TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL – 03 July

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 03.07.2018

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSC WINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 2, 2A, 4 ETC.,

 

9-வது இந்திய – நேபாள் உறவுகளுக்கான உயர்மட்ட நபர்கள் குழுக் கூட்டம்:

 

 • இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகள் குறித்த 9-வது மற்றும் இறுதி உயர்மட்ட நபர்கள் குழுக் கூட்டம், நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது (9TH AND FINAL MEETING OF EPG (EMINENT PERSONS GROUP) ON INDIA – NEPAL RELATIONS)
 • இக்கூட்டத்தில் 195௦ம் ஆண்டு அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை, வணிகம், எல்லை மற்றும் போக்குவரத்து போன்ற பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது

கோல்டன் குளோப் போட்டி:

 • இந்திய கடற்படையை சேர்ந்த “அபிலாஸ் டாமி” என்பவர், உலகை தனியாக இடைவெளி இன்றி சுற்றி வரவேண்டிய “தங்க உலக பந்தயத்தில்” (GOLDEN GLOBE RACE) பங்கு பெற்றுள்ளார்
 • இந்த பந்தயம், மேற்கு பிரான்சின் லெஸ் சாபெல்ஸ் துறைமுகத்தில் இருந்து துவங்கியது. இது 2௦19ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே துறைமுகத்தில் நிறைவு பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • உலகம் முழுவதும் இருந்து 18 பேர் பங்கேற்றுள்ள இந்த பந்தயத்தில், ஆசியாவில் இருந்து பங்கேற்ற ஒரே நபர் இவர் தான்

ரவீந்திர தொலாக்கியா குழு:

 • மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியை துல்லியமாக கணக்கிட ஏதுவாக ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார தகவல்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தின் பொருளாதார தகவல்களை சரியாக கணக்கிட 13 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினை அமைத்துள்ளது
 • இக்க்லுவின் தலைவராக, “ரவீந்திர தொலாக்கியா” (RAVEENTHRA DHOLAKIYA COMMITTEE) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

டெல்லி அரசின் “மகிழ்ச்சியான பாடத்திட்டம்”:

 • தியானம், ஊக்கம் அளித்தல், சமூக நெறி மதிப்புகள் மற்றும் மூளைக்கு வேலையளிக்கும் விளையட்டுக்கள் போன்றவை உள்ளடக்கிய “மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை” (DELHI GOVERNMENT’S HAPPINESS CURRICULUM FOR SCHOOL STUDENTS) அம்மாநில பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தது
 • தலாய் லாமா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இதனை துவக்கி வைத்தார்
 • ஒவ்வெரு நாளும் 45 நிமிடங்கள் உள்ளடக்கிய “பாடவேளை” இதற்காக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

“லெகாட்ரிக்ஸ்” – ஆன்லைன் சட்ட உடன்பாட்டு திட்டம்:

 • அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நுமலிகார் சுத்திகரிப்பு நிறுவனம், இந்தியாவில் முதன் முதலாக “லெகாட்ரிக்ஸ்” என்னும் ஆன்லைன் சட்ட உடன்பாட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது (ONLINE LEGAL COMPLIANCE SYSTEM BY INTRODUCING ‘LEGATRIX‘)
 • இந்த நிறுவனத்தில் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 • நடப்பு நிகழ்வுகளுக்கு மேலும் அறிய

5-வது வட்டார பரந்த பொருளாதார கூட்டாண்மை அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம்:

 • 5-வது வட்டார பரந்த பொருளாதார கூட்டாண்மை அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம், ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற்றது (5TH REGIONAL COMPREHENSIVE ECONOMIC PARTNERSHIP (RCEP) INTERSESSIONAL MINISTERIAL MEETING)
 • முதல் முறையாக ஆசியான் நாடுகளில் நடைபெறாமல் வெளியே இக்கூட்டம் நடைபெற்றது

ஐ.சி.சி. வாழ்த்தரங்கம்:

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி “ஹால் ஆப் பேம்” (ICC HALL OF FAME) எனப்படும் “வாழ்த்தரங்கத்தில்”, இந்திய முன்னாள் நட்சத்திர வீரரான ராகுல் டிராவிட்டையும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்கையும் சேர்த்துள்ளது
 • இந்த வாழ்த்தரங்க பட்டியலில் இணைந்துள்ள 5-வது இந்திய கிரிக்கெட் வீரர், ராகுல் திராவிட் ஆவார். இதற்கு முன்னர் பிசன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ மற்றும் அணில் கும்ப்ளே ஆகியோர் இணைந்துள்ளனர்

2018 ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை:

 • நெதர்லாந்தின் ப்ரேடா நகரில் நடைபெற்று வந்த 2018 ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி (2018 Men’s Hockey Champions Trophy) கோப்பையின் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது
 • 15-வது முறையாக ஆஸ்திரேலிய அணி இந்த கோப்பையை வென்றது. தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி தோற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது
 • மூன்றாவது இடத்தில நெதர்லாந்து அணி வெண்கலப் பதக்கத்துடன் உள்ளது

“எபிடியோலெக்ஸ்” – கஞ்சாவில் இருந்து உருவாக்கப்டுள்ள உலகின் முதல் மருந்து:

 • போதை மருந்துப் பொருளான கஞ்சாவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மருந்தான “எபிடியோலெக்ஸ்” என்னும் மருந்தினை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிருவாக ஆணையம் அங்கீகரித்துள்ளது (WORLD’S FIRST-EVER CANNABIS-BASED MEDICINE “EPIDIOLEX” MADE FROM MARIJUANA)
 • குழந்தைகளுக்கு ஏற்படும் காக்கை வலிப்பு நோய்க்களுக்கு இம்மருந்து பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்:

 • புது தில்லியில் உள்ள “மத்திய நீர் ஆணையத்தின்” அலுவலக வளாகத்தில் “காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்” நடைபெற்றது (FIRST MEETING OF THE CAUVERY WATER MANAGEMENT AUTHORITY (CWMA))
 • காவிரி நீர் மேலாண்மை வாரியத்தி தலைவரான “எஸ். மசூத் ஹுசைன்” தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது
 • உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஜூன் 1-ம் தேதி அமைக்கப்பட்டது

இந்தியாவின் முதல்  “காதி மால்” (அங்காடி):

 • இந்தியாவின் முதல் “காதி அங்காடி (மால்)”, ஜார்காண்டு மாநில அரசால் விரைவில் துவக்கப்பட உள்ளது (INDIA’S FIRST DEDICATD KHADI MALL)
 • காடி பொருட்களால் உருவாக்கப்பட பொருட்கள் வணிகத்தை ஊக்குவிக்க இந்த முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது
 • FOR JULY 2ND CURRENT AFFAIRS

2018 தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு விருது:

 • 2018-ம் ஆண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு விருது, மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த “மிலன் சங்கர் தாரே” என்ற மீனவருக்கு வழங்கப்பட்டது (MILAN SHANKAR TARE, HAS BEEN SELECTED FOR THE 2018 NATIONAL MARITIME SEARCH AND RESCUE AWARD)
 • “சிவனேரி” என்ற படகு மூழ்கும் நிலையில் இருந்த போது, இவர் அப்படகில் இருந்து 12 பேரையும் மீட்டுள்ளார்

 

Leave a Comment

Your email address will not be published.