TNPSC Daily Current Affairs in Tamil 02 JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 02.07.2018

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSC WINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 2, 2A, 4 ETC.,

 

சர்வதேச குறுங்கோள் தினம், ஜூன் 3௦:

  • 2௦16ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 3௦ம் தேதி, இனி வரும் காலங்களில் “சர்வதேச குறுங்கோள் தினமாக” (INTERNATIONAL ASTEROID DAY) கொண்டாடப்படும் என தெரிவித்தது
  • அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3௦ம் தேதி, சர்வதேச குறுங்கோள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
  • 1908ம் ஆண்டு ரசியாவின் சைபீரியா பகுதியில், “உன்குஸ்கா குறுங்கோள் மோதிய நிகழ்வை” அனுசரிக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது

சர்வதேச துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலகக்கோப்பை:

  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிகள் ஜெர்மனியின் சூழ் நகரில் நடைபெற்றது
  • 61 நாடுகள் கலந்துக்கொண்ட இப்போட்டியில், இந்தியா 15 தங்கம், 2 வெள்ளி மற்றும் 9 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது

மத்திய ரிசர்வ் போலிஸ் படை:

  • மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் சார்பில், ஜம்மு காஸ்மீரில் 24 மணி நேரமும் செயல்படும் “மடாட்கார் உதவி எண்” (CENTRAL RESERVE POLICE FORCE LAUNCHES 24 HOUR ‘MADADGAAR HELPLINE’ IN JAMMU & KASHMIR) சேவை துவக்கப்பட்டுள்ளது
  • இந்த எண் = 14411
  • உதவி தேவைப்படும் மக்கள் இந்த என்னில் தொடர்பு கொண்டு சேவைகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜோத்பூரில் விருந்தோம்பல் மேலாண்மை கழகம்:

  • இந்தியாவில் சுற்றுலாத் துறையை மேலும் வளர்ச்சிபெற செய்ய ஏதுவாக மத்திய அரசு, “ஜோத்பூரில் விருந்தோம்பல் மேலாண்மை கழகத்தை” (INSTITUTE OF HOSPITALITY MANAGEMENT IN JODHPUR) துவக்கி உள்ளது
  • உலக அளவில் இந்தியாவில் சுற்றுலா துறை பங்களிப்பு 7% ஆகும்

இந்தியாவின் மிகப்பெரிய கழிமுக முதலைகள் வாழிடம்:

  • இந்தியாவின் மிகப்பெரிய கழிமுக முதலைகள் வாழிடமாக, ஓடிஸா மாநிலத்தின் “பிதர்கனிகா தேசிய பூங்கா” உருவெடுத்துள்ளது (BHITARKANIKA NATIONAL PARK HAS BECOME THE LARGEST HABITAT OF THE ENDANGERED ESTUARINE CROCODILES IN INDIA)
  • இங்கு 1698 கழிமுக முதலைகள் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது
  • இந்த கழிமுக முதலைகள் மேற்குவங்கத்தின் சுந்தரவனக் காடுகள் பகுதியிலும் உள்ளன

விமான நிலைய காலந்தவறாமை குறியீடு:

  • இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அடிப்படையில் உலகளவில் உள்ள 513 விமான நிலையங்களை கொண்டு நேரம் தவறாமை செயல்படும் விமான நிலைய குறியீடு வெளியிடப்பட்டுள்ளது (PUNCTUAL AIRPORTS IN THE WORLD)
    1. நேரம் தவறாமல் சரியான நேரத்தில் சேவைகளை மேற்கொள்ளும் முதல் இடத்தில உள்ள விமான நிலையம் = ஜப்பானின் நகோயா கொமாகி விமான நிலையம்
    2. முதல் 2௦௦ இந்தியாவின் முக்கிய விமான நிலையமும் இல்லை. ஆனால் 65-வது இடத்தில, இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் ப்ளைர் விமான நிலையம் உள்ளது
    3. 246-வது இடம் = ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்
    4. 255-வது இடம் = சென்னை சர்வதேச விமான நிலையம்
    5. இந்தியாவின் அதிக பயணிகளை இயக்கும் டெல்லி சர்வதேச விமான நிலையம் 451-வது இடத்தில உள்ளது
    6. இந்தியாவின் 2-வது பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையம் 5௦9-வது இடத்தில் உள்ளது
    7. 513-வது இடமான கடைசி இடத்தில துநிசா நாட்டின் விமான நிலையம் உள்ளது

அமெரிக்காவின் தேசிய குடியரசு குழுவின் முதல் இந்திய தலைமை அதிகாரி:

  • அமெரிக்காவின் மிக முக்கிய அரசியல் முடிவெடுக்கும் அமைப்பான தேசிய குடியரசு குழுவின் முதன்மை அதிகாரியாக இந்தியா வம்சாவழியை சேர்ந்த சீமா நந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (THE DEMOCRATIC NATIONAL COMMITTEE (DNC) OF UNITED STATES HAS APPOINTED INDIAN AMERICAN SEEMA NANDA AS ITS NEW CEO)
  • இப்பதவியில் அமரும் முதல் இந்திய அமெரிக்கவர் இவராவார்

பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளர்:

  • பாகிஸ்தான் நாட்டின் முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளராக “ஹர்மீத் சிங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் (HARMEET SINGH — THE FIRST SIKH TO BECOME A NEWSCASTER IN PAKISTAN)
  • இவர் கைபர் மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கராச்சி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார்
  • சமிபத்தில் “பாகிஸ்தானின் முதல் சீக்கிய பெண் பத்திரிக்கையாளர் என்ற சிறப்பை மன்மீத் கவுர்” என்பவர் பெற்றது குறிப்பிடத்தக்கது (MANMEET KAURHAD BECOME THE FIRST FEMALE SIKH REPORTER OF PAKISTAN)

தேசிய மருத்துவர்கள் தினம் – ஜூலை 1:

  • தேசிய மருத்துவர்கள் தினம் (NATIONAL DOCTORS DAY) ஜூலை மாதம் 1-ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது
  • இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரான பிதன் சந்திர ராய் அவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினத்தை அனுசரிக்கும் வகையிலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = ZERO TOLERANCE TO VIOLENCE AGAINST DOCTORS AND CLINICAL ESTABLISHMENT
  • இவர் மேற்கு வாங்க மாநிலத்தின் 2-வது முதல்வராக 14 ஆண்டுகள் பதவி வகித்தவர் ஆவார். இவருக்கு 1961ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • JULY 1 CURRENT AFFAIRS

சர்வதேச கேலி (நையாண்டி) தினம், ஜூலை 1:

  • சர்வதேச கேலி (நையாண்டி) தினம் (INTERNATIONAL JOKE DAY), உலகம் முழுவதும் ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது
  • இது முதலில் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு, பின்பு உலகம் முழுவதும் பரவியது
  • உலகின் முதல் கேலி (நையாண்டி), கிரேக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
  • நடப்பு நிகழ்வுகள் அறிய

சரக்கு மற்றும் சேவை வரி தினம், ஜூலை 1:

  • சரக்கு மற்றும் சேவை வரிகள் தினமான (GOODS AND SERVICE TAX DAY, JULY 1) ஜூலை 1-ம் தேதியை, மத்திய அரசு விமரிசையாக கொண்டாடியது
  • சரக்கு மற்றும் சேவை வரி 2௦17ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. இதன் ஓராண்டு முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் விழா நடத்தப்பட்டது
  • இந்திய அரசியல் அமைப்பு 1௦1-வது சட்டத் திருத்தும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பானது ஆகும்

சென்னை மாணவர்கள் உருவாக்கிய உலகின் எடைகுறைவான செயற்கைக்கோள்:

  • சென்னை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த நாகு மாணவர்கள் ஒன்று சேர்ந்து, “உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோளினை” (WORLD’S LIGHTEST SATELLITE) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்
  • 39 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், சுமார் 4 சென்டிமீட்டர் அகலமுடையது ஆகும்.
  • இந்த செயற்கைக்கோளிற்கு, “ஜெய்ஹிந்த்-1எஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது
  • கடந்த ஆண்டு, கரூரை சேர்ந்த “ரிபாத் சரூக்” என்ற பள்ளி மாணவன் “கலாம் சாட்” என்ற பெயரில் உலகிலேயே மிக சிறிய (எடை குறைவான) செயற்கைக்கோள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.