TNPSC Daily Current Affairs in Tamil 05 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil  05.06.201

“இப்சா” அமைச்சர்கள் கூட்டம்:

  • “இப்சா” (IBSA MINISTERIAL MEETING HELD AT PRETORIA, SOUTH AFRICA) எனப்படும் இந்தியா, பிரேசில் மாறும் தென் ஆப்ரிக்க நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துக்கொண்ட கூட்டம், தென் ஆப்ரிக்காவின் ப்ரெட்டோரியா நகரில் நடைபெற்றது
  • இக்கூட்டத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமை தாங்கினார

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

க்ரிஷி கல்யான் அபியான்:

  • மத்திய வேளாண்மை துறை அமைச்சகம், ஜூன் ௧ தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை “க்ரிஷி கல்யான் அபியான்” என்ற திட்டத்தை ஆர்வமுள்ள கிராமங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது
  • பிரதமரின் அறிவிப்பான 2௦22ம் ஆண்டிற்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

ஜன் அவ்சாத்தி சுவிதா:

  • மத்திய ரசாயின மற்றும் உரங்கள் துறை அமைச்சகம், “பிரதம மந்திரி பாரதிய ஜன்அவ்சாத்தி பரியோஜனா” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் “ஜன் அவ்சாத்தி சுவிதா” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது (JAN AUSHADHI SUVIDHA’- THE OXO-BIODEGRADABLE SANITARY NAPKIN UNDER THE PRADHAN MANTRI BHARTIYA JANAUSHADHI PARIYOJANA (PMBJP))
  • இத்திட்டத்தின் வழங்கப்படும் சானிட்டரி நாப்கின், காற்றின் மூலமே எளிதில் மக்கும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது
  • இந்த நாப்கின்களின் விலை ரூ. 2.5௦ மட்டுமே

ஜூன் 5 = உலக சுற்றுச்சூழல் தினம்:

  • ஜூன் 5ம் தேதி “உலக சுற்றுச்சூழல் தினம்” (WORLD ENVIRONMENT DAY) உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = BEAT PLASTIC POLLUTION
  • 43-வது உலக சுற்றுச்சூழல் தினத்தை, அணைத்து நாடுகளின் சார்பாக “இந்தியா” (INDIA IS THE HOST NATION FOR 43RD WORLD ENVIRONMENT DAY) தலைமை ஏற்று இந்நிகழ்ச்சியை நடத்தியது

நீலக் கொடி தரச்சான்றை பெற்ற ஆசியாவின் முதல் கடற்கரை:

  • நீலக் கொடி தரச்சான்றை பெற்றுள்ள ஆசியாவின் முதல் கடற்கரை என்ற சிறப்பை, ஓடிஸா மாநிலத்தின் கோனார்க் கடல் பகுதியில் உள்ள “சந்திரபகா கடற்கரை” பெற்றுள்ளது (THE CHANDRABHAGA BEACH ON THE KONARK COAST OF ODISHA HAS BECOME THE ASIA’S FIRST BEACH TO GET THE BLUE FLAG CERTIFICATION)
  • தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க கடற்கரைகளுக்கு இந்த தரச்சான்று வழங்கப்படுகிறது

கோயம்புத்தூர் இளைஞருக்கு தேசிய கோபால் ரத்னா விருது:

  • மத்திய அரசின் சார்பில் சிறந்த கால்நடை பராமரிப்பிற்காக வழங்கப்படும் “தேசிய கோபால் ரத்னா விருது” (DHIRAJ RAM KRISHNA, A YOUNG ENGINEER FROM COIMBATORE, HAS WON THE ‘NATIONAL GOPAL RATNA’ AWARD FROM THE CENTRAL GOVERNMENT), இந்த ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான “திரஜ் ராம் கிருஷ்ணா” என்பவருக்கு வழங்கப்பட்டது

அதிக மதிப்பு மிக்க வீரர்:

  • 2018 எல்லையில்லா ஆசிய கூடைப்பந்து போட்டியில், “அதிக மதிப்புமிக்க வீரர் விருது” (SANJANA RAMESH HAS WON THE ‘MOST VALUABLE PLAYER’ (MVP) AWARD AT THE BASKETBALL WITHOUT BORDERS ASIA 2018) சிறப்பை இந்தியாவை சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை “சஞ்சனா ரமேஸ்” பெற்றுள்ளார்

“வடகிழக்கில் தயாரிப்போம்” இயக்கம்:

  • மத்திய அரசின் “இந்தியாவின் தயாரிப்போம்” (MAKE IN INDIA) திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வடகிழக்கு வளர்ச்சி துறை, வடகிழக்கு மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் “வடகிழக்கில் தயாரிப்போம்” (MAKE IN NORTH EAST INITIATIVE) என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது
  • வடகிழக்கு மாநிலங்கள் மொத்தம் = 8
  • இதில் சிக்கிம் மாநிலம், “இந்தியாவின் கரிம இயற்க்கை மாநிலம்” (ORGANIC STATE OF INDIA) என்றும், மிசோராம் மாநிலம் “இந்தியாவின் மூங்கில் மாநிலம்” (BAMBOO STATE OF INDIA) என்றும், மணிப்பூர் மாநிலம் “இந்தியாவின் ஜவுளி மாநிலம்” (TEXTILES STATE OF INDIA) என்றும் அழைக்கப்படுகிறது

ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு:

  • ஜம்மு கஷ்மீர் அரசு, அம்மாநிலத்தின் “முதல் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை” (FIRST GLOBAL INVESTORS MEET) வருகின்ற ஜூலை மாதம் நடத்த உள்ளது
  • அம்மாநிலத்தின் நீர் மின்சார உற்பத்தியில் தொழில் முதலீட்டை ஈர்க்க இம்மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது:

  • உலகின் பெண்கள் வாகனம் ஓட்ட தடை விதித்துள்ள ஒரே நாடான சவுது அரேபியாவில் (SAUDI ARABIAGAVE AWAY ITS FIRST BATCH OF DRIVING LICENSES TO WOMEN AFTER DECADES LONG BAN), நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவின் இளவயது எழுத்தாளர்:

  • அஸ்ஸாம் மாநிலதி வடக்கு மாவட்டமான லக்மிபூரை சேர்ந்த “அயன் கோகை கோஹைன்” (AYAN GOGAI GOHAIN), “இந்தியாவின் மிக இளவயது எழுத்தாளர்” (YOUNGEST AUTHOR OF INDIA) என்ற சிறப்பை பெற்றுள்ளார்
  • இச்சிறுவனின் வயது = 4 (நான்கு)
  • “HONEYCOMB” என்ற பெயரில் இச்சிறுவன் எழுதிய புத்தகம், ஜனவரி மாதம் வெளியானது

யோகாவிற்கான 3-வது தேசிய உடல்நலக் கருத்தரங்கம்:

  • புது தில்லியில், மொராஜி தேசாய் தேசிய யோகா கழகம் (MORAJI DESAI NATIONAL INSTITUTE OF YOGA) மற்றும் ஆயுஸ் அமைச்சகம் இணைந்து “யோகாவிற்க்காண 3-வது தேசிய உடல்நலக் கருத்தரங்கம்” (3RD NATIONAL HEALTH EDITOR’S CONFERENCE ON YOGA) நடத்தின

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை ஆளுநர்:

  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக எம்.கே.ஜெயின் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (MK JAIN, NEW DEPUTY GOVERNOR OF RESERVE BANK OF INDIA)
  • இதற்கு முன்னர் இப்பதவியில் இருந்தவர், எஸ்.எஸ்.முந்த்ரா ஆவார்

பசிபிக் பெருங்கடலை நீந்தி கடக்க முயலும் உலகின் முதல் நீச்சல் வீரர்:

  • பிரெஞ்ச் நாட்டினை சேர்ந்த “பென் லெகோம்ட்” என்பவர் ஜப்பானில் இருந்து பசிபிக் பெருங் கடல் வழியாக அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியை நீந்தி கடக்க முயற்சி மேற்கொண்டுள்ளார் (BEN LECOMTE A FRENCH SWIMMER HAS SET OFF FROM JAPAN AIMING TO BECOME THE FIRST PERSON TO SWIM ACROSS THE PACIFIC OCEAN)
  • நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் நீந்தி, சுமார் 8850 கிலோமீட்டரை சுமார் 6 மாத காலத்தில் நீந்தி உலகின் முதல் வீரர் என்ற சிறப்பை படைக்க உள்ளார்
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.