TNPSC Daily Current Affairs in Tamil 09 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil  09.06.2018

வெளிநாட்டு நேரடி அந்நிய முதலீடு:

 • 2017 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் நேரடி வெளிநாட்டு அந்நிய முதலீடு (FDI – FOREIGN DIRECT INVESTMENT) சுமார் 61.96 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DIPP – DEPARTMENT OF INDUSTRIAL POLICY AND PROMOTION) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • கடந்த நிதியாண்டில் நேரடி முதலீடு 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்
 • பெரும்பாலும் சேவைத்துறையில் இருந்து அதிக முதலீடுகள் கிடைத்துள்ளது

தனுஷ் பீரங்கி:

 • இந்தியாவின் முதல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் தாக்கும் பீரங்கியான தனுஷ் (LONG RANGE ARTILLERY GUN DHANUSH) ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் பகுதியில் தனது இறுதி கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்தது.
 • விரைவில் தனுஷ் பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும். சிக்கிம் மற்றும் லே பகுதிகளில் கடுமையான குளிர் சூழ்நிலையில் சோதிக்கப்பட்டது. அதேபோல் பாலோசொர் பகுதியில் கடும் வெப்ப சூழ்நிலையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
 • தனுஷ் பீரங்கி கொல்கத்தாவின் ஆயுத தயாரிப்பு வாரிய தொழிற்சாலையில் (OFB – ORDNANCE FACTORY BOARD) உருவாக்கப்படுகிறது இதன் தாக்கும் தூரம் 40 கிலோ மீட்டர் ஆகும்

பெர்ன் மாநாடு:

 • பெர்ன் பிரகடனத்தின் (BERNE CONVENTION) இலக்கிய மற்றும் கலை படைப்புகள் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா கொண்டு வந்த அறிக்கையினை உலக அறிவுசார் உடைமை கழகம் (WIPO – WORLD INTELLECTUAL PROPERTY ORGANISATION) வெளியிட்டது.
 • இந்த பிரகடனம் 2018 மார்ச் 28 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இது 2024 அக்டோபர் பத்தாம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
 • 1928 இம் ஆண்டு இந்தியா பெர்ன் உடன்படிக்கையில் உறுப்பினராக இணைந்தது

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய 5 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள்:

 • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNITED NATIONS SECURITY COUNCIL’S NON PERMANENT MEMBERS) நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தென்னாபிரிக்கா, இந்தோனேஷியா, டொமினிக்கன் குடியரசு, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த நாடுகள் உறுப்பினர்களாக செயல்படும். இப் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
 • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாகும்

நட்பு பதக்கம்:

 • சீனா அந்நாட்டின் மிக உயரிய “நட்பு பதக்கத்தை” (FRIENDSHIP MEDAL) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
 • சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் சீன அதிபர் இந்த பதக்கத்தை ரஷ்ய அதிபருக்கு வழங்கினார்.
 • 2015ஆம் ஆண்டு நட்பு பதக்கம் உருவாக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தற்போது தான் இது வழங்கப்பட்டுள்ளது

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறையின் புதிய தலைவர்:

 • மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறையின் (CBIC – CENTRAL BOARD OF INDIRECT TAXES AND CUSTOMS) புதிய தலைவராக திரு எஸ் ரமேஷ் அவர்களை மத்திய கேபினட் நியமனக் குழு நியமித்துள்ளது.
 • தற்போதைய தலைவரான வனஜா அவர்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

18-வது ஷாங்காய் கூட்டமைப்பு ஒத்துழைப்பு மாநாடு – க்விங்டாவ் பிரகடனம்:

 • பதினெட்டாவது சாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் (SHANGHAI COOPERATION ORGANISATION SUMMIT) இறுதியில் க்விங்டாவ் பிரகடனம்” (QINGDAO DECLARATION) வெளியிடப்பட்டது.
 • ஷாங்காய் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இப் பிரகடனத்தை வெளியிட்டனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார்.
 • க்விங்டாவ் பிரகடனம், தீவிரவாதத்தை அடுத்த மூன்றாண்டுகளுக்கு கூட்டமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்கும் வகையில் இப்பிரகடனம் வெளியிடப்பட்டது

மலபார் 2018:

 • பிலிப்பைன்ஸ் கடல் அருகே உள்ள குவாம் கடற்கரை பகுதியில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்ச்சியான “மலபார் 2018(EXERCISE MALABAR 2018) நடைபெற்றது.
 • தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்:

 • நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி டப்ளின் நகரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 490 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தனர்.
 • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிகபட்ச ரன் எண்ணிக்கை இதுவாகும்
 • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஆண்கள் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் 444 ஆகும். இது இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்தது. பெண்கள் கிரிக்கெட் போட்டியின் அதிகபட்ச ஸ்கோராக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அடித்த 455 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது

பெண்கள் பரிசு:

 • இங்கிலாந்து நாட்டில் பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சிறந்த கற்பனை படைப்பிற்கான “பெண்கள் விருது” (WOMEN’S PRIZE FOR FICTION), இந்த ஆண்டு “கமிலா ஷாம்சி” (KAMILA SHAMSIE) அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • அவரின் “HOME FIRE” என்ற புத்தக படைப்பிற்காக, இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது

Leave a Comment

Your email address will not be published.