TNPSC Daily Current Affairs in Tamil 08 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 08 June 2018

ஜூலை 8 = உலக பெருங்கடல் தினம்:

 • உலகம் முழுவதும் ஜூன் மாதம் 8ம் தேதி, “உலக பெருங்கடல் தினம்” (WORLD OCEANS DAY) கடைபிடிக்கப்படுகிறது
 • பெருங்கடல்களில் ஏற்படும் மாற்றத்தால் உலக வெப்பநிலை அதிகரித்தல் போன்றவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இந்நாளின் நோக்கமாகும்
 • இந்த ஆண்டிற்கான கரு = Preventing Plastic Pollution And Encouraging Solutions For A Healthy Ocean
 • இந்த கரு, உலக சுற்றுச்சூழல் தின கருவோடு தொடர்புடையது ஆகும்

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஜம்மு காஸ்மீர் மாநிலத்திற்கு கூடுதலாக 5 பட்டாலியன் போலிஸ் படை:

 • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏதுவாக அங்கு கூடுதலாக 5 போலிஸ் பட்டலியன் படை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 • இதில் 6௦% காஸ்மீர் எல்லையோர இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்
 • இதில் சுமார் 5௦௦௦ பணியிடங்கள் உருவாக்கப்படும்

தூய்மை பாரத இயக்கம்:

 • ஊரகப் பகுதிகளில் தூய்மை பகுதிகளாக மாற்றப்பட்ட அளவு, தற்போது இந்தியாவில் 85% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
 • ஊரகப் பகுதிகளில் சுமார் 93.4% அளவிற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐ.சி.ஜி.எஸ் சி 439 – புதிய கடலோர காவல் படை கப்பல்:

 • இந்தியக் கடலோர காவல் படையில் புதிதாக ஐ.சி.ஜி.எஸ் சி 439 என்ற அதிநவீன இடைமறித்து தாக்கும் கப்பல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இது மும்பை நகர கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது
 • இதன 45 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது

நிஸ்டர் நடவடிக்கை:

 • ஏமன் நாட்டின் சொகோத்ரா தீவுகளில் ஏற்பட்ட புயலில் தஞ்சமடைந்த இந்தியர்களை மீட்க, இந்திய கடற்படை மேற்கொண்ட, “நிஸ்டர் நடவடிக்கை” மூலம் அங்கிருந்து 38 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு குஜராத்தின் போர்பந்தர் துறைமுகம் வந்தடைந்தனர்
 • இந்த மீட்பு நடவடிக்கையில் “ஐ.என்.எஸ் சுனன்யா” என்ற இந்திய கடற்படை கப்பல் ஈடுபடுத்தப்பட்டது

ராணுவ தளவாட கொள்முதல் குழு:

 • மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான “ராணுவ தளவாட கொள்முதல் குழு”, 55௦௦ கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளித்துள்ளது
 • ராணுவ தேவைகளில் தன்னிறைவு பெற ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 • இதில் அதிநவீன ரேடார்கள், புதிய வகை ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படும்

திரிபுரா மாநிலப் பழம் =  ராணி அண்ணாச்சி பழம்:

 • திரிபுரா மாநிலத்தின் அதிகாரப் பூர்வ பழமாக, “ராணி அன்னாசிப்பழம்” (QUEEN PINEAPPLE – STATE FRUIT OF TRIPURA) குடியரசுத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டது
 • இந்தியாவில் அதிகளவு அன்னாசிப்பழம் விளையும் மாநிலம் திரிபுரா ஆகும். அங்கு சுமார் 1௦௦க்கும் மேற்பட்ட ரகங்களில் அன்னாசிப்பழம் விழைகிறது
 • இப்பழம் “புவிசார் குறியீட்டை” (GI – GEOGRAPHICAL INDICATION) ஏற்கனவே பெற்றுள்ளது குறிபிடத்தக்கது

ஆசிய ஜுனியர் தடகள சாம்பியன்சிப் போட்டியில் தங்கம்:

 • ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்று வரும் 2018 ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்சிப் (2018 ASIA JUNIOR ATHLETICS CHAMPIONSHIP) போட்டிகளில் முதல் நாளில், இந்தியாவின் ஆசிஸ் ஜகார், 2௦ வயதுக்கு உட்பட்டோருக்கான “சங்கிலி குண்டு எறிதல்” (HAMMER THROW) போட்டியில் தங்கம் வென்றதுடன் புதிய ஆசிய சாதனையும் படைத்தார்
 • 86 மீட்டர் அளவிற்கு குண்டை எறிந்து சாதனை படைத்தார்

பாலி உம்ரிகர் விருது:

 • இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாளி உம்ரிகர் விருதை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி பெற்றார்
 • 2016 – 17 மற்றும் 2017 – 18ம் வருடத்திற்கான 2 வருட விருதையும் இவர் பெற்றார்

கறிவேப்பிலை செடி வழங்கி புதிய உலக சாதனை:

 • கேரள மாநிலத்தை சேர்ந்த “சுதீஷ் குருவாயூர்” என்ற விவசாயி அரேபியாவின் சார்ஜா நகரில், இயற்கை முறையில் வளரப்பட்ட 4914 கறிவேப்பிலை செடிகளை பொது மக்களுக்கு வழங்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் (Sudheesh Guruvayoor, an Indian farmer from Kerala, has set a Guinness World Record by distributing the largest number of curry tree saplings in Sharjah)
 • இதற்கு முன்னர் குரு நானக் தர்பார் குருத்வாரா அமைப்பால் டெல்லி தனியார் பள்ளிக்கு 2083 கறிவேப்பிலை செடி வழங்கியது சாதனையாக இருந்தது
 • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சார்ஜா நகரில் தனக்கு சொந்தமான பண்ணையில் இருந்து, அங்குள்ள இந்திய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இதனை சுதீஷ் குருவாயூர் வழங்கினார்

மண்டேலா – காந்தி இளையோர் கருத்தரங்கம்:

 • “மண்டேலா – காந்தி இளையோர் கருத்தரங்கம்” (MANDELA – GANDHI YOUTH CONFERENCE), தென்னாப்ரிக்காவின் பீட்டர்மரித்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது
 • காந்தி, தென்னாப்ரிக்காவில் இருந்த போது வெள்ளையர்களால் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட தினத்தின் (ஜூன் 7, 1893) 125-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது

செம்பு – வெண்கல காலத் தேர் கண்டுபிடிப்பு:

 • இந்தியத் தொல்பொருள் துறையினர், “செம்பு மற்றும் வெண்கல காலத் தேரினை” (COPPER – BRONZE AGE CHARIOT) கண்டுபிடித்துள்ளனர்
 • பழைய காலத் தேர் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்
 • இது பாக்பத் நகர் அருகே உள்ள “சனவ்ளி கிராமத்தில்” கிடைத்துள்ளது

ஜூன் 8 = உலக மூளை கட்டி நோய் தினம்:

 • ஜூன் 8ம் தேதி, உலக மூளை கட்டி நோய் தினம் (WORLD BRAIN TUMOR DAY) அனுசரிக்கப்படுகிறது
 • மூளை கட்டி, மூளையின் செல்களில் ஏற்படுகிறது. இந்த கட்டி செல்கள் கனகற்று வளர்கிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரிகளில் செமஸ்டர் முறை தேர்வு ரத்து:

 • ஹிமாச்சலப் பிரதேச அரசு, அம்மாநில கல்லூரிகளில் செமஸ்டர் முறை தேர்வுகளை ரத்து செய்து, ஆண்டு முறை தேர்வினை கொண்டுவந்துள்ளது
 • அம்மாநிலத்தில் 2௦13ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “:ரூசா”, திட்டத்தினை ஆய்வு செய்து வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவை ஹிமாச்சலப் பிரதேச அரசு எடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published.