TNPSC Daily Current Affairs in Tamil 03 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil  03.06.2018

அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:

 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஓடிஸா மாநிலத்தின் உள்ள அப்துல் கலாம் தீவில் (வீலர் தீவு) இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது
 • இது அக்னி 5 ஏவுகணையின் 6-வது வெற்றிகர சோதனை ஆகும்
 • 5 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 5௦௦௦ கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது

தாஜ் பிரகடனம்:

 • தாஜ் மகாலை சுற்றி 5௦௦ மீட்டர் தூரத்திற்கு எவ்வித பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்தாத வகையில், பிளாஸ்டிக் மாசுவை தடுக்கும் “தாஜ் பிரகடனம்” (TAJ DECLARATION TO BEAT PLASTIC POLLUTION) அறிவிக்கப்பட்டுள்ளது
 • ஆக்ரா மக்களுக்கு இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு சர்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன்-5 முதல் நடைமுறைக்கு வருகிறது

ஹம்சபார் எக்ஸ்ப்ரெஸ்:

 • மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புதிய “ஹம்சபார் எக்ஸ்ப்ரெஸ்” (HUMSAFAR EXPRESS) ரயிலை, ராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து பந்த்ரா வரை செல்லும் புதிய ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்
 • உயிரி கழிவறை, எல்.இ.டி தொலைக்காட்சி வசதி, சி.சி.டி.வி கேமரா வசதி போன்ற பல்வேறு காசதிகள் இந்த ரயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ஜூன் 3 = முதல் உலக மிதிவண்டி தினம்:

 • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் அவை முதன் முறையாக ஜூன் 3ம் தேதியை, “உலக மிதிவண்டி தினமாக” (JUNE 3 – FIRST WORLD BICYCLE DAY) அறிவித்துள்ளது
 • இதனை முன்னிட்டு, இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், புது தில்லியில் 5௦௦௦சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள் பந்தய போட்டியை துவக்கி வைத்தார்

இந்திய புவியியல் கணக்கெடுப்பு துறையின் புதிய தலைவர்:

 • இந்திய புவியியல் கணக்கெடுப்பு துறையின் (GSI – GEOLOGICAL SURVEY OF INDIA) புதிய தலைவராக தினேஷ் குப்தா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • புவியியல் மற்றும் சுரங்க கனிம துறையில் பல்வேறு பதவிகளை ஏற்கனவே வகித்தவர் ஆவார்

பிரதமரின் 3 நாடுகள் பயணம்:

 • பிரதமர் அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார்
 • இந்தோனேசியாவில் ராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, ரயில்வே போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த 15 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன
 • மலேசியாவில், அந்நாட்டின் புதிய பிரதமரான 92-வயது மகதிர் மொகமது அவர்களை சந்தித்து இந்தியாவுடனான வணிக தொடர்பை வலுப்பெற வேண்டினார்
 • இறுதியாக சிங்கப்பூரில் இந்திய டிஜிட்டல் பணப்பரிமாற்ற தொழில்நுட்பங்களை அங்கு அறிமுகம் செய்தார்

நீலக் கொடி சான்று:

 • சுற்றுச்சூழல் மாசு இல்லாத, சர்வதேச வசதிகளுடன் கூடிய கடற்கரை பகுதிகளுக்கு, “நீல கொடி சான்று” (BLUE FLAG CERTIFICATE) வழங்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவில் உள்ள முக்கிய 13 கடைகரை பகுதிகள் நீலக் கொடி சான்றினை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
 • இதனை மத்திய அரசின், “ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை கழகம்” (SICOM – SOCIETY FOR INTEGRATED COASTEL MANAGEMENT) மேற்கொள்ள உள்ளது

இகியா நிறுவனத்தின் முதல் கிளை:

 • உலகப் புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த மரச்சாமான்கள் விற்பனை நிறுவனமான, இகியா நிறுவனம், இந்தியாவின் தனது முதல் கிளையை ஹைதராபாத் (IKEA TO ENTER INDIA WITH FIRST PHYSICAL STORE IN HYDERABAD) நகரில் துவக்க உள்ளது
 • சுமார் 1௦௦ கோடி ரூபாய் மதிப்பில் இந்த கிளை துவங்கப்படவுள்ளது

உலகின் அதிக மதிப்புவாய்ந்த பாஸ்போர்ட்:

 • உலகின் அதிக மதிப்பு மிக்க பாஸ்போர்ட் (MOST POWERFUL PASSPORT IN THE WORLD) கொண்டுள்ள நாடாக ஜப்பான் அறிவிக்கப்படுள்ளது
 • இப்பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் மதிப்பு, 76-வது இடத்தில உள்ளது

அமெரிக்கா, கியூபா இடையே மீண்டும் நேரடி அஞ்சல் சேவை:

 • 1963ம் ஆண்டில் தடைபட்ட அமெரிக்க மற்றும் கியூபா நாடுகள் இடையேயான அஞ்சல் சேவை மீண்டும் (US AND CUBA WILL PERMANENTLY RESTORE POSTAL SERVICES) தற்போது துவக்கப்பட்டுள்ளது
 • இதுவரை கனடா மாறும் மெக்சிகோ நாடுகளின் மூலம் இந்த அஞ்சல் சேவை நடைபெற்று வந்தன

உலகின் முதல் செயற்கை கருவிழி:

 • உலகின் முதல் செயற்கை கருவிழிக்கு (WORLD’S FIRST ARTIFICIAL IRIS APPROVED IN THE US) அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பொறுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது

சிங்கப்பூரில், மந்தாரை பூவிற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டது:

 • அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற இந்திய பிரதமரின் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள 38 செண்டிமீட்டார் நீளமுடைய மந்தாரை பூவிற்கு, பிரதமரின் பெயர் சூட்டப்பட்டது
 • அப்பூவிற்கு DENDROBIUM NARENDRA MODI என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்திய கடற்படையின் “நிஸ்டர் நடவடிக்கை”:

 • புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டின் ஸ்காட்ரா தீவுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க, இந்திய கடற்படை “நிஸ்தர் நடவடிக்கையை” (OPERATION NISTAR) என்ற நடவடிக்கையை மேற்கொண்டது
 • ஐ.என்.எஸ் சுனன்யா (INS SUNANYA) என்ற இந்திய கப்பற்படை கப்பலின் மூலம் சுமார் 38 மீனவர்கள் மீட்கப்பட்டனர்

Leave a Comment

Your email address will not be published.