TNPSC Daily Current Affairs in Tamil 07 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 07.06.2018

குழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம்:

 • இந்திய பதிவுத்துறை ஜெனரல் அவர்கள், இந்தியாவில் குழந்தை பிறப்பு நிலையில் தாய்மார்கள் இறப்பு நிலையில், இந்தியா பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்
 • தாய்மார்கள் இறப்பு விகிதம் என்பது 1௦௦௦௦௦ குழந்தை பிறப்புகளில் தாய் இறக்கும் நிலையை குறிப்பதாகும்
 • உலக அளவில் தாய்மார்கள் இறப்பு விகிதம், 199௦ம் ஆண்டுகளில் 385 ஆக இருந்தது. அது 2௦15ம் ஆண்டில் 216 ஆக குறைந்து, 25 வருடங்களில் சுமார் 44% அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது
 • இந்தியாவில் 2௦11-12ம் ஆண்டுகளில் தேசிய அளவில் 167 ஆக இருந்த விகிதம், தற்போது 13௦ ஆக குறைந்துள்ளது. இது சுமார் 22% அளவிற்கு குறைப்பாகும்.
 • முதல் 3 இடங்களில் உள்ள மாநிலம் = கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு
 • இறுதி 3 இடங்களில் உள்ள மாநிலம் = ராஜஸ்தான், உ.பி/உத்தரகாண்ட் மற்றும் அஸ்ஸாம்
 • தமிழகம் 2௦11-12ம் ஆண்டுகளில் 79 ஆக இருந்த விகிதம் தற்போது 66 ஆக குறைத்துள்ளது

பொது கடன் பதிவேடு:

 • வங்கிகளில் கடன் பெரும் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய புதிய “பொது கடன் பதிவேடு” (PUBLIC CREDIT REGISTRY) என்ற முறையை இந்திய ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது
 • இந்த நடவடிக்கை, “ஒய்.எஸ். தியோச்தாலே” குழுவின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது

11-வது புவி-நுண்ணறிவு ஆசியா 2018 கூட்டம்:

 • 11-வது புவி – நுண்ணறிவு ஆசியா 2018 (11TH GEO – INTELLIGENCE ASIA 2018) நிகழ்ச்சியின் கூட்டம், புது தில்லியில் உள்ள மானக்ஸா மையத்தில் நடைபெற்றது
 • இக்கூட்டத்திற்கான கரு = GEOSPATIAL : A FORCE MULTIPLIER FOR DEFENCE AND INTERNAL SECURITY
 • புவி நிலப்பரப்பு துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டுவருவதே இதன் முக்கிய நோக்கமாகும்

தானாக செயலிழக்கும் ஊசிகளை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலம்:

 • ஊசிகள் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை தடுக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்திய ஊசியை, மீண்டும் பயன்படுத்த முடியாத தானாக செயலிழக்கும் ஊசிகளை (ANDHRA PRADESH, FIRST STATE IN INDIA TO LAUNCH AUTO DISABLE SYRINGES), இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திரப் பிரதேச மாநிலம் அறிமுகம் செய்துள்ளது
 • ஜூலை 28, உலக ஈரல் அழற்சி நோய் தினத்தில் இருந்து இதனை முழுமையாக செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது

பாபா கல்யாணி குழு:

 • இந்தியாவில் “சிறப்பு பொருளாதார மண்டல” (SPECIAL ECONOMIC ZONE POLICY OF INDIA) கொள்கைகளை ஆராய, மத்திய அரசு பிரபல பாரத் போர்ஜ் நிறுவன தலைவர் பாபா கல்யாணி தலைமையில் சிறப்பு குழு ஒன்றினை அமைத்துள்ளது
 • சிறப்பு பொருளாதார மண்டல கொள்கைகள் மூலம், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப இந்திய பொருளாதார ஏற்றுமதியை ஊக்குவிக்க இக்குழு பரிந்துரை மேற்கொள்ளும்

பியோகோ எரிமலை:

 • கவுதமாலா நாட்டில் உள்ள பியோகோ எரிமலை (FEUGO VOLCANO IN GAUTEMALA), வெடித்ததில் அந்நாட்டினை சேர்ந்த சுமார் 1௦௦க்கும் மேற்பட்டோர் இறந்தனர்
 • அந்நாட்டில் ஏற்பட்ட மோசமான எரிமலை வெடிப்பு நிகழ்வு இதுவாகும்

சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி வாழ்நாள் சாதனையாளர் விருது:

 • தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல் இந்தி நடிகர் அனுபம் கேர் அவர்களுக்கு வழங்கப்பட்டது (IIFA Lifetime Achievement award at the 19th edition of International Indian Film Academy (IIFA-2018))
 • இவர் பல மொழிகளில் சுமார் 5௦௦ படங்களுக்கு மேல் நடித்துள்ளார்

உலக பல்கலைக்கழக தரவரிசை:

 • கியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை (QS WORLD UNIVERSITY RANKINGS) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள சிறந்த 1௦௦௦ பல்கலைக்கழகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன
 • இதில் கடந்த ஆண்டு 2௦ ஆக இந்திய பல்கலைக்கழக எண்ணிக்கை, இந்த ஆண்டு 24 ஆக அதிகரித்துள்ளது
 • முதல் 2௦௦ இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை, பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம் (162-வது இடம்), பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (17௦-வது இடம்), டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (172-வது இடம்)

உலக அமைதி குறியீடு 2018;

 • 2018ம் ஆண்டிற்கான உலக அமைதிக் குறியீடு (WORLD PEACE INDEX 2018) வெளியிடப்பட்டுள்ளது.
 • இதில் முதல் இடத்தில, “ஐஸ்லாந்து” நாடு உள்ளது.
 • கடைசி இடத்தில, ‘சிரியா” உள்ளது
 • இப்பட்டியலில் இந்தியா “136-வது இடத்தை” பிடித்துள்ளது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது:

 • இந்தியக் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு “சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்” (BCCI’S BEST INTERNATIONAL CRICKETER) விருது வழங்கப்பட்டது
 • சிறந்த வீரர் (ஆண்) = விராத் கோலி (2016 -17, 2017 – 18)
 • சிறந்த வீராங்கனை = ஹர்மன்ப்ரீத் கவுர் (2016 – 17)
 • சிறந்த வீராங்கனை = ஸ்ம்ரிதி மந்தனா (2017 – 18)

மும்பை விமான நிலையம், 24 மணி நேரத்தில் 1௦௦3 விமான சேவைகளை வழங்கி புதிய உலக சாதனை:

 • உலகின் அதிக விமான போக்குவரத்து மிக்க ஒற்றை ஓடுதள விமான நிலையமான மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையம், 24 மணி நேரத்தில் சுமார் 1௦௦3 விமானங்களை இறக்கி மீண்டும் அனுப்பி சாதனை படைத்துள்ளது. தனது முந்தைய உலக சாதனையை மீண்டும் இந்த விமான நிலையமே முறியடித்துள்ளது

உலகின் முதல் ஐரோப்பிய அழுத்த அணுமின் ஆலை சீனாவில் செயல்பாட்டிற்கு வந்தது:

 • உலகின் முதல் ஐரோப்பிய தொழில்நுட்ப அழுத்த அணுமின் ஆலை சீனாவின் தைசான் பகுதியில் செயல்பாட்டிற்கு வந்தது (World’s first European Pressurized Reactor (EPR) nuclear reactor started its operations in Taishan , in Southern China)
 • இது 3-ம் தலைமுறை தொழில்நுட்ப அணு ஆலை ஆகும்

டி-2௦ கிரிக்கெட் போட்டிகளில் 2௦௦௦ ரன்களை அடித்த முதல் இந்திய வீராங்கனை:

 • சர்வதேச டி-2௦ கிரிக்கெட் போட்டிகளில் 2௦௦௦ ரன்களை அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்
 • இலங்கைக்கு எதிரான போட்டியின் அவர் 2௦௦௦ ரன்களை கடந்தார்
 • 2௦௦௦ ரன்களை கடந்த உலகின் 7-வது வீராங்கனை இவராவார்.

Leave a Comment