TNPSC Daily Current Affairs in Tamil 02 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 02 June 2018

02.06.2018

சேவா போஜ யோஜனா திட்டம்:

  • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், “சேவா போஜ யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இதன் நோக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமய நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி வரியில் இருந்து தங்களது நிதியிழப்பை தவிர்க்க வழிவகை செய்கிறது
  • உணவு, பிரசாதம், சமூதாய உணவு வழங்குதல் போன்றவற்றிற்கு விலகு அளிக்கப்பட்டுள்ளது

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.1௦௦௦:

  • ஆந்திர மாநில அரசு, அம்மாநிலத்தின் படித்து முடித்து வேலையற்று உள்ள இளைஞர்களுக்கு மாதம் ரூ.1௦௦௦ உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது
  • சுமார் 1௦ லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்படும்

குழந்தைப் பருவ குறியீடு 2018:

  • குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில், “குழந்தைப் பருவ குறியீடு 2018” (CHILDHOOD INDEX 2018) வெளியிடப்பட்டுள்ளது
  • மொத்தம் 175 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியலில், இந்தியா 113-வது இடத்தை பிடித்துள்ளது
  • சென்ற ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு இந்தியா சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தை திருமணங்களை பெருமளவு குறைத்தே இதற்கு முக்கிய காரணமாகும்
  • முதல் இடம் = ஸ்லோவேனியா
  • கடைசி இடம் = நைஜீரியா

88 ஆண்டுகால சேவையை முடித்த “தக்கான ராணி” ரயில்:

  • இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயிலான, “தக்கான ராணி” (DECCAN QUEEN TRAIN) ரயில் 88 வருட சேவையை நிறைவு செய்துள்ளது. மும்பை முதல் பூனே வரை இயங்கும் இந்த ரயில், 193௦ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தனது சேவையை துவங்கியது
  • இந்திய ரயில்வே துறையால் நாட்டில் அறிமுகம் செய்யப்பட முதல் டீலக்ஸ் ரயில் இதுவாகும்

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துரையின் புதிய செயலாளர்:

  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக அமித் காரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இதற்கு முன்னர் இருந்தவர் = நரேந்திர குமார் சின்ஹா

ஜூன் 1 = உலக பெற்றோர் தினம்:

  • உலக பெற்றோர்கள் தினம் (GLOBAL PARENTS DAY), வருடம் தோறும், ஜூன் 1-ம் தேதி கொண்டாடப் படுகிறது
  • 2௦12ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

ஐ.சி.சி கிரிக்கெட்டில் புதிதாக நான்கு அணி:

  • ஐ.சி.சி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தரவரிசையில் இது வரை 1௦ நாட்டு அணிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது கூடுதலாக நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய ரபு எமிரகம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன

சிங்கப்பூரின் “டாமி கோ”விற்கு “பத்ம ஸ்ரீ” விருது:

  • இந்தியாவின் உயர்ந்த விருதான “பத்ம ஸ்ரீ” விருது, சிங்கப்பூரை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரியான, “டாமி கோ” என்பவருக்கு வழங்கப்பட்டது (Prime Minister Narendra Modi handed over the Padma Shri awardto former Singaporean diplomat Tommy Koh)
  • பிரதமரின் சிங்கப்பூர் வருகையின் பொது அவருக்கு இது வழங்கப்பட்டது

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.