TNPSC Daily Current Affairs Tamil – 04 July

TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL – 04.07.2018

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSC WINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 2, 2A, 4 ETC.,

 

அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் கருத்தரங்கம்:

 • ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில், அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்ட ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது (THE CONFERENCE OF MINISTERS FOR POWER, NEW & RENEWABLE ENERGY OF STATES & UNION TERRITORIES WILL BE IN SHIMLA, HIMACHAL PRADESH)
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மேற்கொண்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது

திறன் மேம்பாட்டிற்கான தேசிய பயிற்சிப்பட்டறை:

 • மத்திய சமூக நீதி துறை அமைச்சகத்தின் கீழ், உடல் ஊனமுற்றோர் பிரிவின் சார்பில் “திறன் மேம்பாட்டிற்கான தேசிய பயிற்சிப்பட்டறை” (NATIONAL WORKSHOP ON SKILL DEVELOPMENT FOR PERSONS WITH DISABILITIES (DIVYANGJAN)’) புது தில்லியில் நடத்தப்பட்டது
 • உடல் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்துதல், உருவாக்குதல் போன்றவை இதில் விவாதிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை எடுத்துரைக்கவும் இதில் அறிவுறுத்தப் பட்டுள்ளது

கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துவோருக்கு தண்டனை விவரம்:

 • கிரிக்கெட் விளையாட்டில் பந்தை சேதப்படுத்துவோருக்கு குறைந்தபட்சம் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படவுள்ளது (INTERNATIONAL CRICKET COUNCIL (ICC) WILL IMPOSE A BAN OF MINIMUM SIX TESTS OR 12 ODIS ON BALL TAMPERING OFFENDERS)
 • அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது

புதுச்சேரி அரசில் முதல் பெண் டி.ஜி.பி:

 • புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் டி,ஜி,பியாக “சுந்தரி நந்தா” அவர்கள் பதவி ஏற்றார் (PUDUCHERRY’S FIRST WOMAN DGP SUNDARI NANDA)
 • டெல்லியில் பணிபுரிந்து வந்த இவர் தற்போது புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார்

“இரும்பு மனித முத்தடகள” போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய ராணுவ வீரர்:

 • ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்ற உலகிலேயே கடினமான போட்டியான “இருந்ம்பு மனிதன் முத்தடகள” போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய ராணுவ வீரர் என்ற சிறப்பை ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.டோக்ரா பெற்றுள்ளார் (MAJOR GENERAL V D DOGRA HAS BECOME THE FIRST INDIAN ARMY OFFICER TO COMPLETE THE IRONMAN TRIATHALON EVENT, CONSIDERED ONE OF THE MOST DIFFICULT ONE-DAY SPORTING EVENTS IN THE WORLD, IN AUSTRIA)
 • 8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் சைக்கிள் பந்தய ஒட்டுதல் மற்றும் 42.2 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் என இந்த மூன்றையும் ஒரே நாளின் முடிப்பதே “முத்தடகள இரும்பு மனிதன்” விளையாட்டின் அடிப்படையாகும்
 • 17 மணி நேரத்திற்குள் இதனை முடிக்க வேண்டும் என்பது இலக்காகும். இந்திய மேஜர் ஜெனரல் வி.டி.டோக்ரா 14 மணி நேரம் 21 நிமிடங்களில் இதனை முடித்து வெற்றி பெற்றார்

கொலம்பியாவின் சிர்ரிபிகேட் தேசிய பூங்காவை பாரம்பரிய இடமாக அறிவிப்பு:

 • ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு, கொலம்பிய நாட்டின் சிர்ரிபிகேட் தேசிய பூங்காவை, உலக பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது (THE UNITED NATIONS HAS PLACED COLOMBIA’S CHIRIBIQUETE NATIONAL PARK ON ITS LIST OF WORLD HERITAGE SITES)
 • வடக்கு அமேசான் காடுகளை ஒட்டியுள்ள இந்த இடம், உலகில் அதிக அளவிலான தாவர பல்லுயிர் பெருக்க இடமாகும்

“ராமாயணத்தை” உருது மொழியில் மொழிமாற்றம் செய்யும் முஸ்லிம் ஆசிரியை:

 • இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான ராமாயணத்தை, முஸ்லிம்களின் உருது மொழியில் மொழிமாற்றம் செய்யும் வேலைகளை கான்பூரை சேர்ந்த “மகி தலத் சித்திக்” என்ற முஸ்லிம் பெண் ஆசிரியை ஈடுபட்டுள்ளார் (MUSLIM TEACHER AND AUTHOR HAS TRANSLATED THE RAMAYANA INTO URDU)
 • ராமாயணத்தின் கருத்துக்களை முஸ்லிம் மக்கள் கற்க ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

பழங்குடியின அருங்காட்சியகம்:

 • சத்திஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாகி வரும் “நயா ராய்பூர்” நகரில் அம்மாநில அரசால் “பழங்குடியின அருங்காட்சியகம்” அமைக்கப்பட உள்ளது (CHHATTISGARH GOVERNMENT WILL SET UP A TRIBAL MUSEUM IN THE STATE’S UPCOMING NEW CAPITAL NAYA RAIPUR)
 • 22 ஏக்கர் பரப்பளவில் 27 கோடி ரூபாய் மதிப்பில் இது நிறுவப்பட உள்ளது

தேர்தல் ஆணையத்தின் “சிவிஜில்” மொபைல் செயலி:

 • இந்திய தேர்தல் ஆணையம், புது தில்லியில் நடைபெற்ற விழாவில் “சிவிஜில்” என்ற ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை அறிமுகம் செய்தது (ELECTION COMMISSION LAUNCHES “CVIGIL” APP TO HELP VOTERS SHARE MALPRACTICE PROOF)
 • இந்த செயலி தேர்தல் நேரங்களில் மேட்டுமே செயல்படும். தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக இந்த செயலி மூலம் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம்

இந்தியாவின் “முதல் உலக முன்னெடுப்பு மாநாடு”:

 • நிதி ஆயோக் அமைப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் புது தில்லியில், இந்தியாவை வேகமாக முன்னெடுத்து செல்லும் விதமாக “MOVE: Global Mobility Summitஎன்ற பெயரில் இந்தியாவின் முதல் உலகளாவிய முன்னெடுப்பு மாநாட்டை நடத்த உள்ளது
 • பல்வேறு துறை சார்ந்த அமைச்சகங்கள், பல்வேறு தொழில் வல்லுனர்கள், தொழில் அதிபர்கள் போன்றோரை கொண்டு இந்தியாவில் வேலை வாய்ப்பை பெருக்குதல், மின்சார வாகன உற்பத்தியை மேற்கொள்ளுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது

இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் ராணுவ மேற்பார்வை குழு:

 • இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ மேற்பார்வை குழுவின் தலைவராக “உருகுவே நாட்டின் மேஜர் ஜெனரல் ஜோஸ் எலாடியோ அல்கீன்” நியமிக்கப்பட்டுள்ளார் (UNITED NATIONS MILITARY OBSERVER GROUP IN INDIA AND PAKISTAN (UNMOGIP))
 • இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் ராணுவ மேற்பார்வை குழு 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கப்பட்டது

திரிபுராவின் அகர்தலா விமானநிலையத்தின் பெயர் மாற்றம்:

 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆன காபினட் அமைச்சரவை குழு, திரிபுரா மாநிலத்தின் அகர்தலா விமான நிலையத்தின் பெயரை, “மகாராஜா பிர் பிக்ரம் மாணிக்ய கிசோர் விமான நிலையம்” என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது (RENAME THE AGARTALA AIRPORT IN TRIPURA AS ‘MAHARAJA BIR BIKRAM MANIKYA KISHORE AIRPORT’, AGARTALA)
 • அகர்தலா விமான நிலையத்திற்கான இடத்தை அளித்தவர் இந்த மகாராஜா ஆவார்

“நிமான்ஸ்” டிஜிட்டல் அகாடெமி:

 • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி.நட்டா அவர்கள் புது தில்லியில், “நிமான்ஸ் டிஜிட்டல் அகாடெமியை” (NIMHANS DIGITAL ACADEMY) துவக்கி வைத்தார் (NIMHANS = NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH AND NEURO SCIENCES)
 • மனநலம் சார்ந்த துறையில் சிறப்பாக செயல்பட இந்த டிஜிட்டல் அகாடமியை அவர் மாணவர்களுக்கு அற்பனித்தார்.

வேளாண் துறையில் இணைந்து செயல்பட இஸ்ரேலுடன் குஜராத் மாநிலம் ஒப்பந்தம்:

 • வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் அதுனுடன் தொடர்புடைய துறைகளில் இணைந்து செயல்பட இஸ்ரேல் அரசுடன் குஜராத் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது (JOINT WORKING GROUP (JWG) BETWEEN GUJARAT AND ISRAEL IN THE FIELDS OF AGRICULTURE, HORTICULTURE AND ALLIED SECTORS)
 • அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்களை இஸ்ரேல் நாட்டில் இருந்து பெற்று குஜராத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையை மேம்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் இயந்திரம்:

 • தெற்கு மத்திய ரயில்வே சார்பில் “பிளாஸ்டிக் பாட்டில்கள் நொறுக்கும் இயந்திரங்கள்” (SOUTH CENTRAL RAILWAY HAS INSTALLED PLASTIC BOTTLE CRUSHERS) நான்கு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது.
 • தெலுங்கானாவில் கச்சிகுடா, செகந்திராபாத் மற்றும் நிசாமாபாத். மற்றும் ஆந்திராவில் விஜயவாடா ரயில் நிலையங்களில் இது நிறுவப்பட்டுள்ளது
 • நாள் ஒன்றுக்கு சுமார் 5௦௦௦ பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் இந்த இயந்திரம். நொறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பைகள் மற்றும் டி-சர்ட் ஆகியவை தயாரிக்கப்படும்

போர் பயிற்சி நிகழ்ச்சியில் வெடித்து சிதறிய போர்க் கப்பல்:

 • நார்வே நாட்டு கடற்கரை பகுதியில் நடைபெற்ற கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சியின் பொழுது, ஜெர்மனி நாட்டினை சேர்ந்த போர்க்கப்பலான “எப்.ஜி.எஸ் சாக்சன்” என்ற கப்பலில் வான்வழி தாக்கும் ஏவுகணை ஒன்று சரியாக வெளியேறாமல் கப்பலிலே வெடித்து சிதறியது (AMERICAN-MADE SM-2 AIR DEFENSE MISSILE BECAME TRAPPED IN ITS LAUNCHER, AND EXPLODED GERMAN WARSHIP FGS SACHSEN, DURING A TRAINING EXERCISE OFF THE COAST OF NORWAY)
 • இதனால் கப்பல் முழுவதுமே வெடித்து சிதறியது

செயற்கை நுண்ணறிவு ரோபோட் – சிமோன்:

 • சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம், “CIMON” (CIMON, AN ARTIFICAL INTELLIGENCE ROBOT) என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது
 • CIMON = CREW INTERACTIVE MOBILE COMPANION
 • ஆங்கிலம் பேசும் இந்த ரோபோட், ஜெர்மனி விண்வெளி வீரரான அலெக்சாண்டர் ஜெர்ஸ்ட் என்பவருக்கு உதவியாக விண்வெளி நிலையத்தில் செல்ல உள்ளது

மத்திய கிழக்கு நாடுகளிலே “சிறந்த ஸ்மார்ட் நகரம்” – அபு தாபி:

 • மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5௦ முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், “சிறந்த ஸ்மார்ட் நகரமாக”, ஐக்கிய அரேபிய எமிரகத்தின் தலைநகரான அபுதாபி தேர்வு செய்யப்பட்டுள்ளதுக (ABU DHABI, CAPITAL OF THE UNITED ARAB EMIRATES (UAE), HAS TOPPED THE LIST OF “SMART CITIES” IN THE MIDDLE EAST AND AFRICA)
 • எதிர்கால வாழ்விற்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மேம்பட்ட நடவடிக்கைகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளது

 

 

Leave a Comment

Your email address will not be published.