TNPSC Daily Current Affairs in Tamil 11 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 11 June 2018

நிபா வைரஸ் காய்ச்சல் – கேரளாவில் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

  • கேரள மாநில அரசு, அம்மாநிலத்தின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பினை தடுக்க உயர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
  • இந்நோய், இந்தியாவில் கேரள மாநிலத்தில் அதிகமாக பாதிப்பினை உருவாக்கி உள்ளது
  • “சுங்கை நிபா” என்ற மலேசிய கிராமத்தில், முதன் முதலில் இந்நோய் கண்டறியப்பட்டது. இந்நோய் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது

ரயில்வேயின் “மடட்” அப்ளிகேசன்:

  • இந்திய ரயில்வே துறை, ரயில் பயணிகளுக்காக “மடட்” (MADAD) என்ற புதிய அப்ளிகேசன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது ரயில் பயணிகளின் குறைகளை தீர்க்க ஏதுவாக கொண்டுவரப்பட்டுள்ளது
  • MADAD = MOBILE APPLICATION FOR DESIRED ASSISTANCE DURING TRAVEL
  • மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இது ஒரு குறைகள் மேலாண்மை திட்டமாகும் (COMPLAINT MANAGEMENT SYSTEM). இது ரயில்வேயின் RPGRAMS (RAILWAY PASSENGER GRIEVANCE REDRESSAL AND MANAGEMENT SYSTEM) என்ற திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது

2-வது சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கான புவி கூர்நோக்கு மற்றும் அறிவியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி:

  • அமெரிக்க மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையேயான “2-வது சமூக மற்றும் பொருளாதார புவி கூர்நோக்கு மற்றும் அறிவியல் 2-வது பயிற்சி பட்டறை” (2ND INDIA – US COLLOQUIUM ON EARTH OBSERVATIONS AND SCIENCES FOR SOCIETY, ECONOMY) நிகழ்ச்சி கோவா மாநிலத்தின் டோனா பாலோ நகரில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது
  • இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 2௦௦ அறிஞர்கள் இதில் கலந்துக் கொண்டனர்

பொது சேவை மையங்களுடன் ரயில்வே ஒப்பந்தம்:

  • ரயில்வே துறையின் சேவைகள் மற்றும் டிக்கெட்டுகள் போன்றவற்றை பொது மக்கள் எளிதில் பெற ஏதுவாக, ரயில்வே அமைச்சகம் பொது சேவை மையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 2.3 லட்சம் பொது சேவை மையங்கள் இதில் இணைக்கப்பட்டு, பொது மக்கள் எளிதில் பயன்பெற உதவும்

இந்தியாவின் முதல் தேசிய காவல் அருங்காட்சியகம்:

  • இந்தியாவின் முதல் தேசிய காவல் அருங்காட்சியகம் (INDIA’S FIRST NATIONAL POLICE MUSEUM), புது தில்லியில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
  • மத்திய மற்றும் மாநில காவல் துறையினரின் வீரம், வரலாறு, ஆடைகள் போன்றவை இங்கு இடம்பெறும்.

44-வது ஜி-7 நாடுகளின் மாநாடு:

  • 44-வது ஜி-7 நாடுகளின் மாநாடு (G-7 SUMMIT), கனடாவின் கியுபெக் நகரில் நடைபெற்றது. மாநாட்டினை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு துவக்கி வைத்தார்
  • 6-வது முறையாக ஜி-7 மாநாட்டினை கனடா நடத்துகிறது
  • ஜி-7 நாடுகளின் 45-வது மாநாடு 2௦19ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

2018 கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பை – இந்தியா வெற்றி:

  • 2018ம் ஆண்டிற்கான கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பையின் (2018 INTERCONTINENTAL FOOTBALL CUP) இறுதி ஆட்டத்தில், இந்திய கால்பந்து அணி கென்யா அணியை 2 – ௦ என்ற கோல் கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது
  • மும்பை நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து, வெற்றிக்கு வழிவகுத்தார்

உலகின் முதல் முப்பரிமான வீடுகள்:

  • உலகின் முதல் முப்பரிமான முறையில் வடிவமைக்கப்படும் வீடுகள் (WORLD’S FIRST HABITABLE ED-PRINTED HOUSE), நெதர்லாந்து நாட்டின் ஐன்தோவன் நகரில் கட்டப்பட்டுள்ளது
  • மிக விரைவாகவும், அதிக பொருட்செலவு இன்றியும், குறைந்த இடவசதியில் மிக நேர்த்தியாக வீடுகளை இம்முறையில் கட்ட இயலும்

உலகின் அதிக சக்தி மிக்க சூப்பர் கணினி – சம்மிட்:

  • உலகில் அதிக சக்தி மிக்க சொப்பர் கணினியை அமெரிக்க உருவாக்கி உள்ளது. “சம்மிட்” (SUMMIT – WORLD’S MOST POWERFUL SUPERCOMPUTER) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சொப்பர் கணினி, ஒரு நொடிக்கு 2௦௦௦௦௦ ட்ரில்லியன் கணக்குகளை செய்து முடிக்கும் திறன் கொண்டது
  • இதுவரை சூப்பர் கணினியாக இருந்த சீனாவின் டியானே கம்ப்யூட்டரை விட இது 2 மடங்கு அதிக வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படும்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.