TNPSC Daily Current Affairs in Tamil 06 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 06.06.2018

தேர்தல் ஆணையத்தின் “தகவல் அறியும் இணையதள வசதி”:

            

 • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்தல் தொடர்பான தகவல்களை பெற தேர்தல் ஆணையம் “இணையதள வழியாக தகவல் பெறும்” (ELECTION COMMISSION’S RTI PORTAL) வசதியை அறிமுகம் செய்துள்ளது
 • இதற்கான இணையதள முகவரி = RTI.ECI.NIC.IN
 • தற்போதய தலைமை தேர்தல் அதிகாரி, ஓம் பிரகாஷ் ராவத் ஆவார்

விராத் கோலி – இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் வீரர்:

 • பிரபல போர்ப்ஸ் இதழ் உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது
 • இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராத் கோலி 83-வது இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் இவர் தான்
 • இவரின் ஆண்டு வருமானம் 24 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்

உத்திரகாண்டு மாநிலத்தில் பாலீத்தீன் பைகளுக்கு தடை:

 • உத்தரகாண்ட் மாநிலத்தில், வரும் ஜூலை 31ம் தேதி முதல் பாலீத்தீன் பைகள் மற்றும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
 • உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, டேராடூன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இது அறிவிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் பொது அவையின் 73-வது புதிய தலைவர்:

 • ஐக்கிய நாடுகள் பொது அவையின் (UNGA – UNITED NATIONS GENERAL ASSEMBLY) 73-வது புதிய தலைவராக, ஈக்குவேடார் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் “மரியா பெர்னாண்டா எச்பிநோசா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • இவர் இப்பதவியில் அமரும் நான்காவது பெண்மணி ஆவார்
 • லட்டின் அமெரிக்க நாட்டினை சேர்ந்த முதல் பெண் தலைவர் இவராவார் (1st Latin American woman President)
 • 1953ம் ஆண்டு இந்தியாவின் விஜயலட்சுமி பண்டிட், இவ்வையின் தலைவராக இருந்துள்ளார்

தென்னாப்ரிக்காவில் திரையிடப்பட்ட மகாத்மா காந்தியின் “வாழ்க்கை வரலாறு” படம்:

 • தென்னாப்ரிகாவின் பீட்டர்மரித்ஸ்பர்க் நகரில், மகாத்மா காந்தியின் 125-வது ஆண்டு விழாவில், அவரின் வாழ்க்கை வரலாறு “MAKING OF THE MAHATMA” என்ற பெயரில் படமாக திரையிடப்பட்டது
 • 1893ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி, வெள்ளையர்களால் ரயிலில் இருந்து காந்தி இறக்கி விடப்பட்ட தினத்தை, நினைவு கூறும் வகையில் இவ்விழா நடைபெற்றது
 • இப்படத்தை இயக்கியவர் = ஷியாம் பெனகல்
 • மறைந்த சுதந்திர போராட்ட வீராங்கனையான “பாத்திமா மீர்” என்பவர் எழுதிய என்ற “APPRENTICESHIP OF A MAHATMA” நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது

முன் குழந்தைப்பருவ வளர்ச்சிக்கான ஆசிய – பசிபிக் வட்டாரக் கருத்தரங்கம்:

 • முன் குழந்தைப் பருவ வளர்ச்சிக்கான ஆசிய – பசிபிக் வட்டாரக் கருத்தரங்கம் 2018, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது (THE ASIA-PACIFIC REGIONAL CONFERENCE ON EARLY CHILDHOOD DEVELOPMENT (ECD))
 • மேலும், “முன்பருவ குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்விக்கான 3-வது ஆசிய – பசிபிக் வட்டார கொள்கை கூட்டம்” (THIRD ASIA- PACIFIC REGIONAL POLICY FORUM ON EARLY CHILDHOOD CARE AND EDUCATION (ECCE)) நடைபெற்றது

மலேசியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவழி வழக்கறிஞர்:

 • மலேசிய நாட்டின் புதிய அட்டர்னி ஜெனரலாக, இந்திய வம்சாவழியை சேர்ந்த “டாமி தாமஸ்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
 • இப்பதவியில் அமரும் முதல் மலேசியர் மற்றும் முஸ்லிம் அல்லாத முதல் நபர் இவராவார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் 

 • ஸ்காட்லாந்து நாட்டின் ஓர்க்லே தீவு பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம், நீருக்கடியில் தகவல் மையத்தை நிறுவி உள்ளது (MICROSOFT’S UNDERWATER DATA CENTRE)
 • 40 அடி நீளமுள்ள இந்த தகவல் சேகரிப்பு பெட்டகம், கடலுக்கு அடியில் 117 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது
 • இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் “ப்ராஜக்ட் நாடிக்” (PROJECT NATICK) என்பதின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது

உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்:

 • போர்ப்ஸ் நிறுவனம் வெளிட்டுள்ள உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில், முதல் இடத்தில பிரபல குத்துச்சண்டை வீரரான, “பிளாயிட் மேவெதர்” (FLOYD MAYWEATHER, WORLD’S HIGHEST PAID ATHLETE) உள்ளார்
 • இவரின் ஆண்டு வருமானம், 285 மில்லியன் அமெரிக்க டாலராகும்
 • இவர் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆப்பிள் வடிவமைப்பு விருது 2018:

 • பிரபல ஆப்பிள் நிறுவனம் நடத்திய போட்டியில், சென்னையை சேர்ந்த “கால்சி 3“ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் “ஆப்பிள் வடிவமைப்பு விருது 2018”-ஐ (APPLE DESIGN AWARD 2018) வென்றது
 • இப்போட்டியில் வென்ற 9 நிறுவனங்களில் இது மட்டுமே இந்திய நிறுவனம் ஆகும்

விமான ஓடுதளத்தில் தேசிய நெடுஞ்சாலையை கொண்டுள்ள இந்தியாவின் முதல் விமான நிலையம்:

 • உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள லால்பகதூர் சாஸ்த்ரி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில், தேசிய நெடுஞ்சாலை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது
 • விமான ஓடுபாதையில், தேசிய நெடுஞ்சாலை பாதையும் கொண்டுள்ள இந்தியாவின் முதல் விமான நிலையம் இதுவாகும்

இந்தியாவின் முதல் கண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி:

 • இந்தியாவின் முதல் கண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்பை, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த “ப்ரஞ்சல் பாட்டில்” (Pranjal Patil becomes 1st visually-challenged woman IAS officer) பெற்றுள்ளார்
 • இவர் கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்

தமிழகத்தில் 2௦19ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:

 • ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழக முதல்வர் அவர்கள், வருகின்ற 2௦19ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தடை பொருந்தும்

வட கொரிய அதிபரை சந்தித்த உலகின் முதல் தலைவர் – சிரியா அதிபர்;

 • வட கொரிய அதிபராக கிம் ஜோங் அன் பதவி ஏற்ற பிறகு, அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டு அதிபர் என்ற சிறப்பை, சிரியா அதிபர் பசர்-அல் அசாத் பெற்றுள்ளார்.
 • இவர் வடகொரிய அதிபராக 2௦11ம் ஆண்டு பொறுப்பேற்றார்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் “ஹெலி-டாக்சி” சேவை வசதி:

 • ஹிமாச்சலப் பிரதேச முதல்வர், சிம்லா நகரில் இருந்து சண்டிகர் நகருக்கு “ஹெலிக்கொப்டர் டாக்சி” சேவை வசதியை துவக்கி வைத்தார் (HELICOPTER TAXI SERVICE THAT WILL REDUCE THE TRAVEL TIME BETWEEN SHIMLA AND CHANDIGARH TO 20 MINUTES)
 • இந்த சேவை மூலம் 3.5 மணி நேர பயணம், சுமார் 2௦ நிமிடங்களில் முடியும்

இந்தியாவின் முதல் தானியங்கி வாகன மறுசுழற்சி வசதி மையம்:

 • பழைய பயனற்ற வாகனங்களை மறுசுழற்சி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரும், “இந்தியாவின் முதல் தானியங்கி வாகன மறுசுழற்சி வசதி மையம்” (INDIA’S FIRST AUTOMATED AND ORGANISED VEHICLE SCRAPPING AND RECYCLING FACILITY) கிரேட்டர் நொய்டா பகுதியில் அமைய உள்ளது

 

Leave a Comment