINGH HAS BEEN HONOURED WITH THE ‘MOST INSPIRING ICON OF THE YEAR FOR SOCIAL WELFARE’ AWARD)
 • இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார்
 • இவர் தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கி, புற்று நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.

முதல் இந்திய விமானப் படை கமாண்டோக்கள் கருத்தரங்கம்;

 • முதல் இந்திய விமானப் படை கமாண்டோக்கள் கலந்துக்கொண்ட கருத்தரங்கை (First Biannual Indian Air Force Commanders’ Conference), மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், புது தில்லியில் துவக்கி வைத்தார்
 • ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட “ககன் சக்தி 2018” பயிற்சி பற்றி இதில் விவாதிக்கப்பட்டது

பீட்டா விருது:

 • விலங்குகள் நல அமைப்பான, “பீட்டா” அமைப்பு சார்பில் வருடந்தோறும் வழங்கப்படும் “HEROS TO ANIMALS AWARD” என்ற விருது, இந்த ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பாடகரான ஜுபின் கார்க் அவர்களுக்கு வழங்கப்பட்டது

ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் ஆளுநர் ஊர்மிளா சிங் காலமானார்:

 • ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், காண்கிற கட்சியின் மூத்த பெண் தலைவர்களில் ஒருவரான ஊர்மிளா சிங், இந்தூர் நகரில் காலமானார். அவருக்கு வயது 71.
 • தேசிய பழங்குடியின ஆணையத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்

அதிக லாபம் கண்ட பொதுத்துறை நிறுவனம்:

 • இந்த ஆண்டு அதிக லாபம் கண்ட பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்நிறுவனம் முன்னையில் உள்ளது
 • இந்தியாவிலேயே அதிக லாபம் கண்ட நிறுவனமாக, முதல் யாதில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது.

சந்தோக்பா மனிதநேய விருது;

 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “சந்தோக்பா மனிதநேய விருதை” (Santokbaa Humanitarian Award), நோபல் பரிசு பெற்ற குழந்தைநேய ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் ஆகியோர்களுக்கு வழங்கினார்
 • குஜராத்தின் சூரத் நகரில் இவ்விழா நடைபெற்றது

இசைக்கான புலிட்சர் விருது:

 • இந்த ஆண்டின் இசைப் பிரிவில் புலிட்சர் விருது, “கென்றிக் லமார்” (Kendrick Lamar Received The Pulitzer Prize In Music For His Album “Damn” ), என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரின் “டேம்ன்” என்ற இசை தொகுப்பு ஆல்பத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது

 

Leave a Comment

Your email address will not be published.