TNPSC Daily Current Affairs in Tamil 04 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil  04.06.201

டினாமன் சதுக்க அடக்குமுறை படுகொலையின் 29-வது ஆண்டு தினம்:

 • சீனாவின் டினாமன் சதுக்க அடக்குமுறை மற்றும் படுகொலையின் 29-வது நினைவு தினம் ஜூன் 4ம் தேதி கடைபிடிக்கப்பட்டது (JUNE 4, 2018 MARKED THE 29TH ANNIVERSARY OF TIANANMEN SQUARE PROTESTS / MASSACRE OF CHINA)
 • 1989ம் ஆண்டு ஜோன் 4ம் தேதி, சீன ராணுவம் பீஜிங் நகரில் உள்ள டினமான் சதுக்கத்தில் குழுமி இருந்த இளைஞர்களை சுட்டுத் தள்ளியது.

இந்தியாவின் மின்-கழிவு:

 • “இந்திய மின்சாதனம் மற்றும் மின்னணுவியல்உற்பத்தி” என்ற தலைப்பில் அசோசாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சுமார் 5% மட்டுமே மின் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது (INDIA RECYCLES ONLY 5% OF ITS E-WASTE)
 • இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் டன் அளவிற்கு மின் கழிவுகள் உற்பத்தி ஆகிறது. இது உலக மின் கழிவுகளில் 12% ஆகும்
 • இந்தியாவில் அதிக மின் கழிவுகளை உருவாக்கும் மாநிலங்கள் = முதலிடத்தில் மகாராஷ்டிரா (19.8%), இரண்டாம் இடத்தில தமிழகம் (13%) உள்ளது.

நிதி கல்வியறிவு வாரம்:

 • இந்திய ரிசர்வ் வங்கி, ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை, “நிதி கல்வியறிவு வாரத்தை” (FINANCIAL LITERACY WEEK) அறிவித்துள்ளது
 • இந்த ஆண்டிற்கான கரு = CUSTOMER PROTECTION
 • இதன் நோக்கம் = வங்கி வாடிக்கையாளர்கள் இடையே வங்கி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

2-வது தெற்காசிய கூட்டம்:

 • ஆக்ஸ்போர்ட் பல்கக்லைகழக அச்சகம் சார்பில் 2-வது தெற்காசிய கூட்டம் (OXFORD UNIVERSITY PRESS 2ND SOUTH ASIA CONCLAVE) நடத்தப்பட்டது
 • பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற பல்வேறு பிரிவை சேர்ந்த பலர் இதில் பங்குபெற்றனர்

பிரான்ஸ் நாட்டின் “அறிவியலை ஊக்குவித்தல்” இயக்கத்தின் நல்லெண்ண தூதராக இந்தியப் பெண்:

 • அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க பிரான்ஸ் அரசு, “அறிவியலை ஊக்குவித்தல்” (ASSAM GIRL PRIYANKA DAS BECOMES AMBASSADOR OF “PROMOTE SCIENCE” INITIATIVE IN FRANCE) என்ற இயக்கத்தை நடத்துகிறது. இந்த இயக்கத்தின் தூதராக இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண்மணியான “பிரியங்கா தாஸ்” என்பவரை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது
 • இவர் பிரான்ஸ் நாட்டில் முனைவர் பட்டம் பெற கல்வி பயின்று வருகிறார்

இந்த ஆண்டின் சிறந்த தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் விருது:

 • தென்னாப்ரிக்க நாட்டின் சிறந்தாஹ் கிரிக்கெட் வீரர் விருது (SOUTHA FRICA’S CRICKETER OF THE YEAR), இந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாளரான “ககிசோ ராபாடா” அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • இவர் இவ்விருதை 2-வது முறையாக வெல்கிறார்

அணைத்து மாநில ஆளுநர்கள் கலந்துக் கொண்ட கருத்தரங்கம்:

 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்கள் கலந்துக்கொண்ட 49-வது கருத்தரங்கம், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது (49TH CONFERENCE OF GOVERNORS AND LT.GOVERNORS)
 • பல்வேறு மாநிலங்களின் விவகாரங்கள் இங்கு விவாதிக்கப்பட்டது

மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம்:

 • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் (STATE ENVIRONMENT MINISTERS CONFERENCE) கலந்துக்கொண்ட கருத்தரங்க கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது
 • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 25௦௦௦ டன் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகுவதாக தெரிவித்தார்

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு அந்த்யோதயா எக்ஸ்ப்ரெஸ் ரயில்:

 • வாரம் ஒருமுறை பயணிக்கும் வகையில், கொல்கத்தாவில் இருந்து புதிய அந்த்யோதயா எக்ஸ்ப்ரெஸ் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணிக்க உள்ளது (NEW ANTYODAYA EXPRESS TRAIN FROM KOLKATTA TO CHENNAI CENTRAL)
 • பதிவில்லா 2-தர இருக்கை பேட்டிகள் கொண்ட ரயில் இதுவாகும்

இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை:

 • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன், “இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை 2௦15” என்ற பெயரில அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
 • இதில் இந்தியாவின் காடுகளின் பரப்பளவு 2௦15ம் ஆண்டில் 21.34% உள்ளதாகவும், இது கடந்த 2௦௦9ம் ஆண்டை காட்டிலும் 1.29% அதிகமா உள்ளதாகவும் தெரிவித்தார்
 • ஒட்டுமொத்தமாக வனங்கள் மற்றும் மரங்களின் பரப்பளவு இந்தியாவில் 24.16% உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
 • மாநில பரப்பளவில் அதிக வனப் பரபளவு கொண்ட மாநிலமாக மேகலாயா உள்ளது
 • மிகவும் குறைந்த அளவு வன பரப்பளவு கொண்ட மாநிலம் = அஸ்ஸாம்
 • ஒட்டு மொத்தமாக அதிகளவு வனப் பரப்பளவு கொண்ட மாநிலம் = மத்தியப் பிரதேசம்

Leave a Comment