TNPSC Daily Current Affairs in Tamil 10 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 10.06.2018

கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த இந்தியாவின் சுனில் சேத்ரி:

 • தற்போது கால்பந்து விளையாடி வரும் வீரர்கள் பட்டியலில் அதிக கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை, இந்தியாவின் சுனில் சேத்ரி பெற்றுள்ளார்(second highest international goal scorer among active players along with Argentine superstar footballer Lionel Messi)
 • முதல் இடத்தில அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி உள்ளார். இவர்124 போட்டிகளில்64 கோள்களை அடித்துள்ளார்
 • சுனில் சேத்ரி, 102 போட்டிகளில்64 கோள்களை அடித்து, லியோனல் மெஸ்சியை சமன் செய்துள்ளார்
 • மகராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடரில் கென்யா அணிக்கு எதிராக இவர்தனது64-வது கோளினை அடித்துள்ளார்

11-வது உலக இந்தி மாநாடு:

 • வரும் ஆகஸ்ட் மாதம் “11-வது உலக ஹிந்தி கருத்தரங்கம்” (11TH WORLD HINDI CONFERENCE), மொரிசியஸ் நாட்டால் அந்நாட்டின் தலைநகர் போர்ட் லோயிஸ் நகரில் நடத்தப்பட உள்ளது
 • மொரிசியஸ் அரசும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்த உள்ளன
 • இம்மாநாட்டின் கரு = “Vaishvik Hindi AurBharatiySanskriti”
 • முதல் உலக இந்தி கருத்தரங்கம், மகராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது
 • 10-வதுஉலக இந்தி கருத்தரங்கம், 2015ம் ஆண்டு மதியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்றது

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையர்:

 • மத்திய கண்காணிப்பு ஆணையத்தின்(CVC – CENTRAL VIGILANCE COMMISSION) புதிய ஆணையராக,“சரத் குமார்” அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்துள்ளார்
 • சரத் குமார் அவர்கள், தேசிய விசாரணை ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்
 • இவர்அடுத்தநான்குஆண்டுகள்அல்லதுதனது65 வயதுவரைஇப்பதவியில்இருப்பார்
 • “சந்தானம் குழுவின்” (SANTHANAM COMMITTEE) பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பிப்ரவரி1964ல் மத்திய கண்காணிப்பு ஆணையத்தை அமைத்தது

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பொறுப்புதலைவர்:

 • யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC – UNION PUBLIC SERVICE COMMISSION) புதிய பொறுப்பு தலைவராக “அர்விந்த் சக்சேனா” அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது
 • இவர் வருகின்ற ஜூன் 20ம் தேதி முதல் தனது பொறுப்புகளை ஏற்பார்
 • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் “விதி 315”(ARTICLE 315), மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் தோற்றுவித்தல் பற்றி கூறுகிறது
 • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் “விதி 316”(ARTICLE 316), மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் நியமனம் தொடர்பானது ஆகும்

இந்தியாவின் முதல் உள்நாட்டு லித்தியம் அயான் பேட்டரி திட்டம்:

 • இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் முதல் லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பு திட்டம்(INDIA’S FIRST INDIGENOUS LITHIUM ION BATTERY PROJECT)துவக்க மத்திய அறிவியல் மற்றும் தொழிலாக ஆராய்ச்சி கவுன்சில்(CSIR – COUNCIL FOR SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH), ராசி சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
 • இந்த ஒப்பந்தத்தை சி.ஐ.எஸ்.ஆர்-ன் துணை அமைப்பான தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள “மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகம்” (CECRI – CSIR’S CENTRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE, KARAIKUDI, TAMILNADU)மேற்கொண்டுள்ளது

கண்டலா சுப்ரமணிய திலகர் காலமானார்:

 • முன்னால் சுதந்திர போராட்ட தியாகியும், முதல் லோக்சபாவின் உறுப்பினருமான “கண்டாலா சுப்ரமணிய திலகர்”, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரில் காலமானார்
 • உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு பெற்றவர் இவர்

சென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் சூரிய ஆற்றல் ஆலை:

 • சென்னை நகரில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில், “16 மெகாவாட்” உற்பத்தி கொண்ட புதிய சூரிய ஆற்றல் ஆலையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்(Defence Minister Nirmala Sitharaman inaugurated a 16 MW solar ‘PV power plant’established by Bharat Electronics LTD at the Heavy Vehicle Factory in Avadi, Chennai)
 • பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் மின்னணு உற்பத்தி நிறுவனம் இதனை கட்டியுள்ளது

இந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து குறியீடு:

 • மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “இந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து குறியீட்டில்”, புது தில்லி அதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 • பேரிடர் ஏற்படும் காலங்களில் அதிக பாதிப்பினை சந்திக்கக் கூடிய நிலையில் உள்ள மாநிலங்களை, அதன் விவரங்களை கொண்டு இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது
 • அதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மாநிலங்கள் = 1) மகராஷ்டிரா, 2) மேற்கு வங்கம், 3) உத்திரப் பிரதேசம்
 • அதிக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய யூனியன் பிரதேசம் = 1) புதுதில்லி
 • அதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்கள் = 1) பூனே(மகராஷ்டிரா)
 • தமிழகத்திற்கு குறைந்த லாவே பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டண மேலாண்மை விருது 2017:

 • இந்தியாவின்தேசிய கட்டண கழகம்(NPCI – NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA) சார்பில் வழங்கப்படும் “தேசிய கட்டண மேலாண்மை விருது 2017” (NATIONAL PAYMENTS EXCELLENCE AWARD 2017), இந்த ஆண்டு எஸ்.வி.சி கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது
 • ஏ.டி.எம் வலைதள சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது, இந்த வங்கிக்கு வழங்கப்பட்டது

பெண்கள் ஆசிய டி-20 கோப்பை கிரிக்கெட்:

 • மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வங்கதேச மகளிர் அணி, இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது
 • 3 விக்கெட் வித்தியாசத்தில், இந்திய அணியை வீழ்த்தி தந்து முதல் கோப்பையை வங்கதேச மகளிர் அணி வென்றது
 • இக்கோப்பையை இந்தியாவை தவிர வெல்லும் முதல் அணி வங்கதேசம் ஆகும்
 • நடத்திய நாடு = மலேசியா
 • சாம்பியன்= வங்கதேசம்(முதன் முறையாக வெற்றி)
 • பங்கு பெற்ற அணிகள் = 6
 • தொடர் நாயகி விருது = இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்
 • அதிக ரன்கள் = இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்
 • அதிக விக்கெட் = பாகிஸ்தானின் நிதா தார்

பிரெஞ்ச் ஓபன் 2018:

 • “ரோலண்டு காரோஸ்” எனப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது
 • ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான, “களிமண் தரையின் மன்னன்” எனப்படும்ஸ்பெயினின் ரபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தேம் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்
 • ரபேல் நடால் வெல்லும் 11-வதுபிரெஞ்சுஓபன்பட்டம்இதுவாகும்
 • பெண்கள்ஒற்றையர்பிரிவில், உலகின்முதல்நிலைவீராங்கனையானரோமானியாவின் சிமோனா ஹலப், அமெரிக்காவின் சிலோன் ஸ்டீபன்ஸ் அவர்களை தோற்கடித்து தந்து முதல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.
வ.எண் போட்டி வெற்றி தோல்வி
1 ஆண்கள் ஒற்றையர் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தேம்
2 பெண்கள் ஒற்றையர் ரோமானியாவின் சிமோனா ஹலப் அமெரிக்காவின் சிலோன் ஸ்டீபன்ஸ்
3 ஆண்கள் இரட்டையர் ரான்ஸ் நாட்டின் பியரிஹுயுகஸ்ஹெர்பர்ட்மற்றும்நிகோலஸ்மகுட் ஆஸ்திரியாவின் ஆலிவர் மறிக் மற்றும்குரோசியாவின்மேட் பவிக்
4 பெண்கள் இரட்டையர் செக் குடியரசின் பார்பரா மற்றும் கேத்ரினா ஜப்பானின்ஏறி ஹோசுமி மற்றும் மகோதா நினோமா
5 கலப்பு இரட்டையர் தைவானின்லதிஷாசான் மற்றும் குரோசியாவின்இவான் தோடிக் கனடாவின் கேப்ரியலா மற்றும் குரோசியாவின் மேட பவிக்

 

Leave a Comment